Sunday 26 October 2014

சிங்கார சென்னைக்கு தண்ணீரால் வந்த சோதனை

         சிங்கார சென்னைக்கு தண்ணீரால் சாபகேடோ என்னவோ மழை வந்தாலும் பிரச்சினையாக இருக்கிறது மழை வரவிட்டாலும் பிரச்சினையாக இருக்கிறது. என்னதான் தமிழ்நாட்டுக்கே தலைநகரமா இருந்தாலும் தண்ணீருக்கு வேற மாவட்டங்களில் இருந்துதான் தண்ணீர் பெற வேண்டியிருக்கிறது.

           ஆம் சென்னைக்கு வீராணம் ஏரியிலிருந்து தான் குடிநீர் அனுப்பப்படுகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படுகிறது. இந்த ஏரி காவிரியில் இருந்து கல்லணை வழியாக தண்ணீர் வருவது வழக்கம் ஏரியின் மொத்த கொள்ளவு 47.50 அடி. வீராணம் ஏரி சென்னையிலிருந்து 235 கி.மீ தொலைவிலுள்ளது.

           இந்த ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநிர் கொண்டுவர 1968 ஆண்டில் திட்டமிட்டு பிறகு பல்வேறு காரணங்களால் அது நிறைவேறவில்லை பின் புதிய வீராணம் திட்டம் என்ற பெயரில் சென்னைக்கு 180 MCD குடிநீர் கொண்டு வரும் திட்டம் 2004 ல் நிறைவடைந்தது. வீராணம் ஏரி மிகப்பெரியது அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற புதினம் காவிரி கரையிலிருந்து தான் தொடங்குகிறது.

         அந்த புதினத்தில் வீரநாராயண ஏரி எனக் குறிப்பிடப்பட்டிருக்கு இந்த ஏரியை முதலாம் பராந்தகசோழன் உருவாக்கியதாக கூறப்படுகிறது. இந்த வீராணம் ஏரி எவ்வளவு பெரியது அது உடைப்பெடுத்தால் என்னவாகும் என்பதை அத்தனை தத்ரூபமாக சொல்லியிருப்பார் அத்தனை பிரம்மாண்டமான ஏரி.

         மேலும், சென்னையுள்ள சுற்றி பூண்டி, செங்குன்றம்,செம்பரபாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகளிலிருந்து சென்னைக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த ஏரிகளில் முழுமையாக நீரை சேமித்து வைக்க முடியவில்லை மீதமுள்ள நீர் வீணாக கடலில் கலக்கிறது.

             போரூர், அயனம்பாக்கம், ஆகிய ஏரிகளை ஆழப்படுத்த முடியும் இதனால் அதிக நீரை சேமித்து வைக்க முடியும் இதை ஆழப்படுத்த 50 லட்சம் நிதி ஒதிக்கியதாக கூறப்படுகிறது. 20 கோடி ரூபாய் செலவில் போரூர் ஏரியின் தரை பகுதி ஒரு மீட்டர் முதல் இரண்டு மீட்டர் வரை 70 மில்லியன் கன அடியாக கொள்ளவு உயர்த்தப்படும் என அறிவித்துள்ளது. 30 கோடி செலவில் அயனபாக்கம் ஏரியின் கரை உயர்த்தப்படும் என்றும். 79.50 கோடி நேமம் ஏரிக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

            ஆனால் இவையாவும் எப்போது நிறைவேறும் என்று யாருக்கும் தெரியாது.மழைக்காலங்களில் இப்பணியை தொடர முடியாது ஒவ்வொரு வருடமும் மழை வருகிறது அந்த தண்ணீரை வெளியேற்ற வழி இல்லை அதை சேமித்து வைக்கவும் வழியில்லை. இந்த நிதிகளை வைத்து ஒரு புது ஏரியை உருவாக்கி விடலாம். சென்னை ஒரு மெட்ரோ சிட்டி ஆனால் கோடைக்காலத்திலும் சரி, மழைக்காலத்திலும் சரி தண்ணீரால் அவதிக்குள்ளாகிறது.

4 comments:

  1. இங்கு எல்லாம் இருக்கிறது ... ஆனால் மனம் இல்லை.
    எதாவது செய்தால் அதனால் எனக்கு என்ன பயன் என்று கேட்கும் மனித கூட்டமே உள்ளது.
    தமிழக தண்ணீர் பிரச்னை சில வருடங்களில் சரி செய்ய முடியும்.
    எதற்கு சரி செய்ய வேண்டும் என்று ஒரு கூட்டம் அலைகிறது.
    இங்கு உள்ள ஒவ்வொரு நதியிலும் 5 கி மீ தூரத்திற்கு ஒன்று என தடுப்பணை கட்ட கோடை காலத்திலும் தண்ணீர் கிடைக்கும். இருக்கும் பல ஏரிகளை ஆழப்படுத்தியும், ஒன்றிணைத்தும் தமிழகம் தண்ணீருக்காக ஏங்கி நிற்காமல் செய்ய முடியும். இதை செய்வதனால் வேலை வாய்ப்பு பெருகும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்.
      புதிதாக ஒரு ஏரியை உருவாக்கினால் வேலைவாய்ப்பு சாத்தியம் தான் ஆனால் அதை
      செய்ய வேண்டுமே. நாம் எப்போதுமே வெள்ளம் வந்த பிறகுதான் அணைபோட நினைப்போம்
      ஆனால் சென்னை தற்சமயம் வெள்ளம் சூழ்ந்துள்ளது போலதான் காட்சி தருகிறது
      ஆனால் இதுவரை எந்த முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை. இதில் பாதாளசாக்கடை
      வேறு எங்கு திறந்து கிடக்குமோ அதுவே பாதி அச்சம்தான்.

      Delete
  2. வேதனையான விடயம் இந்தத் தண்ணீர்ப் பிரச்சனை.
    விரைவில் மாற வேண்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. unmaithan sagothari niraiya matram thevaipadukirathu

      Delete