Wednesday 26 August 2015

வேற்று கிரகவாசி

காற்று...
வானம்...
நிலா...
என் இதயம்...
உன்னைப் பற்றியே
என்னிடம் ஓயாது சொல்லிவிட்டு
போகிறது..!


உன் இதயம்...
என்றேனும் ஏதேனும்
சொல்லியதுண்டா..? இல்லை, இல்லை
அது எப்படி முடியும்
உனக்கு இதயமே இல்லாதபோது
நீ வேற்று கிரகவாசி
என்பதையும் மறந்து
உன்னிடமே கேட்கிறேன்..!

கடலுக்கு உயிரில்லை ஆனால்
உயிரினங்கள் வாழ்கிறது
ஆனால் உனக்கோ
உயிர் இருக்கிறது அதனால்
இதயமும் இருக்குமென்று
நம்பிவிட்டேன் போலும்..!

உன்னோடு பேசுகையில்
உலகத்தையே மறக்கத்தான் செய்கிறது
உனக்கும் அப்படிதான்
இருக்குமென்று நானாக
நினைத்துக்கொண்டு விட்டேன் அது
தவறென நீயே உணர்த்திவிட்டாய்..!

பிறகென்ன..?
உன்னை நான்
ஈர்க்க வேண்டுமெனில்
காந்தக் கல்லாய்தான்
நான் மாறவேண்டும்
ஏனென்றால் நீ
இரும்பால் செய்யப்பட்ட
உலோகம்
ஏன் சிரிக்கிறாய்? அது
என்னால் முடியாதென்று தானே
நீ நினைப்பது எனக்குப்
புரிகிறது..!









2 comments:

  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete