Thursday 19 February 2015

அல்சர் எப்படி வருகிறது?

            நேரத்திற்கு சாப்பிடாததால் தான் அல்சர் வருவதாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அதுதான் இல்லை, நேரத்திற்கு சாப்பிடுபவர்களுக்கு தான் இந்த அல்சரே வருகிறது.

          பசிக்காமலே நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்பதற்காக பசித்தோ, பசிக்காமலோ, அல்லது அதிக உணவோ எடுத்துக்கொள்பவர்களுக்கு தான் இந்த அல்சர் வருகிறது. அந்த உணவு செரிமானம் ஆகாமல் வயிற்றில் தங்கி அது ஒரு கழிவாக மாறி நாளடவில் அது புண்ணாக உருவெடுத்து வலியை கொடுக்கிறது. கடைசியில் கேன்சராகவும் மாறுகிறது.


            சாப்பிடாமல் இருப்பவர்களுக்கு அல்சர் வருகிறது என்றால் நாட்டில் எத்தனையோ பேர் இரு வேளை உணவு கூட இல்லாமல் இருக்கிறார்கள் அவர்களுக்கு அல்லவா இந்த அல்சர் வரவேண்டும்.

           நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்று பரப்பவர்கள் என்றாவது பட்டினியாக இருந்தது உண்டா? பிறகு எப்படி உங்களுக்கு அல்சர் வருகிறது யோசியுங்கள். அந்தக் காலத்தில் இருந்தே வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் விரதம் இருப்பது வழக்கம். ஏன் தெரியுமா? வாரத்தில் ஒரு நாளோ இரண்டு நாளோ விரதம் இருப்பதால் வயிறு சுத்தமாக இருக்கிறது. அரவை மிஷின்கள் ஓய்வு எடுக்கிறது.

            நாம் ஓய்வு இல்லாமல் வேலைப்பார்த்தால், கண்களுக்கு, கால்களுக்கு, கைகளுக்கு என வாரத்திற்கு ஒருநாள் ஓய்வு கொடுக்கிறோம். வருடம் முழுவதும் ஓய்வெடுக்காமல் அரைத்துக்கொண்டே இருக்கிறதே நம் வயிற்றுக்கு ஓய்வு வேண்டாமா?

         சிலரைப் பாருங்கள் நேரத்திற்கு சாப்பிட மாட்டார்கள், சில நாட்களில் மதிய உணவோ அல்லது காலை உணவோ எடுத்துக்கொள்ள மாட்டார்கள் ஆனால் அவர்களுக்கு இந்த அல்சர் வராது. இதுதான் உண்மை.

       நீங்களும் வாரம் ஒரு முறையேனும் வயிற்றைக் காலியாக வையுங்கள் எந்த அல்சரும் உங்களை நெருங்காது.

4 comments:

  1. எந்த காலத்தில் இருக்கிறீர்கள்?
    அல்சர் பாக்டீரியாவால் ஏற்படுகிறது என்பதை உயிரைப்பணயம் வைத்து நிரூபித்த மருத்துவர் பேரி மார்ஷலுக்கு 2005ல் நோபல் பரிசு கிடைத்தபின்னும் மனதில் தோன்றுவதை சொல்வது சரியல்ல.
    http://discovermagazine.com/2010/mar/07-dr-drank-broth-gave-ulcer-solved-medical-mystery


    ReplyDelete
  2. நீங்கள்
    சொல்வது உண்மைதான். அந்த பாக்டீரியா எங்கிருந்து உருவாகிறது? நாம்
    சாப்பிடும் உணவில் இருந்துதானே. அதை தான் நானும் சொல்லியிருக்கிறேன்.
    மனதில் பட்டதை சொல்லவில்லை ஆராய்ந்து சொல்லியிருக்கிறேன்.

    ReplyDelete
  3. நாம்
    சாப்பிடுகின்ற உணவு செரிமானம் ஆகாமல் தங்கினால் அது கழிவுதானே அந்த
    கழிவில் பாக்டீரியா உருவாகதான் செய்யும் முதலில் நான் என்ன
    சொல்லியிருக்கிறேன் என்பதை படித்து பாருங்கள்

    ReplyDelete