என்ன
மனிதர்கள் இவர்கள்? வலைப்பூக்களாக இருக்கட்டும் அல்லது பேஸ்புக்காக
இருக்கட்டும் ஒரு பதிவுகளை போடுவதற்கு அத்தனை கஷ்டமாக இருக்கிறது ஒவ்வோரு
தகவலையும் திரட்டி அல்லது படித்து அதிலிருந்து தேவையான விஷயங்களை எடுத்து
அது பலருக்கு சேர வேண்டும் என்பதற்காக கஷ்டப்பட்டு டைப் பண்ணி போட்டோ
அப்லோடு செய்வது என்பது அவரவர் சொந்தமாக பதிவிடும்போது அதன் கஷ்டம்
தெரியும் ஆனால் சிலர் நோகாமல் நாம் போடும் பதிவுகளை அப்படியே எடுத்து
அவர்கள் வலைப்பூவில் சேர்த்து தன் பெயரை போட்டுக்கொள்கிறார்கள் அதை காணும்
போது மிகவும் வேதனையாக இருக்கிறது. அடுத்தவர் பதிவுகளை ஷேர் செய்து
கொள்ளலாம் தவறில்லை ஆனால் அடுத்தவர் பதிவுகளை தான் எழுதியது போல்
போட்டுக்கொள்வதுதான் வருத்தமாக இருக்கிறது. சில இடங்களுக்கு போகும்போது
அங்குள்ளவைகளை படம் பிடித்து சில உண்மைகளை கேட்டறிந்து அதன் பிறகுதான்
பதிவுகளை போடுகிறோம். ஆனால் சிலர் உள்ளம் கூசாமல் அடுத்தவர் பதிவுகளை
எடுத்து போடுவது "கோவிலுக்கு வெளியே கிடக்கும் அடுத்தவர்களின் செருப்புக்களை திருடி
போட்டுக்கொள்வதற்கு சமம்." வலைப்பூக்கள் என்பது அவரவர் சொந்த
பதிவுகளை எழுதுவதற்கு தானே தவிர அடுத்தவர் பதிவுகளை தான் எழுதியதுபோல்
போட்டுக்கொள்வதற்கு அல்ல ஒவ்வொரு பதிவுகளையும் போடுவதற்கு எத்தனை நேரம்
பிடிக்கிறது தெரியுமா நீங்கள் கஷ்டமே இல்லாமல் ஈசியாக எடுத்து
போட்டுக் கொள்கிறீர்கள்.நெட்கார்டு
போட்டு என்ன போடலாம் என்ன போடலாம்னு யோசிச்சு, தகவலை சேகரிச்சு லேப்டாப்பை
எடுத்துட்டு உட்கார்ந்தா, தினமும் இதான் உனக்கு வேலையான்னு அம்மா
திட்டுவாங்க, அதெல்லாம் ஓரங்கட்டிட்டு நினைச்சதை கை வலிக்க டைப் பண்ணி
போட்டுட்டு அது வா சகர்களுக்கு பிடிக்குமோ பிடிக்காதோண்ணு மண்டைய
பிச்சுகிட்டு நாங்க இருந்தால், நீங்க நோகமாக கை வலிக்காம எடுத்து உங்க
வலைப்பூவில் உங்க பெயரை போட்டுகிறீங்க அப்ப எங்களைப் பார்த்தா உங்களுக்கு
எப்படி தெரியுது? ஒரே பதிவு இரண்டு இடத்தில் இருந்தால் யார் எழுதியது என்று
எப்படித் தெரியும் அது தவறில்லையா? அடுத்தவர் கட்டுரை பிடித்திருந்தால் உங்கள் மனதை
கவர்ந்திருந்தால் அதை எழுதியவர் பெயரோடு உங்கள் வலைப்பூவில்
சேர்த்துக்கொள்ளுங்கள் தவறில்லை அது அவரின் எழுத்து கிடைத்த மரியாதை அதை
விடுத்து தான் எழுதியதுபோல் போட்டுக்கொள்வது என்ன நியாயம் தயவுசெய்து
இனிமேல் இப்படி செய்யாதீர்கள் அது உங்களுக்குதான் அசிங்கம். சிவராம் என்பவர் எனது கட்டுரைகளை எடுத்து இருக்கிறார் 1. கற்றலின் பெருமை 2. எனது மாவட்டத்தின் பெருமைகள் இன்னும் யாரோடதெல்லாம் இருக்கிறது என்று பார்த்துகொள்ளுங்கள் அவரது இணைப்பு sivamindmoulders.blogspot.in / http:sivamindmoulders.blogspot.in
என் எண்ணச் சிதறல்கள் சிந்தனைச் சிறகுகளாக விண்ணில் பறக்க விடுகிறேன் ஏனெனில் சிறகில்லா சிறுபறவை நான்..!
