Monday 29 September 2014

பூந்தோட்டம்

                 
                பூந்தோட்டம் பார்க்க அழகானது ரசிக்க அழகனாது நம் மனதை சந்தோஷப்படுத்தக் கூடியது. ஆனால் இன்று எத்தனை இல்லங்கள் பூந்தோட்டம்  வைத்து இருக்கிறது? பூந்தோட்டம் வேண்டாம் எத்தனை பூச்செடிகள் இருக்கிறது? சிலர் வீட்டிற்கு போகிறோம் வீட்டிற்கு வெளியே அழகான பூந்தோட்டத்தை காண்கிறோம் ரசிக்கிறோம் அதன் அருகில் நின்று போட்டோ எடுத்துக்கொள்கிறோம். பூந்தோட்டம் போலவே அவர் வீட்டையும் வைத்திருப்பார் என்று நம்புகிறோம் அவர் வீடு மட்டுமல்ல அந்த பூந்தோட்டம் போலவே அவர் மனதும் இருக்கிறது என்று காண்கிறோம்.



                    சமையல் எப்படி ஒரு கலையோ அதே போல பூந்தோட்டம் வைப்பதும் ஒரு கலைதான். நம் மனது அமைதி இழந்து அவதிப்படும் வேளைகளில் அதன் அருகே செல்லுங்கள் உங்கள் மனது  லேசாகி விடும். 2011 - ல் அண்டை நாட்டில் இருந்து என் நண்பி ஒருவர் வந்தார். வந்த அன்று  ஒரு செடியை நட்டேன் அது மூன்று வருடத்திற்குப் பிறகு அதே மாதம் அதே நாளில் முதல் முறையாக பூத்திருக்கிறது. அவர் இந்த முறை வரவில்லை ஆனால் இந்த செடியை பார்க்கும் போது அவரே நேரில் வந்து சிரிப்பது போன்று தோண்றுகிறது. நாம் வளர்க்கின்ற செடியும் ஒரு குழந்தை போன்றுதான் அதற்கு நீர் ஊற்றினால் கண்ணு குளர்ச்சியை தந்து மகிழ்ச்சியையும் தருகிறது.

இந்த செடி  என் நண்பி இந்தியா வந்த போது வைத்தது

             வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்று அரசாங்கம் சொல்கிறது அதை ஏன் நாம் ஒரு ரசனையோடு செய்யக்கூடாது. வெயில் காலங்களில் வெட்கையை தனிக்க அழகான பூந்தோட்டம் அமையுங்களேன் அடுத்தவர் வீட்டில் இருக்கும் பூந்தோட்டத்தைப் பார்த்து ரசிக்கும் நாம் ஏன் நம் வீட்டில் அதை வளர்க்க கூடாது நம் வீட்டையும் பார்த்து நாலு பேர் பார்த்து ரசித்தால் நமக்கு சந்தோஷம் தானே!


                அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு இது பொருந்தாது ஆனால் மற்றவர்கள் தயங்காமல் செய்யலாமே இது எனக்கு வராது, எனக்கு விருப்பமில்லை, ஆர்வமில்லை என்று சொல்வதெல்லாம் சோம்பேறிகளின் வார்த்தை அவர்கள்தான் இது போன்ற வார்த்தைகளை சொல்வார்கள் இதற்கு என்று நீங்கள் நேரம் ஒதுக்க தேவையில்லை காலை எழுந்தவுடன் பல் விளக்கும் நேரத்தில் தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் நீங்கள்  அங்கே நின்றாலே உங்கள் மனம் புத்துணர்ச்சி பெறும்.




               நீங்கள் அந்த செடிகளை வளர்ப்பதன் மூலம் மண் அரிப்பை தடை செய்கிறீர்கள் புழு, பூச்சி, வண்டு, வண்ணத்து பூச்சி, சிட்டுக்குருவி ஆகியவைகளுக்கு உணவளக்கிறீர்கள் உயிர் கொடுக்கிறீர்கள். இது உங்களை அறியாமல் நீங்கள் செய்யும் ஒரு நல்ல காரியம். வாருங்கள் மரம், செடி, கொடிகளை வளர்ப்போம் மனித நேயத்தை காப்போம்.

4 comments:

  1. பூக்களின் படங்கள் அருமை இவை அனைத்தும் உங்கள் வீட்டில் பூத்தவையா ?

    ReplyDelete
  2. http://kovaikkavi.wordpress.com/2014/09/20/32-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/
    அன்பின் சகோதரி தங்களிற்கு எனது விருதினைப் பகிர்ந்துள்ளேன். தங்கள் குறைந்த் 5 போருக்க இவ்விருதினைக் கொடுக்கலாம்.
    தங்களைப் பற்றி எஐத வேண்டும்.
    இவை தங்கள் வலையழல் செய்யலாம் பதிவைப் பாருங்கள் விளங்கும்.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  3. எங்கள் வீட்டில் பூத்த பூக்கள் தான் இவை

    ReplyDelete
  4. அப்படியா மிக்க மகிழ்ச்சி நன்றி சகோதரி இப்போதே பார்க்கிறேன்

    ReplyDelete