Monday 15 December 2014

ஆலயத்தில் செய்யக்கூடியது/ செய்யக்கூடாதது


  • கர்ப்ப கிரஹகத்தில் கடவுளுக்கு அலங்காரம் நடக்குகையில் திரையிட்டுயிருப்பார்கள் அச்சமயம் வழிபடுதல் கூடாது. 
  •  சுவாமிக்கும் பலி பீடத்திற்கும் குறுக்கே செல்லக்கூடாது. 
  •  ஆலயத்தில் நண்பர்களையோ, பெரிய மனிதர்களையோ கண்டால் வணங்க கூடாது. இறைவனே மிகப்பெரியவன் ஆலயத்தில் அனைவரும் சமம்.
  •  பிரசாதங்களை ஒருவருக்கொருவர் இட்டுக் கொள்ளுதல் கூடாது. 
  •  சுவாமிகளை தொடுவது, சுவாமிகளின் திருவடிக்கடியில் கற்பூரம் ஏற்றுதல் கூடாது.
  •  கோயில்களில் அர்ச்சகரிடமிருந்து தான் பிரசாதங்களை பெற வேண்டும். நாமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. 
  • பெருவிரலும், மோதிர விரலும் சேர்த்துத் திருநீறு அளிக்க வேண்டும் மற்ற விரல்களை சேர்க்க கூடாது. 
  •  செண்பக மொட்டு தவிர, வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல. 
  •  குடுமியுள்ள தேங்காயை சமமாக உடைத்து, குடுமியை நீக்கிவிட்டு நிவேதனம் செய்ய வேண்டும். 
  • ஒருமுறை இறைவன் திருவடியில் சமர்பிக்கப்பட்ட மலர்களை மீண்டும் எடுத்து பூஜிக்கலாகாது.
  • துலுக்க சாமந்தி பூவை பூஜைக்கு பயன்படுத்த கூடாது. 
  • பவள மல்லி சரஸ்வதிக்கு ஆகாது. 
  • அருகம்புல் அம்பிகைக்கு ஆகாது. 
  • சிவனுக்கு தாழம்பூ ஆகாது. 
  • விநாயகருக்கு துளசி ஆகாது.

2 comments:

  1. கோயில்களில் அர்ச்சகரிடமிருந்து தான் பிரசாதங்களை பெற வேண்டும். நாமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
    தட்டில் போடும் காசை மட்டும் அவர் எடுத்து கொள்வார் உண்டியலில் போட மாட்டார் அப்படிதானே ?

    ReplyDelete
    Replies
    1. தட்டில்
      விழுகின்ற காசு சாமிக்கு இல்லை அந்த ஐயருக்குதான். அதை எப்படி அவர்
      உண்டியலில் போடுவார். சாமிக்கென்று தனி உண்டியல் இருக்கிறதே அதில்தான்
      நீங்கள் போட்டிருக்க வேண்டிருக்க வேண்டும். கர்ப்ப கிரஹத்தில் நாமெல்லாம்
      போய் அர்ச்சனை செய்வதில்லை விக்கிரஹங்களைத் தொட்டு சேவை செய்கின்ற
      பாக்கியம் அவர்களுக்குதான் கிடைத்திருக்கிறது. அதற்காகதான் கடவுளுக்கு
      பணிவிடை செய்கின்ற அவர்களுக்கு நாம் தட்சணை வைக்கிறோம். நீங்கள் சாமிக்கு
      வைக்கிறோம் என்று தவறாக புரிந்துக்கொண்டால் என்ன செய்வது?

      Delete