- ஆன்மீகம் (36)
- இலக்கியம் (9)
- இலங்கை வானொலியின் குரல் (9)
- கட்டுரை (106)
- கவிதை (153)
- சிறுகதை (20)
- தஞ்சாவூர் ஸ்பெஷல் சமையல் (43)
- படக் கவிதைகள் (12)
- பயணக்கட்டுரை (16)
- மருத்துவம் (25)
Saturday, 11 October 2014
Friday, 10 October 2014
ஐயனார் இந்து கடவுளா?
சங்க காலத்தில் சிறப்புடன் வழங்கிய பெயர் சாத்தன் என்பது நன்கு புலப்படும். சாத்தன் அல்லது சாத்தனார் என்னும் பெயர் சாஸ்தார் என்னும் வடமொழிப் பெயரின் திரிபு சாஸ்தா என்பது புத்தருக்குரிய பெயர்களுள் ஒன்று கடைச் சங்க காலத்தில் தமிழ் நாட்டிலிருந்த பௌத்தர்கள் சாத்தன் என்னும் பெயரைப் பெரும்பாலும் மேற்கொண்டிருந்தனர் என்பது சங்க நூல்களிலிருந்து தெரிகின்றது. சிலப்பதிக்காரத்தில் சாத்தன் வரலாறு கனாத்திரம் உரைத்த காதையில் விரிவாகப் பேசப்படுக்கின்றது.
பௌத்த வழி சாத்தன்
புத்தருக்கு வழங்கிய பெயர்களுள் ஒன்று சாஸ்தா. சாஸ்தா சாத்தன் என்னும் வடமொழிச் சொல்லிற்கு நேரான தமிழ்ச் சொல் ஐயன் அல்லது ஐயனார் பௌத்த மதம் அழிந்த பின்னர் அம்மதக் கொள்கைகளையும் தெய்வங்களையும் இந்து மதம் ஏற்றுக் கொண்டபோது வெவ்வேறு கதைகள் கற்பிக்கப்பட்டன. வைணவர் புத்தரை திருமாலின் ஓர் அவதாரமாகக் கருதினர், சைவ சமயத்தோர் புத்தராகிய சாத்தனாரை திருமாலுக்கும் சிவபெருமானுக்கும் பிறந்த பிள்ளையாக கற்பித்து சாத்தனாரைச் தமது தெய்வமாக சேர்த்துக்கொண்டனர்.
சமண வழி சாத்தன்
பௌத்த சமயத்திலிருந்து இந்துக்கள் சாத்தனை தெய்வமாக ஏற்றுக் கொண்டது போலவே சமணத்திலிருந்து இத்தெய்வத்தை ஏற்றுக் கொண்டார்கள் என்று கருதப்படுகிறது.
சமணர்களுடைய கோயில்களில் இத்தெய்வத்தை இன்றும் காணலாம். இத்தெய்வத்திருக்கு பிரம்மயட்சன் சாத்தனர் முதலிய பெயர்களில் அவர்கள் கூறுகின்றனர. பௌத்த சமண ஐயனார் பௌத்த மதத்திலிருந்தும் சமண மதத்திலிருந்தும் ஐயனாரை இந்துக்கள் ஏற்றுக் கொண்டனர். பௌத்த ஐயனாருக்கும் சமண ஐயனாருக்கும் உள்ள வேறுபாடு யாதெனில் பௌத்த ஐயனாருக்குரிய வாகனம் குதிரை சமண ஐயனாருக்குரிய வாகனம் யானை என்பதே இன்றைய நிலையில் ஐயனார் கோயில்களில் இரண்டும் கலந்தே காணப்படுகிறது சிவன் கோயில் பலிபீடத்தில் நந்தியும், முருகன் கோயில்களில் மயிலும் இருப்பது போல் ஐயனார் கோயில்களில் பலிபீடத்தில் யானை தான் காணப்படுகிறது.
அதே கோயில்களில் குதிரையின் சிலைகளும் கோயில்களின் எதிரே தனித்தும் வரிசையாகவும் வைக்கப்பட்டுள்ளன. இருவேறு மதங்களிலிருந்தும் ஐயனார் வழிபாடு புகுந்திருந்தாலும் அவை பிற சமயச் சார்பின் என்ற எண்ணமின்றி இந்துக்கள் இரண்டையும் இணைத்து ஒன்றாகவே கருதி வழிப்பட்டு வருகின்றனர் என்பதற்கு யானை உருவமும் குதிரை உருவமும் ஒன்றாக காணப்படுவதே சான்றாகும். சமணர்களும, பௌத்தர்களும் உயிர் கொலை விரும்ப மாட்டார்கள் அதனால்தான் ஐயனார் சந்நதிகளில் உயிர்பலியிடுதல் இன்றும் இல்லை.
