சிறுவயது முதல் எனக்கொரு ஆசை உண்டு அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்... வகுப்பு 1ல் இருந்து 5 வரை படிக்கின்ற காலத்தில் வீட்டிற்கு எதிரே இருக்கிற தோட்டத்தில் பச்சை மிளகாய், தக்காளி, வெண்டைக்காய், கத்தரிக்காய் ஆகியவற்றை விதையிட்டு நாளொரு வண்ணமாய் அதை ரசித்து ரசித்து ஆடு, கோழி தீண்டா வண்ணம் பாதுகாத்து பள்ளி முடிந்து வந்ததும் அது எப்படி இருக்கிறது என்று ஓடிச்சென்று பார்த்துவிட்டுதான் வீட்டுக்குள் செல்வது வழக்கம்....
என் எண்ணச் சிதறல்கள் சிந்தனைச் சிறகுகளாக விண்ணில் பறக்க விடுகிறேன் ஏனெனில் சிறகில்லா சிறுபறவை நான்..!
- ஆன்மீகம் (36)
- இலக்கியம் (9)
- இலங்கை வானொலியின் குரல் (9)
- கட்டுரை (106)
- கவிதை (153)
- சிறுகதை (20)
- தஞ்சாவூர் ஸ்பெஷல் சமையல் (43)
- படக் கவிதைகள் (12)
- பயணக்கட்டுரை (16)
- மருத்துவம் (25)
Monday, 29 May 2017
Thursday, 25 May 2017
முதுமையும் வறுமையும்
நண்பியின் ஊரில் திருவிழா நான் வந்தே ஆகவேண்டும் என்று கட்டாய அழைப்பு வேறு வழியின்றி சென்றிருந்தேன்... அதாவது இந்த அன்பு என்ற பெயரில் கொல்வார்கள் தெரியுமா அந்த மாதிரி. என் நண்பியின் வீட்டிற்குள் சென்றேன் அவர் வாயெல்லாம் பல்லாக வந்து என்னை "குட்டிமா...." என கைகளைப் பிடித்து வரவேற்றார். என்னை குட்டிமா என்றுதான் அன்போடு அழைப்பார். அங்கே இருந்த கட்டிலில் அமர வைத்து தண்ணீர் கொடுத்து உபசரித்தார். அவரின் பிள்ளைகள் சித்தி... எப்படி இருக்கின்றீர்கள் என்று ஓடி வந்து விசாரித்தார்கள்.. அப்போது எனது அருகில் ஒரு அம்மா வாட்ட சாட்டமாக கம்பீரமாக உட்கார்ந்திருந்தார். ஒரு தெனாவெட்டு, திமிர் என்பார்களே அந்த மாதிரி. எனது நண்பி அவரை கைட்டி "இவங்க தான் பாக்யத்தம்மாள் ... நீ இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்டு இருப்பே இவங்க நம்ம ஊர்தான் இப்ப திருச்சியில் வேலை செய்யுறாங்க இரண்டு பையன் ஒரு மகள் "என்று அறிமுகம் செய்தார். அந்தம்மா என்னைப் பார்த்து சாதாரணமா ஒரு புன்னைகை செய்தார் ஏனோ அவரின் புன்னகையில் ஒரு அலட்சியம் தெரிந்தது. அப்படியே என்னைப் பற்றி யும் சொன்னார் என் நண்பி "நீங்களும் ரேடியோவில் இவபேரை கேட்டு இருப்பிங்க இவளும் கவர்மென்ட் ஆபிஸ்லதான் வொர்க் பண்றா.. ஆனால் கல்யாணமே வேண்டாம்னு சொல்றா நான் எவ்வளவோ சொல்லிப்பார்த்திட்டேன் கேட்கவே மாட்டேங்கிறா.. நீங்களாவது இவளுக்கு புத்தி சொல்லுங்கம்மா " என்று சிரித்தப்படி என்னைப்பார்த்தார்.
Friday, 19 May 2017
உனதன்பில் நான் தொலைந்தேன்
நட்பு என்ற ஒன்று இல்லை என்றால் இந்த உலகத்தில் யாரும் மன நிம்மதியோடு இருக்க முடியாது. வீட்டில் பிரச்சினை, அலுவலகத்தில் பிரச்சினை, செல்லும் இடங்களில் பிரச்சினை என்றால் நாம் ஆறுதல் தேடி செல்கின்ற ஒரு இடம் நட்பு. அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கையோடு வசிப்பவரும் சரி. கணவன், குழந்தைகள் என்று வசிப்பவர்களும் சரி தனக்கு ஒரு பிரச்சினை என்றால் அவர்கள் நாடி செல்வது நட்பிடம் மட்டுமே...
Tuesday, 28 February 2017
விருந்து ம ரு ந்து
இந்த உலகத்திலே மனசு நிறைவதும் வயிறு நிறைவதும் சாப்பாட்டில் மட்டும் தாங்க முடியும். அந்த சாப்பாடு ருசியா இருந்தால் நமக்கு தேவாமிர்தம் அதுவே ருசியில்லாமல் இருந்தால் ஆழகால விஷம் தாங்க.... சில பேர் பசிக்காக சாப்பிடுவாங்க இருக்காங்க நானெல்லாம் ருசிக்காக சாப்பிடுற ஆளுங்க. நான் நல்லா சமைப்பேன்னு சொல்ல மாட்டேன் ஆனால் நான் சமைச்சதே நல்லா இல்லன்னா சாப்பிட மாட்டேன்...
Sunday, 12 February 2017
அடைக்கோழி
பகுதி (2) - தொடர்ச்சி
இந்த மாதிரி பெண்களை ஏன் நான் அடிக்கடி சந்திக்கிறேன் என்று தெரியவில்லை. பிச்சை எடுக்கும் பாட்டி முதல் பேருந்தில் பயணம் செய்யும் பெண்ணுவரை சும்மா பார்த்து சிரித்தால் போதும் அப்படியே ஆதி முதல் அந்தம் வரை என்னிடம் கொட்டி விடுகிறார்கள். நான் இவர்களிடம் கேட்டேனா இல்லையே பிறகு ஏன் என்னிடம் வந்து சொல்கிறார்கள் அவர்களைப்பார்த்து சிரித்தது ஒரு குற்றமா...? பஸ் பயணத்தில் இது போன்று நிறைய அனுபவம் உண்டு. எங்க ஆபிஸ்ல அறைய சுத்தம் செய்கிற ஒரு அம்மா இருக்கிறார்கள் நான் அவர்களை அக்கா என்றுதான் அழைப்பேன். ஒரு நாள் யாரும் இல்லாதபோது ரொம்ப நாளா உங்கிட்ட மனசு விட்டு பேசனும்னு தோனுச்சு பேசலாமா என்றார். நானும் சொல்லுங்கள் என்றேன். அவர் சிறு பிள்ளை முதல் திருமணம் முடித்து, குழந்தை பெற்று அதை கஷ்டப்பட்டு படிக்க வைத்து அந்த மகளுக்கும் திருமணம் முடித்து குழந்தை பிறந்தது வரை ஒன்று விடாமல் சொன்னார். அதாவது ஒரு வேளை சோற்றுக்கு நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் இப்ப எப்படி இருக்கிறேன் என்று அவர் மன ஆதங்கத்தை கொட்டினார். மேலும் சொன்னார் என்னுடைய கணவர் வேலை செய்கிறார் அதை வைத்துதான் என் பிள்ளைகளை பொறியியல் கல்லூரி வரை படிக்க வைத்து பதினைந்து சவரன் நகைப்போட்டு கல்யாணம் முடிச்சேன்னு நினைப்பாங்க ஆனால் அதுதான் இல்லை. என்னுடைய குழந்தைகள் பிறந்த பிறகு அவர் வேலைக்கு போவதையே விட்டுவிட்டார். வேற வழியில்லாமல் அப்பதான் முதல் முறையா வெளி உலகத்தை பார்க்கிறேன் குழந்தைக்கு ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட அந்த ஆளால் முடியாத போது நாம் வீட்டில் உட்கார்ந்து எந்த பயனும் இல்லை என்று ஒரு கம்பெனியில் கூட்டுற வேலையில் சேர்ந்து என் பிள்ளைகளை படிக்க