என் எண்ணச் சிதறல்கள் சிந்தனைச் சிறகுகளாக விண்ணில் பறக்க விடுகிறேன் ஏனெனில் சிறகில்லா சிறுபறவை நான்..!
- ஆன்மீகம் (29)
- இலக்கியம் (9)
- இலங்கை வானொலியின் குரல் (9)
- கட்டுரை (106)
- கவிதை (153)
- சிறுகதை (20)
- தஞ்சாவூர் ஸ்பெஷல் சமையல் (43)
- படக் கவிதைகள் (12)
- பயணக்கட்டுரை (11)
- மருத்துவம் (25)
Sunday, 30 August 2015
மனமே ஓ... மனமே நீ மாறிவிடு
மதிப்பீடு
ஒருவர் செய்கின்ற காரியங்களை வைத்து, செயல்பாடுகளை வைத்து அவரின் குணாதியங்களை கணிக்க முடியுமா? எல்லோராலும் முடியாது சிலரால் மட்டுமே முடியும். ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் இப்ப ஒருத்தர் நிறைய எழுதுகிறார் என்று வைத்துக்கொள்வோமே அவர் என்ன செய்வார் எல்லாவித கருத்துக்களையும் தன் எழுத்தில் புகுத்த நினைப்பார். ஒருவர் ஒன்றை பற்றியே குறிப்பிட்டால் கூட ஒரளவுக்கு கணிக்கலாம் எல்லாவற்றையும் எழுதினால் எப்படி கணிக்க முடியும்?
Saturday, 29 August 2015
நார்த்தங்காய் ஊறுகாய் செய்வது எப்படி
தேவையான பொருட்கள்:
நார்த்தங்காய் - 4
வெந்தையம் - 1 ஸ்பூன்
பச்சைமிளகாய் - 6
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
பூண்டு - 5, 6 பல்
பெருங்காயம் - ஒரு கட்டி
இஞ்சி - சிறு துண்டு
கடுகு -சிறிது
புளி - சிறிது
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
அச்சு வெல்லம் - 1
நார்த்தங்காய் - 4
வெந்தையம் - 1 ஸ்பூன்
பச்சைமிளகாய் - 6
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
பூண்டு - 5, 6 பல்
பெருங்காயம் - ஒரு கட்டி
இஞ்சி - சிறு துண்டு
கடுகு -சிறிது
புளி - சிறிது
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
அச்சு வெல்லம் - 1
Thursday, 27 August 2015
மனமே ஓ....மனமே நீ மாறிவிடு
'ரசிப்பு என்பது தூரத்தில் இருந்து பார்த்தால் அழகு, அருகே சென்றால் ஆபத்து' உதாரணத்திற்கு சூரியன் பார்ப்பதற்கு பிரகாசமாய் எழுந்து வரும்போது பார்க்க அத்தனை அழகு, ஆனால் கிட்ட நெருங்கினால் சாம்பலாக்கிவிடும். மன ரீதியில் பார்த்தால் எது ஒன்று நம்மை அதிகம் ஈர்க்கிறதோ அது நம்மை அதிக பாதிப்புக்கு உள்ளாகும். அது எதுவாக இருந்தாலும், சரி அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதுபோல் எதையும் நாம் அளவோடு வைத்துக்கொள்ள வேண்டும். அது அன்பாக இருந்தாலும் சரி, ஆசையாக இருந்தாலும் சரி.
Wednesday, 26 August 2015
Tuesday, 25 August 2015
புரியாத புதிர் குட்டிக் கதை
ஒரு குட்டி கதை உங்களுகாக:
ஒரு காட்டுல குயிலும், மைனாவும் நீண்ட காலமாக நண்பர்களா இருந்தாங்க. இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்கிற நல்ல நட்பு அவர்களிடம் இருந்து. மற்றவர்கள் பொறாமை படும் அளவுக்கு. ஒரு நாள் அதற்கும் சோதனை வந்தது அன்றாடம் வழக்கமாக பேசிக்கொள்ளும் இவர்களுக்குள் ஏனோ சிறு இடைவெளி விழுந்தது. குயிலின் பேச்சு குறைந்தது.
ஒரு காட்டுல குயிலும், மைனாவும் நீண்ட காலமாக நண்பர்களா இருந்தாங்க. இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்கிற நல்ல நட்பு அவர்களிடம் இருந்து. மற்றவர்கள் பொறாமை படும் அளவுக்கு. ஒரு நாள் அதற்கும் சோதனை வந்தது அன்றாடம் வழக்கமாக பேசிக்கொள்ளும் இவர்களுக்குள் ஏனோ சிறு இடைவெளி விழுந்தது. குயிலின் பேச்சு குறைந்தது.
Sunday, 23 August 2015
உன்னால் முடியும் வாங்க சாதிக்கலாம்
அப்துல் கலாம் கடைசியாக சொன்ன வார்த்தை டிவி பார்க்காதீர்கள் வீட்டுக்கொரு நூலகம் அமையுங்கள் என்றார். அவரின் கனவை நினைவாக்குவோம் என்று பலர் வாக்கு கொடுத்திருக்கிறார்கள். அதில் எத்தனை பேர் அவர் சொன்னதை கொஞ்சமாவது கடைப்பிடித்தீர்கள்?
