Friday, 14 November 2014

¤முகநூல்¤ சிறுகதை

         "ஏய்... பவித்ரா மணி என்ன? அம்மா அதட்டலாக கேட்டாள்.

         "மணி 12 உங்களுக்கு மணி பார்க்கத் தெரியதா?"

         "அது எனக்குத் தெரியும் மணி 12 ஆகுது தூங்காம அப்படி என்னடி பேஸ்புக்ல பார்த்துட்டு இருக்க"

          "ஒரு ட்ராயிங் போட்டேன் ஒரு ஸ்டெட்டஸ் போட்டேன் லைக்கும், கமான்ஸ்ம் போட்டு இருக்காங்க அதான் தேங்க்ஸ்னு ரிப்ளே பண்ணிட்டு இருக்கேன்"

          "ஏன்டி உனக்கு அறிவு இருக்கா எப்ப பாரு பேஸ்புக் பேஸ்புக்" "நீங்களும் இதுல அக்கவுண்ட் வைச்சு பாருங்க அப்றம் இப்டி சொல்லமாட்டிங்க. நான் ஒரு கருத்து சொன்னா நூறு லைக் விழும் ஐம்பது கமான்ஸ் விழும் இதெல்லாம் உங்ககிட்ட சொன்னா நீங்க கண்டுக்கவே மாட்டிங்க அதனாலதான் பேஸ்புக் போறேன் இது ஒரு தனி உலகம்மா இதுல விழுந்துட்டா திரும்பி வர மனசே வராது. இதுல தான் அம்பானிக்கும் ப்ரண்ட் ரிக்ஹொஸ்ட் கொடுக்கலாம்."

          "ஏதோ எக்ஸாம் இருக்குன்னு அப்ளிக்கேஷன் போட்டியே ஏதாவது படிச்சியா? முதல்ல இந்த நெட்கார்டு போட்டு பார்க்கிறீயே அது உன்னோட காசு இல்ல முதல்ல நீ சொந்த கால்ள நில்லு அதுக்கப்புறம் உன் சொந்த கருத்தைப் போடு உனக்கே சொந்த காலில் நிக்க தகுதி இல்லாதப்ப நீ மத்தவங்களுக்கு எப்படி கருத்து சொல்வ.


           பேஸ்புக்ல உனக்கு ஐநூறு ப்ரண்ஸ் இருப்பாங்களா அவங்களுக்கு மட்டும்தான் நீ சொல்ற கருத்து போய் சேரும் நீ எழுதுற கவிதை, கட்டுரை, கதை எல்லாம் பத்திரிக்கைக்கு அனுப்பினால் பணமும் கிடைக்கும் பாராட்டும் கிடைக்கும். அது எத்தனை பிரதி விற்பனை ஆகுதோ அத்தனை பேருக்கும் அது போய் சேரும். அதைவிட்டுட்டு பேஸ்புக்கே கதின்னு கிடக்கிற உன் திறமையை வளர்த்துக்க அதே நேரத்தில் ஒரு நல்ல வேலைய தேடிக்க அதுதான் உன் வாழ்க்கைக்கு நல்லது.

           அம்மாவின் பேச்சில் உண்மை இருப்பதை உணர்ந்த பவித்ரா செல்போனை அணைத்துவிட்டு தூங்கிபோனாள்.

           மறுநாள் வேலைக்கு ட்ரை பண்ண வேண்டும் என்ற முடிவோடு.

                               //முற்றும்//

No comments:

Post a Comment