Thursday 18 September 2014

தஞ்சாவூர் சமையல் / இறால் தொக்கு செய்வது எப்படி?

                               இறால் தொக்கு 

தேவையான பொருட்கள்

இறால் - 1/2 கிலோ
சோம்பு - 1 ஸ்பூன்
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 1 (முழு)
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 1 பெரியது
கொத்தமல்லி - சிறிதளவு
கறிவேப்பில்லை - சிறிதளவு
எண்ணெய் - 1/2 கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் -  சிறிதளவு


செய்முறை

         இறாலை கழுவி சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். சோம்பு, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை மிக்ஸி அல்லது அம்மியில் அரைத்துக் கொள்ளவும் (மூன்றையும் பொடியாக நறுக்கியும் சேர்த்துக்கொள்ளலாம்) வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.




         அடுப்பில் வானலியை வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பில்லை, தக்காளி ஆகியவற்றை ஒன்றின் பின் ஒன்றாக வதக்க வேண்டும் அதோடு சுத்தம் செய்த இறாலையும், அரைத்த இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து வதக்க வேண்டும் பிறகு சிறிது தண்ணீர் ஊற்றி (1/2 டம்ளர்) உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும் தண்ணீர் வற்றி தொக்கு பதத்தில் வரும்போது மிளகாய் பொடியை சேர்த்து கிளறி சிறிது நேரத்திற்கு பிறகு அடுப்பில் இருந்து இறக்கி மல்லிதழை தூவி அலங்கரிக்கவும்.


          இப்போது சுவையான இறால் தொக்கு ரெடி இது இட்லிக்கு தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும் சாப்பிட்டு பாருங்கள்.

2 comments:

  1. பசி எடுக்கும் நேரத்தில் படங்களை போட்டு அட்டகாசம் செய்கிறீர்கள் சகோதரி இங்கே நேரம் சரியாக 11:04

    ReplyDelete
    Replies
    1. பசியை தூண்டு வகையில் படத்தை போட்டுவிட்டேனா சகோதரரே அச்சச்சோ...

      Delete