Thursday, 8 January 2015

அழகிய புகைப்படங்கள்

தன் அழகைக் கண்டு 
தனக்குத் தானே
முத்தமிட்டு கொள்கிறதோ..?
                                                இந்த மான்..!

Wednesday, 7 January 2015

சுவடு


மீத்தேன் சுரண்டல்

            காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் எரிவாயு என்ற பெயரில் நீர்வள ஆதாரத்தை உறிஞ்சுவிட்டு நஞ்சு பொருளை பூமியில் கலந்து பசுமையாக இருக்கின்ற விளைநிலங்களை தார்பாலைவனமாக ஆக்கப் போகிறது மத்திய அரசு. மீத்தேன் எரிவாயு திட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியத்தை காவு கொடுக்கப் போகிறது. சுடுகாடாக மாற்றப்போகிறது. விவசாயத்தை நம்பி வாழ்கின்ற விவசாயிகள், உழவர்கள் எங்கே தங்கள் நிலம் பறி போகுமோ என்ற பீதியில் இருக்கிறார்கள்.

            மீத்தேன் வாயு என்பது எரிவாயு மற்றும் மின் உற்பத்திக்குப் பயன்படுகிறது. இது பல்வேறு வடிவங்களில் நமக்கு கிடைக்கிறது, சாண எரிவாயு மீத்தேன்தான் பூமிக்கு மேலே கழிவு பொருள்களில் இருந்து மீத்தேன் கிடைக்கிறது. பூமிக்கு அடியில் பாறை பகுதியில் மீத்தேன் இருக்கிறது.

Tuesday, 6 January 2015

சிலந்தி வலை

சிலந்தி வலையில்
 சிக்குண்ட வண்டுகள்
 இணையதள நண்பர்கள்..!

பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்

              இதுவரை ஆன்மிகம், மருத்துவம், கதை, கவிதை என்று படித்து உங்களுக்கு போரடித்திருக்கும். அதனால் இன்று சற்று வித்தியாசமாக உங்களை பேருந்தில் பயணிக்க அழைத்துச் செல்லப்போகிறேன்.

              பேருந்தில் பயணம் செய்ய எத்தனை பேருக்கு பிடிக்கும்? எனக்கு பேருந்தில் பயணம் செய்ய ரொம்ப பிடிக்கும்.      பேருந்தில் போகும்போது அதில் ஒலிக்கின்ற பாடல்கள் அனைத்தும் நம் மனதை ஏதோ ஒருவகையில் தொட்டுவிடும்.

             அந்த பாடல்களை கேட்டப்படி ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து சாரல் காற்று முகத்தில் வீச காதோரம் பறக்கும் முடியை ஒதுக்கியபடி ஓடும் வயல்களையும், மரங்களையும், கட்டிடங்களையும் கடந்து நம் மனதிற்கு பிடித்த நினைவுகளுடன் செல்வது ஒரு தனிசுகம் தான். பேருந்தில் நம் மனதிற்கு பிடித்த பாடல்கள் ஒலிக்கும் போது 100 பேர் இருந்தாலும் நான் தனித்து உணர்வேன்.


          நீங்கள் எப்படி சரி வாருங்கள் பாடல்களை கேட்போம்.

Monday, 5 January 2015

கல்வெட்டு

என் இதய சுவட்டில் t
  உனது நினைவுகளை
 பதித்து வைத்திருக்கிறேன்
 கல்வெட்டாய்..!

Sunday, 4 January 2015

உடல் எடை குறைய வேண்டுமா?

              உடல் எடை குறைய உடல் பயிற்சி ரொம்ப முக்கியமானது. அதோடு உடலில் உள்ள கொழுப்புகளை அகற்ற  ஒரு மருந்து சொல்லபோகிறேன்.

 தேவையான பொருட்கள்:-

சீரகம் - 25 கிராம் 
பட்டை - 25 கிராம் 
லவங்கம் - 25 கிராம் 
மிளகு - 25 கிராம்
தேன் - பெரிய பாட்டிலில் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்

தேடலின் தேடல்

            தேடல் இல்லாத வாழ்க்கை சுவாரஸ்சியம் இல்லாதது. தேடல் நம்மைவிட மற்றவர்களுக்கு தான் அதிக பயனுள்ளதாக இருக்கிறது. நாம் நமக்காக வாழ்வதை விட மற்றவர்களுக்காகதான் வாழ்கிறோம். விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளார்கள், கலைஞர்கள் இவர்களின் பங்களிப்புகள் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. அந்தவகையில் சில தொகுப்புகளை உங்களுக்காக நான் தேடி தொகுக்கிறேன்.

             கிரிகர் ஜோகன் மெண்டல் ஆஸ்திரிய அகஸ்தினியத் துறவி தான் சார்ந்த துறவி மடத்திலேயே தொடக்க கல்வியையும் பின்பு வியன்ன பல்கலைகழகத்தில் அறிவியல் மற்றும் கணிதமும் பயின்றார். ஆசிரியர் பயிற்சி சான்றிதழல்த் தேர்வில் தோல்வியடைந்தாலும் இவருடைய அறிவியல் ஆர்வம் குறையவில்லை. மடத்திலேயே தோட்டப் பட்டாணிச் செடியின் கலப்பின ஆய்வினை மேற்கொண்டார். கணிதம், அறிவியல் இரண்டையும் இணைத்து கணக்கிதலை வெளியிட்டு மரபுவழிக் கடத்தல் விதிகளை வெளியிட்டார்.

சிக்கன் லெக் பிரைய்

தேவையான பொருட்கள்:

கோழிக்கால் - 2
இஞ்சி பூண்டு அரைத்தது - 2 ஸ்பூன்
கடலைமாவு- சிறதளவு
மிளகாய்த்தூள் - சிறிதளவு
உப்பு - சிறிதளவு
முட்டை - 1
எண்ணெய் - தேவைக்கேற்ப

Friday, 2 January 2015

நட்பு

உன்னால் மட்டும்
 எப்படி முடிகிறது
 என்னிடம் பொய்யாக
 நடிப்பதற்கு..!

சிப்பிக்குள் முத்து ...

"கடைசி வரை
உன் கூடவே இருப்பேன்"
என்ற நண்பிகள்
 எப்போதாவது போன்
செய்து பேசுகையில்
கொஞ்சம் கோபம்
வரத்தான் செய்கிறது..!

 "போன் பண்ணினா
எடுக்கமாட்டியா எத்தனை
தடவை உனக்கு கால் பண்றது?"
என முதல் தடவை கால்
பண்ணிட்டு நம்மையே
திட்டும் நண்பிகளை
கோபத்தையும் மறந்து
சிரித்துக்கொண்டு
சமாளிக்க வேண்டியிருக்கு..!

இதயம்

உன்னை நினைத்தே
இறந்துவிட போகிறது
என் இதயம்..!

Thursday, 1 January 2015

மோட்சபுரி காசியில் முக்தி அருளும் விஸ்வநாதர்

        திரும்பிய பக்கமெல்லாம் கோயில்கள் நிறைந்த காசி அகிலேஸ்வரனின் அம்சம். காசியில் மட்டும் கயிலைநாதனுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?

       பரமேஸ்வரன் முன்பொரு சமயம் கைலாசத்தை விட மேன்மையான தலம் தரணியில் எங்காவது இருக்கிறதா என்று பார்ப்பதற்காகப் புறப்பட்டு வந்தார். வந்தவர் காசியை அடைந்தார். அந்நகரின் மேன்மையைக் கண்டு கைலாயத்தையே மறந்தார். இங்கேயே இருந்து விட்டார்.