கடவுள்
நம் பக்கம் இருந்தால் பிரதிகூலங்களும் அனுகூலமாகிவிடும. கடவுள் நம் பக்கம்
இல்லை என்றால் வேறு எந்த அனுகூலங்களை நாம் பெற்றிருப்பினும் அவை நமக்கு
பயன்படாது. போருக்கஞ்சாத சுத்தவீரன் அர்ச்சுனன் ஆனால் நடக்கவிருந்த பாரதப்
போரிலோ அவன் துணிவை இழக்கவில்லை என்றாலும் சொல்லமாட்டத கலக்கத்தில்
இருந்தான். களத்தில் பாட்டனார் பீஷ்மரையும், குருவான துரோணரையும்
தாயாதியரையும் எதிர்த்துப் போரிட வேண்டிய நிலைக்குத் தாம் தள்ளப்பட்டமோ
என்பதால் எழுந்த கலக்கம் அது. தன் கையால் அவர்கள் வீழ்ந்துபட நேருமே
என்றெண்ணி வேதனைப்பட்டான். பிதாமகர் பீஷ்மர் தொட்டு உறவுகளையெல்லாம்
தொலைத்து நாம் சௌகரியங்களைத் தேடிக்கொள்ள வேண்டுமா அப்படியொரு போர் அவசியமா
என்று யோசித்தான்.
சொந்தபந்தங்கள் சூழ்ந்திருக்க சொத்து சுகங்களை அனுபவிக்கின்ற மகிழ்ச்சி அவர்களை கொன்று அதன் மூலம் பெற்று அனுபவிப்பதில் ஏது? மனம் கூசியது பார்த்திபனுக்கு கையில் ஏந்திய வில்லைக் காலடியில் போடுகிறான் விரக்தியுடன் சுத்த வீரர்கள் அப்படிதான் போரின் நுணுக்கங்களைப் போலவே மற்ற நெறிகளையும் கவனமுடன் ஆராய்வார்கள். தர்மத்துக்குப் பழுதேற்பட்டு விடக்கூடாது என்பதில்அக்கறையாயிருப்பார்கள்.
சொந்த மனிதர்களுக்கெதிராய் போர் செய்வதில் எந்த நியாயமும் இருப்பதாய்த் தெரியவில்லை அர்ச்சுனுக்கு. அர்ச்சுனா நீ போர்புரியத் தயங்குவது புறங்காட்டி ஓடுவதற்குச் சமம். நீ பின்வாங்கினால் அதர்மத்திடம் புறங்காட்டிச் செல்வதாகத்தான் அர்த்தம் என்று கண்ணன் பேசுகிறான்.
போர்களத்தில் வைத்து கண்ணன் உரைத்ததெல்லாம் பாண்டவ வீரனுக்கு மட்டுமின்றி உலகத்தின் ஒவ்வொரு பாமரனுக்கும் பொருந்தும்.
-தொடரும்

No comments:
Post a Comment