Saturday, 22 August 2015
பாலியல் வன்முறைகளை தடுக்க எளிய வழி
பாலியல் வன்முறைகள் ஆங்காங்கே நடக்கிறதே என்று ஆதங்கப்படும் பெண்களா நீங்கள்? நமது தங்கையோ? அக்காவோ? குழந்தைகளோ? எப்படி பயமில்லாமல் அனுப்புவது என்று கவலைப்படும் பெண்களா நீங்கள்? காம கொடூரங்களைக் கண்டு கொந்தளிக்கும் சமூக அக்கறையுள்ள பெண்களா நீங்கள்? வாருங்கள் ஒன்றாக இணைந்து ஆபாச ஆசாமிகளை வளைத்துப் பிடித்து வேறோடு அழிப்போம்.
Friday, 21 August 2015
சில நேரங்களில் சில மனிதர்கள்
சில நேரங்களில் சில மனிதர்கள் புத்தகத்தை முதல் முறையாக அதை தொடுகிறேன். இந்த புத்தகத்தில் அப்படி என்ன இருக்கிறது என்று புரட்டி பார்க்கிறேன். எடுத்த உடனே முன்னுரையை படிக்கிறேன். அதில் அந்த கதையின் ஓட்டத்தை ஜெயகாந்தன் விவரிக்கிறார். இந்த கதை சிலருக்குப் பிடிக்கலாம், பிடிக்காமலும் போகலாம். இந்த கதையில் வரும் கதாபாத்திரங்களை போல் சிலர் இருக்கலாம், அல்லது இனிமேல் இருக்க கூடும் என்கிறார். அப்படி என்ன கதாபாத்திரம் என்று பக்கத்தைப் புரட்டுகிறேன். படிக்க... படிக்க.. ஏதோ ஒரு கணம் சுமை மனதில் ஏறுகிறது. அதில் வருகிற கதாபாத்திரம் போல் சற்று மாறுபட்ட கதாபாத்திரம் எனக்குத் தெரிந்த ஒரு கதாபாத்திரம் அந்த கதையை ஒட்டியே வந்து போகிறது.
Saturday, 15 August 2015
இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி...
எப்பொழுதும் உனது படங்களை
ரசித்த நான்!
முப்பொழுதும் உன்
நினைவுகளை சுமந்த நான்
முதல் முறையாக எனது
படங்களை ரசிக்க தொடங்கிவிட்டேன்..!
ரசித்த நான்!
முப்பொழுதும் உன்
நினைவுகளை சுமந்த நான்
முதல் முறையாக எனது
படங்களை ரசிக்க தொடங்கிவிட்டேன்..!
Wednesday, 5 August 2015
அன்பு என்றால் என்ன?
அன்பு என்றால் என்ன? அது எப்படி ஏற்படுகிறது? என்று எல்லோருக்குமே ஒரு கேள்வி எழும். நாம் காட்டும் அன்பு நிராகரிக்கப்படும்போது அல்லது நம்மை ஒதுக்கி வைக்கும்போதும். அன்பு காசு கொடுத்து வாங்கும் ஒரு பொருளா? இல்லை, அது ஒரு உணர்வு. காசோ, பணமோ, பொன்னோ, பதவியோ எதையாலும் வாங்க முடியாத ஒரு அற்புதமான உணர்வு. இது ஜாதி, மதம் பார்த்து வருவதில்லை. காசு, பணம் பார்த்து வருவதில்லை. ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு பார்த்து வருவதில்லை. "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்" என்ற வள்ளுவனின் கூற்றுபடி எங்கும் நிறைந்த ஒன்றுதான் அன்பு. அது எதையும் எதிர்பார்த்தோ அல்லது எந்த பயன்கருதியோ வருவதில்லை.
Tuesday, 4 August 2015
குழந்தை மனசு
அன்று...
நீ எல்லையை கடந்து
மேகத்தில் நுழைந்து
காற்றை கிழித்து
என் இதயத்தில் குடிபுகுந்தாய்..!
நீ எல்லையை கடந்து
மேகத்தில் நுழைந்து
காற்றை கிழித்து
என் இதயத்தில் குடிபுகுந்தாய்..!
Sunday, 2 August 2015
இலங்கை வானொலியும் நானும்
இலங்கை வானொலி பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதற்கு நானும் விதிவிலக்கு அல்ல. நடிகர் சத்தியராஜ் அவர்கள் பேசுவதை கேட்டுயிருக்கிறீர்களா? அவர் பேட்டிகளில் உண்மையை பட்டு பட்டென்று போட்டு உடைப்பார் எனக்கு அது ரொம்ப பிடிக்கும். ஆனால் அந்த மாதிரி பேசுவது சிலருக்கு பிடிக்காது. அவர் போல நானும் பேசப்போறேன். ஹா.. ஹா... அவர் ஒரு பேட்டியில் சொல்வார் " நடிகன் படத்தில் நடிக்கிறதை விட நிஜத்தில்தான் அதிகம் நடிக்கிறாங்கன்னு சொல்வார். ஏன்னா மேடையா இருந்தாலும் சரி, நேரில் இருந்தாலும் சக நடிகரை பார்க்கும்போதும், ரசிகர்களை பார்க்கும்போதும் வாய்கூசாமல் சில வார்த்தைகளை அள்ளிவிடுவாங்களாம். இதில் இன்னொரு காமெடி என்ன தெரியுமா? "உண்மையயை மட்டும் பேசுற மைக்கை எவனாவது கண்டுப்பிடிச்சா உலகத்துல ஒருத்தன் கூட உயிரோடு இருக்கமாட்டான் பேசுறவன் அத்தனைப் பேரும் செத்துபோயிடுவான்" ஏன்னா பேசுறது அத்தனையும் பொய்னு சத்தியராஜ் சொல்வார். அது உண்மைதானே? அது சினிமாவில் மட்டுமல்ல எல்லாத்துறைகளும் அப்படித்தான்.
Subscribe to:
Posts (Atom)