Thursday, 27 November 2014

பிஞ்சிலே பழுத்த இளம் பிஞ்சுகள்..! சிறுகதை

         "அம்மா... அம்மா... " என்று அழைத்தபடி அங்கிருந்த ஷேரில் அமர்ந்தான் கண்ணன்.

       "என்ன சொல்லு எனக்கு வேலையிருக்கு" என்றபடி கிச்சனில் இருந்து வெளியே வந்தாள் கண்ணனின் அம்மா ராசாத்தி.

       "எங்க கலேஜ்ல படிக்கிற ரமேஷ் அக்காவுக்கு மேரேஜ் என்னை கூப்பிட்டுருக்கான் நானும் போகனும்மா..." என்றான் மெல்ல.

        "யாருடா அது அன்னைக்கு போன்ல பேசினானே அவனா?"

        "இல்லம்மா இவன் வேற என்னம்மா நான் போகட்டுமா..."

         "சரி.. சரி.. போகலாம் அதுக்கு முன்னாடி கடையில போய் சிலிண்டரை மாத்தி வைச்சுட்டு போ டேட் முடிஞ்சிட்டு அப்புறம் தீர்ந்து போச்சுன்னா தரமாட்டான்.."


          "என்னம்மா நீங்க " என்று இழுத்தான் 

          "என்னடா... வாங்கிவச்சிட்டு போறதுன்னா போ... இல்லன்னா நீ போக வேண்டாம்" என்றாள் கோபத்துடன்.

         "சரி வாங்கி தொலைக்கிறேன் ஏதாவது கேட்டா ஒரு வேலை சொல்வீங்க என்று எரிச்சலோடு கூறிவிட்டு வீட்டுக்கு பின்புறம் சென்று செல்லை எடுத்து டயல் செய்தான். "ஹலோ.. மாப்புள்ள என்னடா நல்லா இருக்கியா..?"

          ஏய் பேசுடா நான்தாண்டா பேசுறேன்..."

         "என்னங்க அம்மாகிட்ட பர்மிஷன் கேட்டுட்டிங்களா அம்மா என்ன சொன்னாங்க..." கிசுகிசுப்பாக கேட்டாள் நிம்மி என்ற நிர்மலா.

         "ம்... கேட்டாச்சுடா.. போக சொல்லிட்டாங்க நாளை நான் சொன்ன இடத்துக்கு வந்திடு சரியா"

        "சரி நான் வந்துர்றேன் அம்மா எதுவும் சந்தேகப்படலையே"

        "இல்ல.. இல்ல.. சந்தேகம் வரல"

        "சரிடா நாளை நேரில் சந்திப்போம் இப்ப வைக்கவா?"

        "ஏய்.. கொஞ்சம் இரு நான்தான் அம்மாகிட்ட பர்மிஷன் வாங்கிட்டேனே அதுக்கு பரிசா எனக்கு ஒன்னு தந்தா என்ன"

        "ம்..கூம்.. அதெல்லாம் கிடையாது நான் வைக்கிறேன்"

        "ரொம்பதான் பிகுபண்றே நாளைக்கு வச்சுகிறேன்டி உனக்கு" என்றபடி செல்லை அணைத்தான் கண்ணன்.

        கண்ணனும், நிர்மலாவும் காதலர்கள் நிர்மலா அரசு கலைஅறிவியல் கல்லூரியில் பி.ஏ., முதலாமாண்டு படிக்கின்றாள். கண்ணன் கேட்டரிங் கலேஜில் முதலமாண்டு படிக்கிறான். கண்ணனின் பெற்றோர்கள் காதல் திருமணம் புரிந்தவர்கள் ஆதலால் இவன் பக்கம் எதிர்ப்பு இல்லை ஆனால் தன் மகன் இந்த வயசிலே காதலில் சிக்கி விட்டானே என்ற கவலை அவனின் பெற்றோருக்கு உண்டு சில நேரங்களில் எரிச்சலாய் திட்டுவதும் உண்டு.

            கண்ணன் பெரிய அழகு ஒன்றுமில்லை தனுஷ்போல அதே ஒட்டிய கன்னம், ஒல்லியான தேகம், கறுப்பு தோற்றம் ஆனால் நிர்மலா நல்ல நிறம், நல்ல அழகு, நல்ல வசதி இருவரும் ஒரே பஸ்சில்தான் காலேஜ் போவது வழக்கம் அப்போ ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறிவிட்டது.

             மறுநாள் காலை "அம்மா நான் போயிட்டு வர்றேன்மா"

          "எல்லாம் எடுத்துட்டியா?"

            "ம் எடுத்துட்டேன்மா.. இன்னும் ஒரு நுறுரூபா தாம்மா"

        "ஏய் நேத்துதானே ஐநூறு ரூபா கொடுத்தேன் போதும் போ"

       "என்னம்மா நீங்க ரெண்டுநாள் தங்குறேன் அப்றம் கிப்டு வேற வாங்கனும்"

        "இங்கபாரு அதெல்லாம் எனக்குத் தெரியாது ஒம்பிரண்ட்க்கு கிப்டு வாங்கு வாங்கமா போ எனக்குத் தெரியாது சரி ஐம்பது ரூபா கொடு நூறுரூபா தர்றேன்"

       "என்னம்மா" என முனங்கியபடி ஐம்பது ரூபாய் கொடுத்துவிட்டு நூறு ரூபாய் வாங்கிகொண்டு பை சொல்லிவிட்டு அவசரமாக கிளம்பினான் கண்ணன். அங்கே பஸ் ஸ்டாண்டில் வெகு நேரமாக காத்துக் கொண்டிருந்தாள் நிர்மலா.

                                                     -தொடரும்

2 comments:

  1. சுவாரஸ்யமானத் துவக்கம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துகளுக்கும், தங்கள் வருகைக்கும் எனது நன்றிகள்

      Delete