Sunday 28 December 2014

மகனின் காதலை ஆதரிக்கும் அம்மாக்கள்

              சினிமா தனமான காதல், கொலை, திருட்டு, வாழ்க்கையென பலவகைகளில் நாம் சினிமா உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்தவகையில் அம்மாக்களும் சினிமா தனமாக மாறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியமான விஷயம். இது அவர்களாக தன்னை மாற்றிக்கொண்டார்களா? இல்லை காலத்தின் சூழ்நிலை அவர்களை மாற வைத்ததா? எனக்கு ஒன்று புரியாவில்லை சினிமாவை பார்த்து கெட்ட விஷயங்களில் ஆர்வம் காட்டும் இவர்கள் நல்ல விஷயங்களில் ஏன் ஆர்வம் காட்ட மறுக்கிறார்களோ தெரியவில்லை.

           இப்போதெல்லாம் சினிமாதனமாக தான் எல்லாம் இயங்குகிறது அதில் அம்மாக்களும் இடம் பிடித்து வருகிறார்கள். அம்மா, மகனுக்கு உள்ள நெருக்கம் உறவையும் தாண்டி தோழி என்று எல்லா விஷயங்களையும் பகிர்ந்து வருகிறார்கள். அதே நேரத்தி ஒரு மகன் தன் தாயிடம் காதலையும், காதலியையும் அறிமுகப்படுத்துவதும் அதற்கு துணையாக இருப்பதும், ஆதரிப்பதும் அம்மாக்களுக்கு இப்போது பேஷனாகிவிட்டது.


               இன்று அனேக வீடுகளில் நடப்பது மகன் தன் அம்மாவிடம் சொல்லும் விஷயங்கள்

            "அம்மா இன்னைக்கு பஸ்ல போகும்போது நிறைய பொண்ணுங்க என்னையே பார்த்துச்சும்மா.. என்னைய பார்த்து சிரிக்குதும்மா... நாம சும்மா இருந்தாலும் அதுங்க சும்மா இருக்கவிட மாட்டேங்குதும்மா.." இப்படி மகன் சொன்னவுடன் அம்மாவுக்கு சந்தோஷம் தாங்கமுடியாது உடனே இப்படி சொல்வாங்க

           "நீ அழகன்டா.. எம்புள்ளைக்கு என்ன குறைச்சல்? நீ நடந்து போனாலே ஆயிரம் பொண்ணுங்க உன் பின்னாடி வரும்ன்டா" னு சொல்லி இன்னும் கொஞ்சம் உசுப்பேத்தி விடுவது.

             அடுத்து, "அம்மா இந்த பொண்ணு பேஸ்புக்ல என்கூட 2 மணி வரைக்கும் பேசுதும்மா.."

           அம்மா சொல்ற பதில பாருங்க "ஏய்... சூப்பர் பிகரா இருக்குதுடா இந்த மாதிரி ஒரு பொண்ணை தாண்டா உனக்கு கல்யாணம் பண்ணனும்"

         இந்த மாதிரி உரையாடல்கள் இன்று எல்லோர் வீடுகளில் நடக்கிறது. பஸ்ல தொடங்கி காலேஜ் முடிந்து வீடும் வரை நடந்த விஷயங்களை தன் அம்மாக்களோடு பகிர்ந்து கொள்கிறான். ஒரு நாள் இவள்தான் தன் காதலி என்று அறிமுகப்படுத்துகிறான் வீட்டிற்கும் அழைத்து வருகிறான். அதற்கு அம்மாக்களும் சந்தோஷப்படுகிறார்கள் மகிழ்ந்து சிரிக்கிறார்கள்.

           என்னுடைய கேள்வி அதே நேரத்தில் தன் மகள்பஸ்சில் நடந்தது, கல்லூரியில் நடந்ததை சொல்ல முடியுமா? பேஸ்புக்கில் 2 மணிவை ஷாட் செய்வதை அனுமதிப்பார்களா? இல்லையென்றால் ஏன்? தன்மகன் செய்வதை அனுமதிக்கும் அம்மாக்கள் மகள் செய்வதை அனுமதிக்காதது ஏன்?

            தன் மகனை காதலிப்பதும், தன் மகனோடு ஊர்சுற்றுவதும், தன் மகனோடு 2 மணிவரை ஷாட் செய்வதும் ஒரு பெண்தானே? அதை எப்படி நீங்கள் அனுமதிக்கின்றீர்கள் ஆதரவு அளிக்கின்றீர்கள்? அப்போ அந்த பெண்ணுக்கு உங்கள் மகனோடு ஊர் சுற்றிக்கொண்டு தவறேதும் நடந்துவிட்டால் பரவாயில்லையா? நிறைய அம்மாக்கள் இதுப்பற்றி நினைப்பதும் இல்லை, கவலை கொள்வதும் இல்லை.