ஐயனார் கோயில்களில் சிறப்பு பூஜை நடைபெறும் காலங்களில் ஆடு, சேவல் முதலியன பலியிடப்படும் ஆனால் ஐயனார் சந்நதிகளில் இவற்றைப் பலியிடமாட்டார்கள். ஐயனார் கோயில்களில் பரிவாரத் தெய்வங்களாக இருக்கும் கருப்பர், வீரன் முதலிய தெய்வச் சந்நதிகளில் பலி நடக்கும் பலியிடுவதற்கு முன் ஐயனாருக்கு பூஜை செய்து திருக்கதவை தாழிட்டுப் பூட்டப் பெறும் ஐயனாரை இந்துக்கள் கடவுளாக ஏற்றுக்கொண்டாலும் உயிர்கொலை செய்வதைத் தடுத்து விடுகின்றனர்.
இந்து சமயத்தாரால் சாத்தன் வழிபாடு தெய்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர். சாத்தனார் சிவபெருமானின் மகனாக சொல்கின்ற வரலாறு தமிழ்நாட்டில் பரவிற்று திருநாவுக்கரசர் தாம்பாடிய திருப்பாயிற்றுர்த் திருப்பதிகத்திலே சாத்தனைச் சிவபெருமானின் மகன் என்றே குறுப்பிடுகின்றனர்.
"பார்த்தனுக் கருளும் வைத்தார் பாம்பரை யாட வைத்தார்
சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாம வேதம்
கூத்தொடும் பாட வைத்தார் கோளரா மதியும் நல்ல
தீர்த்தரும் சடை மேல் வைத்தார் திருப்பயற் றூர்ஊர னாரே"
ஐயனார் அரிகரபுத்திரர் சாத்தா என்னும் அழைக்கப் பெறுவர் தாருகாவனத்து இருடிகளின் ஆணவ மாதி சிறு மாப்புக்களை அடக்குவதற்கு அரியும், அரனும் எழுந்தருளிய காலத்து, மோகினியாக நின்ற மகாவிஷ்ணுவின்பால் அரனுக்கு மகனாகத் தோன்றியவர். கிராமத்தை பாதுகாக்க ஊரின் வடக்கே கோயில் கொண்டுள்ளார் என்று குறிப்பிடுகின்றது. கந்தபுராணத்தில் இரண்டாவதான அசுர காண்டத்தில் 32 ஆம் படலம் மகா சாத்தப்படலம் இப்படலத்தில் ஐயனாரின் அவதார நிகழ்ச்சிகள் விரிவாகப் பேசப்படுகின்றனர்.
திருமால் மோகினி வடிவங் கொண்ட பொழுது சிவப்பெருமான் அவளைச் சார்ந்த நிலையில் ஐயனார் தோன்றினார். ஐயனாரை உருவாக்கிய சிவபெருமான் அவருக்குப் பெயர் சூட்டி உருத்திரோடு உலகை காக்கும் தொழிலை அவருக்கு தந்தார்.
"அங்கண் மேவி அரிகர புத்திரன்
சங்கை யில்பெருஞ் சாரதர் தம்மோடு
எங்கு மாகி யிருந்தெவ் வுலகையும்
கங்குலும் பகலும் எல்லையுங் காப்பனால்
(கந்தபுராணம்- 54)
ஐயனார் மாசி மாதம் அமாவாசைக்கும் முதல் நாள் சிவராத்திரியன்று பிறந்தார் என்று கூறுவர் அதனால்தான் ஐயனார் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் சிவராத்திரியன்று நடைபெறுகின்றனர். ஐயனார் தன் பரிவாரங்களுடன் இரவில் குதிரை மீதமர்ந்து ஊரை காத்து வருவதாக மக்கள் நம்புகின்றனர். மதுரை வீரனும் பாவாடைராயனும் ஐயனாரின் படைத்தளபதிள், குட்டிச் சாத்தான், சாத்தான் கருப்பன், முண்டன், குளிகன் முதலிய பூதங்கள் ஐயனாரின் பணியாட்கள் என்று சொல்லப்படுகிறது.
ஐயனார்தான் ஐயப்பன் என்றும் சொல்லப்படுகிறது சைவ கடவுளாக இருப்பதால் பலியிடுதலை தவிர்த்து பச்சரிசி படையிலப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. கடவுளின் தோற்றம் வெவ்வேறாக இருந்தாலும் அதன் ஆதிமூலம் என்பது ஒன்றுதான். வேற மதக்காரர்கள் சிலர் கேலியாக சொல்வதுண்டு அரிக்கும் ஹரிக்கும் எப்படி குழந்தை பிறக்கும் அதாவது ஒரு ஆணுக்கும் ஆணுக்கும் எப்படி குழந்தை பிறக்கும் என்று கேட்கின்றனர் இப்போது அவர்களுக்கு புரிந்திருக்கும். மனிதர்களில் ஆண் பெண் என்ற இரண்டு படைப்புகளையும் தாண்டி திருநங்கை என்ற படைப்பு ஒன்று இருக்கு எல்லோரும் அறிவர் இப்படி ஒரு படைப்பு இருக்கும் பட்சத்தில் இதையும் நம்பதான் வேண்டியிருக்கிறது. மனிதருக்கு நல்ல விஷயங்களை எடுத்துரைக்க கடவுள் பல அவதராங்கள் எடுத்ததாக சொல்லப்படுகிறது.
