Sunday 21 December 2014

தஞ்சாவூர் சமையல் / அப்பம் செய்வது எப்படி

தேவையான பொருட்கள்:

அரிசி : 2கப்
தேங்காய் ஒரு மூடி
வெல்லம் - 2 
ஏலக்காய் - சிறிதளவு
எண்ணெய் - தேவைக்கேற்ப


செய்முறை:-

         
                அரிசியை 2மணி நேரம் ஊரவைத்து கழுவி எடுத்து மிக்ஸியில் போட்டு அதோடு துறுவிய தேங்காய் பொடித்த வெல்லத்தையும் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
ஏலக்காய், (சிறிது உப்பு ஒரு கல் போதும் சுவை கூட்டதான்) சேர்த்து ரொம்ப தண்ணீர் இல்லாமல் இடலி மாவு பதத்தில் வைக்கவும் 2- 3 மணி நேரத்திற்கு பிறகு வானலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பொறித்தெடுக்கவும்.

          (அரைத்த உடனும் ஊற்றலாம். ஆனால் நேரம் கழித்து ஊற்றினால் சட்டியில் ஒட்டாமல் பஞ்சுபோல் மென்மையா உப்பி வரும்) இது திடீரென்று செய்யக்கூடிய எளிமையான பலகாரம் அதிக இனிப்பும் இல்லாமல் சுவையாக இருக்கும்.


10 comments:

  1. அது என்னங்க வெல்லம் 2?

    ReplyDelete
  2. Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி

      Delete
  3. வெல்லம் சர்க்கரை, எனப்படுவது பதனிடப்படாத சர்க்கரை ஆகும். ஆங்கிலத்தில் ஜக்கரி என அழைக்கப்படுகிறது.

    ReplyDelete
  4. அது இல்லைங்க நான் சொல்ல வந்தது. அளவு 2ன்னா எவ்வளவு?

    ReplyDelete
    Replies
    1. இரண்டு நம்பர்ஸ் மேலே படத்தில் இருக்கு பாருங்கள். இனிப்பு அதிகம் தேவையில்லை என்று நினைத்தால் 11/2 கூட குறைத்துக்கொள்ளலாம்.

      Delete
  5. சில
    சமயங்களில் நான் இதை செய்யும் போது பசும்பால் இருந்தால் மாவை கெட்டியாக
    அரைத்துக்கொண்டு 1/2 டம்ளர் சேர்த்துக்கொள்வேன் அது இன்னும் கொஞ்சம்
    சுவையாக இருக்கும்.

    ReplyDelete
  6. ஓக்கே!!! அச்சு வெல்லம் 2
    சரிதானே:-))))

    ReplyDelete
  7. அது என்னங்க வெல்லம் 2?
    athu achchu vellam irandu enru ninikiren

    ReplyDelete
  8. அட படம் போட்டும் தெரியவில்லையா

    ReplyDelete