வைத்தேன் நல்ல முறையில் திருமணமும் செய்து வைத்தேன். இதுவரை யாராவது உங்க வீட்டுக்காரர் என்ன செய்கிறார் என்று கேட்டால் அவர் மெக்கானிக்கா இருக்கிறார் என்று சொல்கிறேன். அவர் மரியாதை இதுவரை காப்பாற்றி வருகிறேன். இதுவரைக்கும் அது யாருக்குமே தெரியாது ஆனால் உங்களை பார்த்ததும் உண்மையை சொல்லனும்னு என் மனசுக்கு தோணுச்சு இத்தனை வருடங்களாக அழுத்திய மனபாரம் தீரந்தது போல் இருக்குன்னு கண்ணீர் சிந்துகிறார். நான் திகைத்து போய் உட்கார்ந்து இருக்கிறேன் எனக்கும் துக்கம் தொண்டையயை அடைக்கிறது.வழித்தவறி ஆடுகள்
பகுதி- (1)
இந்த கட்டுரையில் என் மனதை பாதித்த சில நிகழ்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். சிலருக்கு இந்த பதிவுகள் பிடிக்கலாம் பிடிக்காமலும் போகலாம் ஆனால் உண்மயை புரிந்து கொண்டால் போதும். உண்மை எப்போதுமே கசக்கும் ஏனெனில் அது நம்மை இனம் காட்டுகிறது என்பதால். சரி விஷயத்திற்கு வருகிறேன் நான் சிறுவயது முதல் இன்று பார்த்தவரை பாதிக்கப்பட்ட பெண்களைப் பற்றிய சிறு கட்டுரை இது நடுநிலைமிக்க ஆண்கள், பெண்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையோடு இதை எழுதுகிறேன்.
Friday, 10 February 2017
தமிழ்நாட்டில் எது குற்றம்?
ஜெயலலிதாவை 75 நாட்கள் யாரையும் பார்க்கவிடாது வைத்திருந்தது குற்றமில்லை...
Friday, 27 January 2017
கோக்கும் பெப்சியும் வேண்டா ம்
வணக்கம் நட்புக்களே....
நான் வெளிநாட்டில் உற்பத்தியாகும் எந்த பொருளையும் பயன்படுத்துவதில்லை. கோக், பெப்சி, போன்ற குளிர்பானங்களை நான் தொட்டு கூட பார்ப்பதில்லை. இன்று வரை கடலை எண்ணெய்யில் தான் சமையல் செய்கிறேன். பீட்சா, பார்க்ஹர் எதுவும் சாப்பிட்டதில்லை. காய்கரி சந்தையில்தான் காய்கரிகறி வாங்குகிறேன். குளிரூட்டும் அறையில் எந்த கடையிலும் நான் பொருட்கள் வாங்குவதில்லை. ஏனெனில் அவைகள் எல்லாம் வெகுநாட்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு அதில் உள்ள நல்ல சத்துக்கள் போய்விடுகிறது. அதனால் நான் அதை தவிர்த்து வருகிறேன். நான் சிறுவயதில் என்ன சாப்பிட்டேனோ அதைதான் இப்போதும் சாப்பிடுகிறேன்.
நான் வெளிநாட்டில் உற்பத்தியாகும் எந்த பொருளையும் பயன்படுத்துவதில்லை. கோக், பெப்சி, போன்ற குளிர்பானங்களை நான் தொட்டு கூட பார்ப்பதில்லை. இன்று வரை கடலை எண்ணெய்யில் தான் சமையல் செய்கிறேன். பீட்சா, பார்க்ஹர் எதுவும் சாப்பிட்டதில்லை. காய்கரி சந்தையில்தான் காய்கரிகறி வாங்குகிறேன். குளிரூட்டும் அறையில் எந்த கடையிலும் நான் பொருட்கள் வாங்குவதில்லை. ஏனெனில் அவைகள் எல்லாம் வெகுநாட்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு அதில் உள்ள நல்ல சத்துக்கள் போய்விடுகிறது. அதனால் நான் அதை தவிர்த்து வருகிறேன். நான் சிறுவயதில் என்ன சாப்பிட்டேனோ அதைதான் இப்போதும் சாப்பிடுகிறேன்.
Sunday, 22 January 2017
எது மிருகவதை...?
