Friday 14 November 2014

கீதை-9

            பரமாத்மா ஆனந்தம, பக்திகாந்தம. அது ஜீவாத்மாவை ஈர்க்கின்றது, எல்லையற்ற ஆனந்தத்தில் ஜீவனை இணைக்கிறது.

           பதின்மூன்று முதல் பதினெட்டு அத்தியாயங்கள்வரை பேசப்படுவது ஞானயோகம. ஞானம் அறிவொளி. அஞ்ஞான இருட்டை அகற்றுவது. ஞான யோகத்தின் மூலம் சாதகன் சித்சொரூபத்தை அடைகின்றான். ஜீவானுபவத்தின் உச்சம் அது.

           'நீயும் நானும் ஒன்று
            நாம் வேறு வேறு அல்ல'
என்பதை உணர்த்துவது.

          வாழ்க்கையின் குறிக்கோள் முக்தி. முக்திக்கும் வழிகாட்டும் கீதை. எத்தனையோ மகான்களும், மேதைகளும் கீதைக்கும் உரையாசிரியர்கள். வரிகள் மாறின, பொருள் மாறவில்லை. உண்மை அப்படியே மாறாதிருக்கிறது.

                      கீதையின் அவசியம்

   
             கீதை- பகவான் உரைத்தது. மனிதர்களின் வார்த்தைக்கே மகாசக்தி உண்டென்கின்ற போது, பகவானின் வார்த்தைக்கு எவ்வளவு சக்தி இருக்க வேண்டும்.

           எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே எளிமையாய்ச் செய்யப்பட்டது.

         கடலைப்போல் அகண்டதாய், ஆழமுடையதாய் இருக்கிறது கீதை. அது உப்புக் கடலல்ல உண்மைக் கடல். நாம் வாழ்க்கை முழுவதும் அள்ளியள்ளி எடுத்தாலும் அத்தனையும் கைக்கு வராது.

                 கடலளவு கடலளவுதான்
                 கையளவு கையளவுதான.

No comments:

Post a Comment