ஸ்ரீசந்திரா
Wednesday, 8 October 2014
Monday, 6 October 2014
தெரிந்து கொள்வோம்
மனிதன் ஒரு நாளில் 21600 முறை சுவாசிக்கிறான். தனது 20 உறுப்புகளில் சுவாசிப்பதால் (20X21600=432000) வருடங்கள் கலியுகத்தின் முன் இருக்கும் மகாபாரதம் நடந்த துவாபரயுகம் கலியுகத்தைவிட இரண்டு மடங்கு பெரியது 864000 வருடங்கள்.
திருதாயுகம் மூன்று மடங்கு பெரியது 1296000 வருடங்கள் கிருதாயுகம் கலியுகத்தைவிட நான்கு மடங்கு பெரியது 1728000 வருடங்கள்
கிருதாயுகம், திருதாயுகம் ,துவாபர யுகம் மற்றும் கலியுகம் அனைத்தும் சேர்ந்தது சதுர்யுகம் ஒரு சதுர்யுகம் என்பது பிரம்மாவின் ஒரு நாளின் பகல் பொழுது. நான்கு சதுர்யுகமும் இல்லாத பிரளய காலம் பிரம்மனின் இரவு பொழுது. சதுர்யுகம் மற்றும் பிரளயம் இணைந்த காலம் பிரம்மனுக்கு ஒருநாள். ஆயிரம் பிரம்ம நாட்கள் சேர்ந்தது ஒரு கல்பம் நூறு கல்பம் சேர்ந்தது மஹாயுகம் ஒரு மஹாயுகம் பிரம்மனின் முழு ஆயுள் காலம்
திருதாயுகம் மூன்று மடங்கு பெரியது 1296000 வருடங்கள் கிருதாயுகம் கலியுகத்தைவிட நான்கு மடங்கு பெரியது 1728000 வருடங்கள்
கிருதாயுகம், திருதாயுகம் ,துவாபர யுகம் மற்றும் கலியுகம் அனைத்தும் சேர்ந்தது சதுர்யுகம் ஒரு சதுர்யுகம் என்பது பிரம்மாவின் ஒரு நாளின் பகல் பொழுது. நான்கு சதுர்யுகமும் இல்லாத பிரளய காலம் பிரம்மனின் இரவு பொழுது. சதுர்யுகம் மற்றும் பிரளயம் இணைந்த காலம் பிரம்மனுக்கு ஒருநாள். ஆயிரம் பிரம்ம நாட்கள் சேர்ந்தது ஒரு கல்பம் நூறு கல்பம் சேர்ந்தது மஹாயுகம் ஒரு மஹாயுகம் பிரம்மனின் முழு ஆயுள் காலம்
பெண்களே உஷார்... உஷார்...
நீங்கள் பேருந்தில் பயணம் செய்து அலுவலகம் செல்லும் பெண்ணா? பள்ளி/கல்லூரி மாணவியா? உங்களுக்கு சில டிப்ஸ்.
நாம் பேருந்தில் பயணம் செய்யும் போது கூட்ட நெரிசலில் சில அவசரத்திற்கு பிறந்த அல்பங்கள் அவசர குடுக்கைகள் பக்கி பண்ணாடைகள் பெண்களின் காலை சுரண்டுவார்கள் அவர்களை செருப்பால் அடிக்கணும் போல தோணும் ஆனால் அந்த கூட்டத்தில் குனிந்து எடுக்க முடியாது. அதற்காக கவலைப்படாதீர்கள் உங்கள் செருப்பு காலை எடுத்து அவன் காலில் வைத்துவிடுங்கள் அவன் கால் கால் என்று கத்துவான் நீங்கள் காதில் வாங்காதீர்கள் அவனால் உங்களை ஒன்றும் செய்ய முடியாது.
Sunday, 5 October 2014
என் சிந்தனை சிதறல்கள்
பள்ளி, கல்லூரி, பஸ், ஆட்டோ, கோவில்,பூங்கா, காடு, கரை, கம்மா, வாய்க்கால், சந்து பொந்து இன்டு இடுக்கு எல்லா இடங்களிலும் பாலியல் வன்முறைகள் நடக்கிறதே எப்படி? அப்ப பெண்கள் சாமியாக தெரியவில்லையா பூமியாக தெரியவில்லையா இவையெல்லாம் அப்ப எங்கே போயின? பெண்களை அழகு என்பது இதற்கு தானோ? பல பெருமைகளை கொடுத்து பொய்யா புகழ்ந்ததும் இதற்கு தானோ?
அன்று அரசர்கள் காலத்தில் தாசி குலம் ஒன்று இருந்து வந்தது நாளடைவில் அதை ஒழித்துவிட்டார்கள் ஆனால் அதுவே சற்று மாறி விபச்சார விடுதியாக மாற்றி விட்டார்கள் இதை ஒழிக்க யாரும் இல்லாது போனது தான் ஆச்சரியமாக இருக்கிறது. சாமியான பெண்களை பூமியான பெண்களை விபச்சார அழகியாக அல்லவா வைத்து அழகு பார்க்கின்றோம்.
மிகப் பெரிய பொறுப்பில் இருக்கும் நாம் ஆன்மிகத்தைப் பற்றி ஆராய்கிறோம் வேதாந்தம் சித்தாந்தம் பற்றி விவாதிக்கிறோம் கருத்துரைக்கின்றோம் கலந்துரையாடுகிறோம் அதே நேரத்தில் விபச்சார அழகிகள் பக்கத்தில் போய் லைக்கும் செய்கிறோம். நாம் நமக்கும் உண்மையா இல்லை நம்மை சார்ந்தவர்களுக்கும் உண்மையா இல்லை ஆக நாம் பொய்யான உலகத்தில் இருக்கிறோம் பொய்யா பழகுறோம் பொய்யா வாழ்கிறோம் என்பது தான் உண்மை.
ஸ்ரீசந்திரா
பள்ளி வாழ்க்கையும், நினைவு தூறலும்
எல்லோர் மனதிலும் இன்றும்
மறக்கமுடியாமல் இருப்பது
பள்ளி வாழ்க்கையும் அங்கு
கிடைத்த நட்பும் தான்
அப்படி எனக்குக் கிடைத்த
அருமைத் தோழி சசிகலா
எனக்கு ஒன்று என்றால் நீயும்
உனக்கு ஒன்று என்றால் நானும் துடித்தோம்
அழுது தீர்த்தோம்
ஹாஸ்டல் முழுதும்
நமக்கான நட்பைப் பற்றி
பெருமையாகவும் பேசினர்
பொறாமையும் பட்டனர்
யார் கண் பட்டதோ
எனக்குப் பிடிக்காத வார்த்தை
ஒன்றை சொல்லி நீ திட்டிவிடவே
உன்னோடு பேசுவதையே
நிறுத்திக் கொண்டேன்
மறக்கமுடியாமல் இருப்பது
பள்ளி வாழ்க்கையும் அங்கு
கிடைத்த நட்பும் தான்
அப்படி எனக்குக் கிடைத்த
அருமைத் தோழி சசிகலா
எனக்கு ஒன்று என்றால் நீயும்
உனக்கு ஒன்று என்றால் நானும் துடித்தோம்
அழுது தீர்த்தோம்
ஹாஸ்டல் முழுதும்
நமக்கான நட்பைப் பற்றி
பெருமையாகவும் பேசினர்
பொறாமையும் பட்டனர்
யார் கண் பட்டதோ
எனக்குப் பிடிக்காத வார்த்தை
ஒன்றை சொல்லி நீ திட்டிவிடவே
உன்னோடு பேசுவதையே
நிறுத்திக் கொண்டேன்
கடிதம்
நண்பர்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் அழகான உணர்வுதான் கடிதம். இப்போதெல்லாம் யாரும் கடிதம் எழுதவதே இல்லை கடிதம் எழுதுவது ஒரு அற்புதமான கலை. நகைச்சுவையாக எழுதும் போது சிரிப்பதும், உருக்கமான வரிகள் வரும்போது அழுவதும், கோபமான வார்த்தைகள் வரும்போது கோபப்படுவதும், கவலைப்படும் நேரங்களில் ஆறுதலை தருவதும் இவை அத்தனையும் ஒரு வெள்ளை காகிதத்தில் இருக்கும் எழுத்துக்கள் செய்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஒரு கடிதத்தை படிக்கும்போதே நம் நண்பனோ/நண்பியோ நம் அருகில் இருப்பது போல தோன்றும் அதில் இருகின்ற சந்தோஷம் எதிர்பார்ப்பு ஏக்கம் இப்போது இருக்கும் ஈமெயில்,பேஸ் புக், எஸ்.எம்எஸ் எதிலும் கிடைப்பதில்லை.