அன்று இந்த காளை இல்லை என்றால் விவசாயம் இல்லை. மாட்டை ஏர்பூட்டி உழுதால் தான் நாற்று நட்டு, கதிர் அறுத்து நாமெல்லாம் உட்கார்ந்து சோறு திங்க முடியும்... அப்ப தெரியவில்லையா மாட்டை வதை செய்கிறோம் என்று, நெல்லை சாக்கில் கட்டி அந்த காலத்தில் மாட்டு வண்டியில் தானே ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல பயன்பட்டது அப்ப தெரியவில்லையா மாட்டை வதை செய்கிறோம் என்று...
Saturday, 21 January 2017
பெரும் இளைஞர்கள் கூட்டம் மெ ரினாவில்
ஒருநாளில் முடிய வேண்டிய ஒரு விஷயத்தை ஒரு வாரமா நீடித்த பெருமை மத்திய அரசை சாரும்... மெரினாவில் நுழைந்த போது ஒரு கோவிலுக்குள் நுழைந்த ஒரு சந்தோஷம்... கும்பல் கும்பலாக இளைஞர்கள் ட்ரம்ஸ் வைத்து அடித்துக்கொண்டு கோசங்களை எழுப்பிக்கொண்டும், காவடி சுமந்து வருவதுபோல் மாடுகளை உருவாக்கி சுமந்து வந்த காட்சிகள் மெய்சிலிர்க்கிறது... ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என எல்லோரும் ஒற்றுமையாக சேர்ந்து வருவதை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. ஊர் திருவிழாவில் கலந்து கொண்டது போல் ஒரு உணர்வு... இதற்காக மோடிக்கு நன்றி சொல்லிதான் ஆகவேண்டும்.
Thursday, 19 January 2017
புதிய பாரதம் ....... Jallikkattu
அன்று மதுரையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்து முக்கூடழ் ஆனது, இன்றோ மெரினாவில் இளைஞர்கள் தங்கள் வீரத்தை பறை சாற்ற முக்கூடல் ஆனது சென்னை... ஜல்லிக்கட்டு வீரத்திற்கு அழகு என்ற போதும் தமிழ் உணர்வுகளுக்கு இளைஞர்கள் என நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.
Tuesday, 3 January 2017
யாதுமாகி நின்றாள்
பா - விதைக்கிறேன்...
அறுவடை செய்ய ஆளில்லாமலே!
சந்தம் - இசைக்கிறேன்...
யாசிக்க யாருமில்லாமலே!
நாண் - ஏற்றுகிறேன்...
இலக்கு தெரியாமலே - ஏனெனில்
நான் யாதுமறியாதவள்...
யாதுமாகி நின்றாள்!
அறுவடை செய்ய ஆளில்லாமலே!
சந்தம் - இசைக்கிறேன்...
யாசிக்க யாருமில்லாமலே!
நாண் - ஏற்றுகிறேன்...
இலக்கு தெரியாமலே - ஏனெனில்
நான் யாதுமறியாதவள்...
யாதுமாகி நின்றாள்!
Friday, 23 December 2016
மனதோடு மனம்
சென்னைக்கு வந்த பிறகு என் மனதை கலங்க செய்த ஒரு விஷயம். எப்போதுமே நம் மனசுக்குள் ஒரு எச்சரிக்கை உணர்வு இதை செய் இதை செய்யாதே என்று சொல்லும். அதே தான் நட்பு விஷயத்திலும் நாம் எல்லோரிடத்திலும் அத்தனை இலகுவாக பழகிட முடியாது காரணம் நம்பிக்கையின்மை ஏனெனில் யார் எப்படி என்று நமக்கு தெரியாது எந்த புற்றில் எந்த பாம்பு இருக்குமென்று யாருக்கும் தெரியாது. அந்த ஜாக்கிரதை உணர்வால் சிலரை நாம் தவிர்த்து இருப்போம் நம்மை அறியாமலே அவர்கள் மனதை நாம் காயம் செய்திருப்போம். ஆனால் ஏதோ ஒரு சந்தர்பத்தில் நினைத்து பார்க்கும் போது நாம் தவறு செய்து விட்டோமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
Subscribe to:
Posts (Atom)


