என் மனம் உனக்கு
விளையாட்டு பொம்மையா ?
வைத்துக்கொள்வதும் தூக்கி
எறிவதுமாக இருக்கிறாயே..!
அது என்ன?
நீ அழும்போதும் மட்டும்
என்னை உன்கூடவே
வைத்துகொள்கிறாய்..?
இந்த சிரிக்கும் பொம்மை
அழுவது உனக்கு
கேட்கவில்லையா..?
அது சரி...
விளையாட்டு பொம்மை
அழுதாலென்ன? சிரித்தாலென்ன?
உனக்கு வேடிக்கை தானே..?
No comments:
Post a Comment