இதில் இன்னொரு அழகான விஷயம் என்றால் இன்று கடிதம் வரப்போகிறது என்றால் போஸ்ட்மேன் வருவதற்கு முன்பே நம் மனதிற்கு தெரிந்துவிடும் இன்று ஏதோ வரப்போகிறது என்று இதுதான் ஒரு இனம்புரியாத பாசம் என்பது. கல்கியின் "அலைஓசை" நாவல் படித்தவர்களுக்கு தெரியும் அதில் இரண்டு தோழிகள் தங்கள் அன்பினை பரிமாறிக் கொள்வதை மிக அழகாக சொல்லியிருப்பார் கல்கி. இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் கடிதம் மனதை பக்குவபட வைக்கிறது நேருவின் கடிதம் தான் இந்திராகாந்தியை வழி நடத்தியது தன் தந்தை அருகில் இல்லாத குறையை கடிதம்தான் போக்கியது என்று சொன்னால் அது மிகையல்ல ஆனால் சிலருக்கு கடிதம் எழுதுவதும் பிடிக்காது அதை வாசிக்கவும் பிடிக்காது
உறவுக்குள் கடிதம் எழுதிக்கொள்வது குறைவு ஆனால் இந்த நட்பை வளர்த்தது
என்னவோ கடிதம் தான் இதில் முக்கிய இடத்தைப் பிடிப்பது பேனா நட்பு முகம் தெரியாத போதும் ஒருவருக்கொருவர் மாறி மாறி அன்பை பொழிவது ஆஹா அது ஒரு தனி சுகம் தான் (அது ஒரு சிலருக்கு வசனமாக கூட தெரியும் அதில் உள்ள அன்பு தெரியாது ஏனென்றால் நாம் எப்படியோ அப்படிதான் அவர்களும் இருப்பார்கள் என்று எண்ணிக் கொள்வதால்)
வானொலி நட்புக்கள் வாசகர்கள் தங்கள் அன்பினை நட்பினை பகிர்ந்து கொள்ளும்போது அது ஒரு தனி சந்தோஷம் தான் நிறைய இடங்களில் நட்புக்கள் உறவாகிப் போனதும் உண்டு உறவு பாலமாக இருந்த கடிதம் இப்போது இல்லாது போனது வருத்தமான ஒன்று தான்
ஸ்ரீசந்திரா
இதில் இன்னொரு அழகான விஷயம் என்றால் இன்று கடிதம் வரப்போகிறது என்றால் போஸ்ட்மேன் வருவதற்கு முன்பே நம் மனதிற்கு தெரிந்துவிடும் இன்று ஏதோ வரப்போகிறது என்று இதுதான் ஒரு இனம்புரியாத பாசம் என்பது. கல்கியின் "அலைஓசை" நாவல் படித்தவர்களுக்கு தெரியும் அதில் இரண்டு தோழிகள் தங்கள் அன்பினை பரிமாறிக் கொள்வதை மிக அழகாக சொல்லியிருப்பார் கல்கி. இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் கடிதம் மனதை பக்குவபட வைக்கிறது நேருவின் கடிதம் தான் இந்திராகாந்தியை வழி நடத்தியது தன் தந்தை அருகில் இல்லாத குறையை கடிதம்தான் போக்கியது என்று சொன்னால் அது மிகையல்ல ஆனால் சிலருக்கு கடிதம் எழுதுவதும் பிடிக்காது அதை வாசிக்கவும் பிடிக்காது
உறவுக்குள் கடிதம் எழுதிக்கொள்வது குறைவு ஆனால் இந்த நட்பை வளர்த்தது
என்னவோ கடிதம் தான் இதில் முக்கிய இடத்தைப் பிடிப்பது பேனா நட்பு முகம் தெரியாத போதும் ஒருவருக்கொருவர் மாறி மாறி அன்பை பொழிவது ஆஹா அது ஒரு தனி சுகம் தான் (அது ஒரு சிலருக்கு வசனமாக கூட தெரியும் அதில் உள்ள அன்பு தெரியாது ஏனென்றால் நாம் எப்படியோ அப்படிதான் அவர்களும் இருப்பார்கள் என்று எண்ணிக் கொள்வதால்)
வானொலி நட்புக்கள் வாசகர்கள் தங்கள் அன்பினை நட்பினை பகிர்ந்து கொள்ளும்போது அது ஒரு தனி சந்தோஷம் தான் நிறைய இடங்களில் நட்புக்கள் உறவாகிப் போனதும் உண்டு உறவு பாலமாக இருந்த கடிதம் இப்போது இல்லாது போனது வருத்தமான ஒன்று தான்
ஸ்ரீசந்திரா
Friday, 3 October 2014
வேதங்கள்
வாழும்
நிலையை பிரம்மசார்யம், கிரஹஸ்தம், வானப் பிரஸ்தம், சந்நியாஸம் என்று
நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. கற்றுத் தேர்வதை குருமுகமாக கற்றுத்
தேர்வது பிரம்மச்சார்யநிலை.
உலக வாழ்வில் ஈடுபட்டு மனைவியுடன் வாழ்ந்து தனக்கு மட்டும் பயன் தேடிக் கொள்ளாது தன்னை சார்ந்தவர்களுக்கும் தன்னை நாடுபவர்களுக்கும் உதவுவது கிரஹஸ்தம் நிலை.
