ஆலயதரிசனம் நம் மனத்திற்கு நிம்மதியையும் ஆறுதலையும் தரக்கூடியது கோவில் எத்தனை தொலைவில் இருந்தாலும் மக்கள் தேடி தேடி செல்கின்றனர் ஆனால் அவர்களுக்கு திருப்தி கிடைகிறதா என்று கேட்டல் இல்லை என்றுதான் சொல்லவேண்டும் சிறு சிறு ஆலயங்களில்கூட பக்கதர்கள் வாங்கி செல்லும் மாலை,பூ, பூஜைக்குரிய பொருட்கள் சாமிக்கு சாத்தப்படுகிறது ஆனால் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் நாம் வாங்கி செல்லும் பொருட்களை முறையாக சேர்ப்பது இல்லை .
நமக்கு நேராகவே தூக்கி வீசுகின்றனர் அது மனதிற்கு கஷ்டத்தை தரக்கூடியதாக இருக்கிறது ஏன் அவ்வாறு செய்கின்றனர் வருகின்ற பக்தர்களுக்கே அதை பிரசாதமாக கொடுக்கலாமே அவர்களும் சந்தோசமாக வாங்கி செல்வார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் நூறு ரூபாய் கொடுப்பவர்களுக்கு தான் கழுத்தில் மாலை போடுகிறார்கள் பத்து ரூபாய் கொடுத்தால் பூ தருகிறார்கள் கடவுளை காண்பதற்கும் காசு பிரசாதம் வாங்குவதற்கும் காசு இந்த கடவுள் கூட காட்சி பொருளாகத்தான் இருக்கிறார்.
சிவ தலங்களில் விஷேசமாக கொண்டாடுவது பிரதோஷம் அதற்கு வரும் பக்தர்கள் உபவாசம் இருந்துதான் வருகிறார்கள் அவர்களுக்கு பொங்கல் புளியோதரை பிரசாதமாக வழங்கலாம் அதை விடுத்து காசுக்கு விற்பனை செய்கின்றனர். அரசு அன்னதானத்திற்கு என்று நிதி ஒதுக்குகிறது அதில் தாராளமாக செய்யலாமே பக்தர்கள் மனநிறைவோடு செல்வார்கள்
சிறு ஆலயங்கள் இதை பின் பற்றுகிறார்கள் பிரசித்தி பெற்ற ஆலயங்களும் பின்பற்றினால் நன்றாக இருக்கும்.

No comments:
Post a Comment