Friday, 28 November 2014

நெருப்பாற்றில் நீந்தும் பெண்கள்

பெண்களை
தெய்வமென போற்றியவன்- இங்கே
துயிலுரிக்கின்றான்..! 

பெண்ணையும்
பெண்ணின் அங்கங்களையும்
கண்களால் எடைபோடும்
காமூகர்களின் கண்கள்
எப்போது எரிந்து சாம்பலாகும்?


பெண்கள்
சிரித்தால், நடந்தால் 
ஆடினால், ஓடினால்
குனிந்தால் போதைப் பொருளாக
பார்க்கும் ஆண்வர்க்கம்
எப்போது அழியும்..?

பெண்ணின் 
வயிற்றிலிருந்து வந்து
பெண்மையை களங்கப்படுத்தும்
சமூகம் எப்போது ஒழியும்..?

இன்றுவரை
கற்புக்கரசி யாரெனக்கேட்டால் இதிகாசங்களில் பெயர்களைத்தேடும் ஆணினம் தன் தாயையோ தன் தங்கையையோ தன் மனைவியையோ நினைவில் கொள்ளாத மானிடம்?

பெண்களை
காணும் இடங்களில் எல்லாம்
உடலால் மட்டுமல்ல மனதாலும், பார்வையாலும் கற்பழிக்கும் ஆண்கள்-அதனால் கற்பிழந்த பெண்கள் - இங்கே ஏராளம் உண்டு..!

பெண்களை வேசியாக்கும் ஆண்களும்
அங்கே காசுக் கொடுத்து போகும்
ஆண்களும் தன் தாயையும்
தன் தங்கையையும் அந்த இடத்தில்
ஒரு நொடி வைத்துப்பாருங்கள்..!

ஒரு பெண்ணின் பிரசவ
அறையில் இருக்கும்
ஒரு ஆணுக்குதான் தெரியும்
பெண்ணின் மகத்துவம் என்னவென்று..!

இனி எங்காவது
ஒரு பெண்ணின் கற்பு
சிதைக்கப்படுமாயின் இன்னொரு
சுனாமியோ பூகம்பமோ
நிச்சயம் வரும் என்பது உறுதி..!

இந்த சமூகத்தால்
காப்பாற்றப்படும் அவனை அந்த
இயற்கையால் தண்டிக்கப்படும்!

No comments:

Post a Comment