தாமரை இலைத்தண்ணீர் போல வாழ்வது வானப் பிரஹஸ்தம் ஆசைகளையும், பாசங்களையும் ஒழித்த, கடமைகளையும் மட்டும் செய்து பந்த பாசங்களிலிருந்தும் விடுபட்டு தன்னுள் இருக்கும் தெய்வத்தை வெளிக்கொணருமே வழி என்ன என்பதை மனிதன் யோசிக்க வேண்டும் அதுதான் பிரஹஸ்தம்.
இறுதிநிலை சந்நியாசம் சந்நியாசி உலகிலிருந்து வேறுபட்டு உலகை பார்க்க வேண்டும். விருப்பு, வெறுப்பு, cவேண்டும். தன்னிலிருந்து விடுபட வேண்டும் உடல் நிலை தேவைகளை தாண்டியிருக்க வேண்டும்.
உலக வாழ்வில் ஈடுபட்டு மனைவியுடன் வாழ்ந்து தனக்கு மட்டும் பயன் தேடிக் கொள்ளாது தன்னை சார்ந்தவர்களுக்கும் தன்னை நாடுபவர்களுக்கும் உதவுவது கிரஹஸ்தம் நிலை.
தாமரை இலைத்தண்ணீர் போல வாழ்வது வானப் பிரஹஸ்தம் ஆசைகளையும், பாசங்களையும் ஒழித்த, கடமைகளையும் மட்டும் செய்து பந்த பாசங்களிலிருந்தும் விடுபட்டு தன்னுள் இருக்கும் தெய்வத்தை வெளிக்கொணருமே வழி என்ன என்பதை மனிதன் யோசிக்க வேண்டும் அதுதான் பிரஹஸ்தம்.
இறுதிநிலை சந்நியாசம் சந்நியாசி உலகிலிருந்து வேறுபட்டு உலகை பார்க்க வேண்டும். விருப்பு, வெறுப்பு, cவேண்டும். தன்னிலிருந்து விடுபட வேண்டும் உடல் நிலை தேவைகளை தாண்டியிருக்க வேண்டும்.
Monday, 29 September 2014
எனக்கு விருதா...? (VERSATILE BLOGGER AWARD)
எனக்கு விருதா...? எனக்கு விருதா...? சந்தோசத்திலே மிகப்பெரிய சந்தோஷம் கொடுப்பதில் தான் இருக்கிறது ஆனால் அன்பு , பாசம்,பரிசு, பாராட்டு இதெல்லாம் பெறுவதிலும் சந்தோஷம் உண்டு அந்த வகையில் எனக்கு அளித்த (VERSATILE BLOGGER AWARD) இந்த விருதை பெரும் மகிழ்ச்சியோடு ஏற்றுகொள்கிறேன்.
என்னைப் பற்றி
நான் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டைக்கு அருகே உள்ள துவரங்குறிச்சி நான் பிறந்த ஊர் தாய் , தந்தை,சகோதரி,சகோதரன் என ஐவர் அடங்கியது எனது குடும்பம் அதில் நான் கடைகுட்டிப் பெண். கல்வியில் இளங்கலை வணிகவியலில் பட்டம் பெற்று மேலும் காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தில் மேலாண்மை இயலில் முதுநிலை பட்டம் பெற்ற (எம்.பி.ஏ ) நான் தற்போது ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரிகிறேன். சிறு வயது முதல் புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் உண்டும் அதனால் எழுதும் ஆர்வமும் ஒட்டிக்கொண்டது.
பூந்தோட்டம்
பூந்தோட்டம் பார்க்க அழகானது ரசிக்க அழகனாது நம் மனதை சந்தோஷப்படுத்தக் கூடியது. ஆனால் இன்று எத்தனை இல்லங்கள் பூந்தோட்டம் வைத்து இருக்கிறது? பூந்தோட்டம் வேண்டாம் எத்தனை பூச்செடிகள் இருக்கிறது? சிலர் வீட்டிற்கு போகிறோம் வீட்டிற்கு வெளியே அழகான பூந்தோட்டத்தை காண்கிறோம் ரசிக்கிறோம் அதன் அருகில் நின்று போட்டோ எடுத்துக்கொள்கிறோம். பூந்தோட்டம் போலவே அவர் வீட்டையும் வைத்திருப்பார் என்று நம்புகிறோம் அவர் வீடு மட்டுமல்ல அந்த பூந்தோட்டம் போலவே அவர் மனதும் இருக்கிறது என்று காண்கிறோம்.