              அது யாரோ ஒரு பெண்ணுக்குதானே என்று நினைக்கின்றார்கள். அந்த தவறை தன் மகன்தான் செய்கிறான் என்று கவனிக்க மறுக்கிறார்கள். இந்த மாதிரி அம்மாக்களால்தான் நிறைய மகன்கள் தவறு செய்கிறார்கள், இது முற்றிலும் உண்மை, அதற்கு உதாரணம் ஒன்று செல்கிறேன். எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் இப்படிதான் தன்மகன் செய்வதை ரசிப்பதும், ஆதரிப்பதும், தன் மகன் காதல் திருமணம்தான் செய்ய வேண்டும் என்று அடிக்கடி கூறிவந்தார். அவர் 18 வயதிலே காதலிக்க தொடங்கினார்.

                அந்த பொண்ணு அப்படி சொல்லுதும்மா.. இப்படி சொல்லுதும்மான்னு.. எல்லா விஷயங்களையும் தன் அம்மாவோடு பகிர்ந்து கொண்டார். பலநாள் வீட்டுக்கும் அழைத்து வந்தார். 20 வயதுக்குள்ளே எல்லாமே நடந்து முடிந்து, அடிக்கடி சண்டை வந்தது பிரிந்தார்கள். அவர் இனிமேல் நீங்கள் பார்க்கின்ற பெண்ணைதான் திருமணம் செய்வேன் என்றார்.

          அடுத்து இன்னொரு பெண்ணை காதலித்தார் அதையும் தன் தாயிடம் சொன்னார். அந்த அம்மாவும் அந்த பெண்ணை பார்த்தார் பெண்ணை பிடிக்கவில்லை "என்னடா இந்த பொண்ணை போய் காதலிச்சுருக்கிறே நல்லாவே இல்லை" என சொல்லி சொல்லி 6 மாதத்திலே அந்த காதலும் முடிந்தது. இப்போ அடுத்து எந்த பெண்ணோ..?

            இப்படிதான் பல குடுபங்கள் இருக்கிறது. அம்மாக்காளே தயவு செய்து இந்த விஷயத்தில் நீங்கள் ஒரு ஆசானாக இருங்கள் பிறகு அம்மாவாக இருங்கள். நீங்கள் கொடுக்கும் அனுமதியில்தான் அடுத்தடுத்தென அவர்கள் மாறிக்கொண்டே போகிறார்கள். அவர்கள் தவறு செய்வதற்கு நீங்கள் ஊக்கமளிக்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

           தன் மகனைப் பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும் அவன் நல்லவான என்பது உங்களுக்கு மட்டுமே தெரியும்.

          தன் மகன் செய்வது சரியா? அவன் இதில் உறுதியாக இருப்பானா? என்று சிந்தியுங்கள் அதன்பிறகு அனுமதியுங்கள். உங்களிடம் ஒரு பயம் கலந்த மரியாதையை ஏற்படுத்துங்கள். அப்போதுதான் ஒரு பயம் இருக்கும் தவறு செய்யமாட்டான். தன் தாயை மதிக்காதவனும், பயம் இல்லாதவனும் பெண்கள் விஷயத்தில் தவறு செய்ய தயங்கமாட்டான்.

            அங்கே பெண்களை கேலி செய்கிறார்கள், கிண்டல் செய்கிறார்கள் என்று கேள்விபடுவீர்கள் அதில் உங்கள் செல்ல மகனும் இருக்கிறான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். பாதிக்கப்படும் பெண்களின் பாவத்தில் உங்களுக்கும் பங்கு உள்ளது என்று உணருங்கள். தன் பிள்ளை நல்லவன் என்று கண்மூடி தனமாக நம்புவதால்தான் நிறைய மகன்கள் தவறு செய்கிறார்கள், தவறு செய்துகொண்டிருக்கிறார்கள்.

           "காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுதான்" அதை இது போன்ற விஷயங்களில் காட்டாதீர்கள். தன் மகனால் பாதிக்கப்படும் பெண்ணும், உங்கள் மகள் போன்ற ஒரு பெண்தான் என்பதை உணர்ந்து அனுமதியுங்கள். 25 வயதிற்கு மேல் வருகின்ற காதல்தான் உண்மையான காதல் அதையும் புரிய வைக்க முயற்சி செய்யுங்கள்.

           "அவன் நல்லவானவதும் தீயவனாவதும் அன்னையின் வளர்ப்பினிலே.."

2 comments:

  1. I think you need some treatment. Anyway we have come across 50% crossed (boys level) and going on another 50% way. pl be patient. this is kalikalam...

    ReplyDelete