-தொடர்ச்சி
பஸ் ஸ்டாண்டை நெருங்கியதும் ஜன்னல் வழியாக நிர்மலாவைத் தேடினான் கண்ணன். நிர்மலா நகத்தை கடித்து துப்புவதும், கடிகாரத்தை பார்ப்பதுமாக இருந்தால் அவள் கோபத்தில் இருக்கிறாள் என்பதை சொல்லாமல் சொல்லியது போய் சமாதானம் செய்ய வேண்டும் என நினைத்தப்படி பஸ்சை விட்டு இறங்கி நிர்மலாவிடம் சென்றான்.
"என்னங்க இப்படி லேட் பண்ணிட்டிங்க கொஞ்சம் சீக்கிரம் வரக்கூடாதா?"
"என்ன செல்லம் பண்றது கிளம்பிதானே வரமுடியும் அம்மா ஒரு வேலை சொல்லிட்டாங்க" "சரி சரி வாங்க பஸ் நிக்கிது" இருவரும் கொடைக்கானல் பஸ்சில் இடம் பார்த்து ஏறி அமர்ந்தனர். நிர்மலாதான் பேச்சை ஆரம்பித்தாள். "என்னங்க நாம மேரேஜ்னு பொய் சொல்லிட்டு கிளம்பி வந்துட்டோம் அவங்களும் நம்பிட்டாங்க ஆனாலும் பயமா இருக்குங்க"
"சரி அதவிடு, என்றவன் அவளின் கைப்பிடித்து தன் கைக்குள் வைத்துக்கொண்டு "இப்ப அதுவா முக்கியம் ஜாலியா வேற ஏதாவது பேசுவோம்" என்றான்.
"இல்லங்க எங்கப்பாவுக்கு நம்ம விஷயம் தெரிஞ்சு போச்சுன்னு நினைக்கிறேன். மதுரையில் இருக்கிற எங்க அத்தை பையனை கட்டிக்கச்சொல்லி வர்புறுத்துறாங்க நேத்து கூட என்னை வந்து பார்த்துட்டு போனாங்க.
நம்ம காதலை ஏத்துக்கமாட்டாங்க ஏத்துக்கலன்னா நேரா உங்க வீட்டுக்கு வந்திடுவேன்.
"ஏய்.. லூசு.. எங்கம்மா ஒத்துப்பாங்கதான் ஆனால் இப்ப சரியான நேரமா இது எங்கப்பா என்ன சொல்வாரோ தெரியல"
"இல்லங்க உங்கப்பா அம்மாவை நான் சரி பண்ணிடுவேன் ஆனா உங்க தங்கச்சிக்குதான் கொஞ்சம் பயமா இருக்கு என்றாள் பயந்தவாரே" இப்படியே பேசிக்கொண்டே அப்டி இப்டி சில்மிஷமும் செய்து கொண்டே தூங்கி போனார்கள்.
ட்ரிங்... ட்ரிங்... ட்ரிங்... "ஏய் அனிதா டிவி சவுண்டை குறை என்றபடி போனை எடுத்தாள் ராசாத்தி.
"ஹலோ... யாரு"
"நான் தான் மேடம் கண்ணனோட சார் பேசுறேன்."
"வணக்கம் சார் நல்லா இருக்குறீங்களா?
நல்லா இருக்கேன் கண்ணன் எங்கம்மா தூங்குறானா?"
"என்ன சார் சொல்றீங்க உங்க காலேஜ்ல படிக்கிற பையனோட அக்காவுக்கு கல்யாணம்னு சொல்லிட்டு போனான் சார் உங்களுக்குத் தெரியாதா?"
"என்ன மேடம் சொல்றீங்க யாருக்கு கல்யாணம் அப்படியெல்லாம் இல்லையே சரி கண்ணன் வந்தா நான் கால் பண்ணினதா சொல்லுங்க சரிம்மா நான் வைக்கிறேன்"
ராசாத்தி போனை வைத்தவள் "எங்க போய் தொலைஞ்சான் இந்த பய... எங்கிட்ட ஒரு உண்மையும் சொல்லமாட்டேங்குறானே வரட்டும் அவனை என்ன செய்யுறேன் பாரு..." பிபி ஏற கத்தினாள்.
"சரி விடுங்கம்மா... அண்ணன் வீட்டுக்கு வரதானே போகுது அப்ப கேட்டுக்கலாம் நீங்க வீணா டென்ஷன் ஆகாதிங்க" எனக் கூறிவிட்டு டிவியை பார்க்கத் தொடங்கினாள் அனிதா.
ராசாத்திக்கு மனம் சமாதானம் ஆகவில்லை ஏதேதோ மனம் குழம்பி போய் கவலையோடு படுத்தாள்.
"என்னங்க அந்த ப்ளவர பாருங்களேன் எவ்வளவு அழகா இருக்கு" என்றாள் நிர்மலா கண்ணன்
"ஆமான்டி உன்னமாதிரி ரொம்ப அழகா இருக்கு"
"ஆமா இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல இத்தனை நாளா காதலிக்கிறீங்க ஒரு மல்லியப்பூ வாங்கி தந்துயிருக்குறீங்களா?"
"இதோ வாங்கி தர்றேன்" என்றவன் கொஞ்ச தூரம் சென்று மல்லியப்பூ வாங்கி வந்து அவளின் தலையில் வைத்தான். அவன் அவள் தலையில் அந்த பூவை வைத்தவுடன் அவள் அப்படியே சிலிர்த்து நின்றாள்... அந்த நேரத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டான். இருவரும் அப்படியே கொஞ்ச நேரம் செயல் இழந்து நின்றனர். கடைசியில் அவள்தான் சுதாரித்துக் கொண்டு சீ... போங்க... யாராவது பார்த்த என்ன நினைப்பாங்க"
"யார் பார்த்தா என்ன? என்னோட காதலிக்கு நாளை மனைவி ஆகப்போறவளுக்கு முத்தம் கூட குடுக்க கூடாதா?"
"சரி சரி அலையாதிங்க நாம இன்னைக்கு ஊருக்கு போகனும் ஞாபகம் இருக்கா...?"
"ஆமால்ல சுத்தமா மறந்து போச்சு எனக்கு வீட்டுக்கு போகவே பிடிக்கல நிம்மி உன் கூடவே இருக்கனும் போல தோணுது"
"இருக்கலாம்.. இருக்கலாம்.. உங்க ஆசை சீக்கிரம் நிறைவேறும்" என்று சிரித்தாள் பிறகு சிறிது நேரம் அங்குமிங்கும் சுற்றி விதவிதமாக போட்டோ எடுத்துவிட்டு லாட்ஸுக்கு வந்து ரூமை காலிசெய்துவிட்டு இருவரும் ஊருக்கு கிளம்ப தயாராயினர்.
-தொடரும்

No comments:
Post a Comment