சமையல் எப்படி ஒரு கலையோ அதே போல பூந்தோட்டம் வைப்பதும் ஒரு கலைதான். நம் மனது அமைதி இழந்து அவதிப்படும் வேளைகளில் அதன் அருகே செல்லுங்கள் உங்கள் மனது லேசாகி விடும். 2011 - ல் அண்டை நாட்டில் இருந்து என் நண்பி ஒருவர் வந்தார். வந்த அன்று ஒரு செடியை நட்டேன் அது மூன்று வருடத்திற்குப் பிறகு அதே மாதம் அதே நாளில் முதல் முறையாக பூத்திருக்கிறது. அவர் இந்த முறை வரவில்லை ஆனால் இந்த செடியை பார்க்கும் போது அவரே நேரில் வந்து சிரிப்பது போன்று தோண்றுகிறது. நாம் வளர்க்கின்ற செடியும் ஒரு குழந்தை போன்றுதான் அதற்கு நீர் ஊற்றினால் கண்ணு குளர்ச்சியை தந்து மகிழ்ச்சியையும் தருகிறது.
இந்த செடி என் நண்பி இந்தியா வந்த போது வைத்தது
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்று அரசாங்கம் சொல்கிறது அதை ஏன் நாம் ஒரு ரசனையோடு செய்யக்கூடாது. வெயில் காலங்களில் வெட்கையை தனிக்க அழகான பூந்தோட்டம் அமையுங்களேன் அடுத்தவர் வீட்டில் இருக்கும் பூந்தோட்டத்தைப் பார்த்து ரசிக்கும் நாம் ஏன் நம் வீட்டில் அதை வளர்க்க கூடாது நம் வீட்டையும் பார்த்து நாலு பேர் பார்த்து ரசித்தால் நமக்கு சந்தோஷம் தானே!
அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு இது பொருந்தாது ஆனால் மற்றவர்கள் தயங்காமல் செய்யலாமே இது எனக்கு வராது, எனக்கு விருப்பமில்லை, ஆர்வமில்லை என்று சொல்வதெல்லாம் சோம்பேறிகளின் வார்த்தை அவர்கள்தான் இது போன்ற வார்த்தைகளை சொல்வார்கள் இதற்கு என்று நீங்கள் நேரம் ஒதுக்க தேவையில்லை காலை எழுந்தவுடன் பல் விளக்கும் நேரத்தில் தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் நீங்கள் அங்கே நின்றாலே உங்கள் மனம் புத்துணர்ச்சி பெறும்.
நீங்கள் அந்த செடிகளை வளர்ப்பதன் மூலம் மண் அரிப்பை தடை செய்கிறீர்கள் புழு, பூச்சி, வண்டு, வண்ணத்து பூச்சி, சிட்டுக்குருவி ஆகியவைகளுக்கு உணவளக்கிறீர்கள் உயிர் கொடுக்கிறீர்கள். இது உங்களை அறியாமல் நீங்கள் செய்யும் ஒரு நல்ல காரியம். வாருங்கள் மரம், செடி, கொடிகளை வளர்ப்போம் மனித நேயத்தை காப்போம்.
Thursday, 25 September 2014
தஞ்சாவூர் சமையல் / உருண்டை குழம்பு செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 200 கிராம்
சோம்பு - 1 ஸ்பூன்
மிளகாய்தூள் - தேவைக்கேற்ப
மல்லிதூள் - தேவைக்கேற்ப
தேங்காய் மூடி - 1/2 மூடி
எண்ணெய் - தேவைக்கேற்ப
புளி - எலுமிச்சை அளவு
பூண்டு - 3 பல்
தக்காளி - 2
உப்பு - தேவைக்கேற்ப
வெந்தயம் - 1 ஸ்பூன்
கறிப்வேப்பில்லை - சிறிதளவு
துவரம் பருப்பு - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 200 கிராம்
சோம்பு - 1 ஸ்பூன்
மிளகாய்தூள் - தேவைக்கேற்ப
மல்லிதூள் - தேவைக்கேற்ப
தேங்காய் மூடி - 1/2 மூடி
எண்ணெய் - தேவைக்கேற்ப
புளி - எலுமிச்சை அளவு
பூண்டு - 3 பல்
தக்காளி - 2
உப்பு - தேவைக்கேற்ப
வெந்தயம் - 1 ஸ்பூன்
கறிப்வேப்பில்லை - சிறிதளவு
Wednesday, 24 September 2014
மருத்துவம் / உங்களுக்கு சர்க்கரை நோயா இனி கவலையை விடுங்க
இன்றைய
காலக்கட்டத்தில் தீர்க்க முடியாத வியாதியாக சர்க்கரை நோய் இருக்கிறது.
டாக்டர் கூட சொல்வதுண்டு சர்க்கரை நோய்க்கு நம் உயிர் உள்ளவரை மாத்திரை
சாப்பிட வேண்டுமென்று ஆனால் இப்போது நான் சொல்லும் மருந்தை சாப்பிட்டால்
நீங்கள் சர்க்கரை நோயை அடியோடு விரட்டி விடலாம். எப்படி தெரியுமா?
Subscribe to:
Posts (Atom)












