Wednesday 25 February 2015

மும்மூர்த்திகளின் தத்துவம்

            ஆக்கல் - காத்தல் - அழித்தல் இம்மூன்றும் இந்த உலகத்தில் எந்நேரமும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகள். நடப்பது எதுவானாலும் இந்த மூன்று வகைக்குள் அடங்கியே ஆகவேண்டும்.

            இந்த மூன்று சக்திகளையும் மனிதன் உணர்ந்துகொள்ளவே இறைவனை இந்த மூன்று முக்கியமான கிரியைகளின் வடிவமாக நாம் வழிபடுகிறோம்.


           ஆனால் ஆக்க நினைக்கும் குயவன், தான் எதை உருவாக்கப் போகிறோம் என்பதை எண்ணி நிர்ணயித்துக்கொள்ள கற்பனை அறிவு கொண்டவனாக இருக்க வேண்டும். அவன் ஒரு கலைஞன் அதனாலேயே நம்மையெல்லாம் உண்டாக்கும் பிரம்ம தேவனுக்கு, கலைகளின் தேவியான சரஸ்வதி மனைவியாக அமைக்கப்பட்டிருக்கிறாள்.

            கையில் ஒரு காசும் இல்லாத வறுமையில் வாடும் ஏழை, பிறறைக்காப்பாற்ற வேண்டும் என்கிற நல்லெண்ணம் இருந்தாலும் அவனால் எதுவும் செய்ய முடியாது.

           ஆகவே காக்கும் ஒருவன் செல்வங்களின் பின் பலம் உள்ளவான இருக்க வேண்டும். அதனாலேயே நாராயணனுக்கு செல்வங்களை அளிக்கும் லட்சுமி தேவி மனைவியாக அமைந்திருக்கிறாள்.

            அழிக்க முற்படும் ஒருவனுக்கு அசாத்திய பலம் தேவை. ஆயுதங்களைத் தாங்கிய வெற்றி வீராங்கணையின் துணை அவசியம்.

           அதனாலேயே சிவபிரானுக்கு சக்தியின் உருவமான உமாதேவி மனைவியாக அமைந்திருக்கிறாள்.

         இப்படி மூன்று மூர்த்திகள் இருந்தாலும், அவர்களை ஒருவராகவே வழிபடும் மேன்மைமிகு தத்துவத்தை நமது இந்து மதம் காட்டுகிறது. அதுவே ஆசாரியனுக்கு ஆசாரியனான சத்குரு ஸ்ரீ தத்தாத்தி நேயரின் உருவம்.

         அதே போன்று மூன்று தேவைகளின் சக்தியும் மகாசக்தியாக துர்க்கா தேவியிடம் அமைந்திருக்கிறது.

        இதனை நாம் நன்கு புரிந்து கொண்டால் மூன்று மூர்த்திகளின் தாத்பரியத்தைப் புரிந்து கொண்டவர்களாவோம்.

1 comment:

  1. மூன்று மூர்த்திகளின் தாத்பரியம்..

    மிக்க நன்றி சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete