Wednesday, 5 November 2014

யாரோ இவன்

கிழக்கில் தோன்றும்
சூரியன் போல் எழுந்து வந்து
மறைந்து கொள்வானோ..?

கவிதைப் பெண்ணின்
கண்கள் போல்
துறுதுறுப்பானோ..? 

காதல் கொள்ளும்
சந்திரன் போல் அருகில் வந்து
கரைந்து போவானோ..?


இனிக்கும் நெஞ்சில் 
மயக்கும் கீதத்தை
இசைத்து போவானோ..?

துடிக்கும் கண்ணில் 
கனவு விதையை 
விதைத்து போவானோ..?

தேனுறும் புன்னகையை
இதழில்தந்து சிறகை விரித்து
பறந்து செல்வானோ..?

2 comments:

  1. அவன் எப்படியோ
    கவிதை என மனதில் ஓடாது ஒட்டிக் கொண்டது
    மனம் கவர்ந்த கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ரமணி ஐயா அவர்களே தங்களின் வாழ்த்து என் சிந்தையில் மகிழ்ச்சியை தந்தது நன்றி..! நன்றி..!!

      Delete