Monday, 17 November 2014

கீதை-12

           உபாசகர்கள் இரண்டு வகை தான் வேறு இறைவன் வேறு என்று நினைப்பவருக்குப் பகவான் தனியொரு வடிவில் காட்சி தந்து, அருள்புரிகிறார்.

          தானும் பரமாத்மாவும் ஒன்றேயெனக் கொண்டவருக்கு பகவான் ப்ரம்மஜோதியாய் நின்று அருள்புரிகிறார்.

                அவரே உருவமுள்ளவர்ஸகுணர்
                அவரே உருவமற்றவர் - நிர்குணர்

          எப்படிப் பார்க்கிறோமோ அப்படித் தெரிவார்.

   யார் அடைந்தவோ அவர் அறிகிறார்.
   யார் அறிந்தவடோ அவர் அடைகிறார்.

                              -முற்றும்-


 

( கீதை பிறந்த கதை என்ற சிறு முன்னோட்டத்தை வாசகர்களுக்கு தொடராக பதிவு செய்து வந்தேன். வாசித்த உள்ளங்களுக்கு எனது நன்றிகள். கீதையை படித்தால் என்ன அனுகூலம் என்பதை விளக்கும் சிறு முன்னோட்டம் கீதை ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டிய நூல்.)

தலவிரிச்சம்

வீசிப்போன புயலில்
விழுந்த வேர் நான்
 தொலைந்து போவேனென்று
 நினைத்தாயோ..!
தலவிரிச்சமா வளர்ந்து
 உனக்கு நிழல் கொடுப்பேன்..!

Sunday, 16 November 2014

கீதை-11

           கீதை வாசிப்பு ஒரு ஞானவேள்வி. நாம் இன்னொரு வேள்வி நடத்த வேண்டியதில்லை. வாசிப்புக்கே அத்தனை மகத்துவம் என்கின்றபோது, வாசித்தபடி வாழவும் தொடங்கிவிட்டால்..!

           பகவான் உரைத்த கட்டளைகள் 'கீதோபதேசம்' அந்த உபதேசத்தைக் கடைப்பிடிக்கிறவர் பகவானுக்குப் பிரியமானவராவர். கீதையில் பகவானுடைய சுவாச ஸ்பரிசம் நமக்குக் கிடைக்கின்றது. அதுமட்டுமா அவரைத் தரிசிக்கவும், அவருடன் உரையாடவும் கூட முடிகிறது. 

            'வேள்வி பலனும், விரத பலனும்
             தான பலனும், தவப் பலனும்
             கீதையை வாசிப்பவருக்கு
             ஒருசேரக் கிடைத்துவிடுகிறது'

        உலகம் பகவானுடையது. அவனுடைய கருவி நாம் இதில் எந்த லாபமும் நமக்கில்லை, அப்படியேதான் எந்த நஷ்டமும் நமக்கில்லை. லாபநஷ்டமில்லை என்கின்ற போது அதுபற்றி சந்தோஷப்பட என்ன இருக்கிறது, வருத்தப்படத்தான் என்ன இருக்கிறது? மனதைச் சமநிலையில் வைத்திரு என்கின்றது கீதை. காரியம் நம்முடையதில்லை என்கின்றபோது அதன் விளைவுகள் பற்றி நாம் யார் கவலைப்பட?

                                                       -தொடரும்

கீதை -10

          நாம் மூழ்கி எடுக்கின்ற ஒவ்வொரு முறையும் புதுப்புது முத்துக்கள்! புதுப்புது பொருள்கள்!

        சொல் புதிது, பொருள் புதிது என்பதோடு அதன் சுவையும் புதிதுதான் சுவைக்கின்ற ஒவ்வொரு முறையும்.

        கீதையின் ஒவ்வொரு வரியும் ஒரு நன்னெறியைச் சொல்கிறது. இது பகவானுடைய விஷயம். இதில் விஞ்சி நிற்பது சொல்லா, பொருளா, சுவையா என்று நாம் ஆராயக் கூடாது.

       கீதை வாசிப்பு வியாசர் இப்படிக் கூறுவார்:

        'கீதா ஸுகீதா கர்தவ்யாகி மந்யை
         காஸ்த்ர ஸங்கிரஹை!
         யா ஸ்வயம் பத்மநாபஸ்ய
        முக பத் மாத் விநி : ஸ்ருதா' என்று.

         கீதையை நல்லவிதமாய் கேட்கவும், பாடவும் செய்ய வேண்டும். படிக்கவும், கற்பிக்கவும் செய்ய வேண்டும். மனதில் பதிக்க வேண்டும். பகவான் பத்நாபரின் முகக் கமலத்திலிருந்து வெளிப்பட்டது.

 நாம் கீதையை ஓதி உணர்ந்தபின் வேறெந்த நூலும் அவசியப்படாது. கங்கையில் மூழ்கியெழுந்தவன் தன்னைத்தான் தூய்மைப்படுத்திக் கொள்கிறான். தனக்கு மட்டுமே அனுகூலமாயிருக்கிறான்.

        கீதையில் மூழ்கி எழுந்தவனோ தன்னை மட்டுமின்றி, உலகத்தையே தூய்மைப் படுத்துகிறான். தனக்கு மட்டுமின்றி, தான் வாழும் சமுதாயத்துக்கே அனுகூலமாகிறான்.

                                           -தொடரும்

Saturday, 15 November 2014

மருத்துவம்/குதிகால் வெடிப்பு நீங்க

         மருதோன்றி இலையை நன்றாக அரைத்துத் தினமும் படுக்கும்போது குதிகால் வெடிப்பு உள்ள பாகங்களில் தடவி வந்தால் சில நாட்களில் குதிகால் வெடிப்பு குணமாகிவிடும்.

         விளக்கெண்ணையில் தேவையான சுண்ணாம்பைக் கலக்கி வைத்துக் கொண்டு குதிகால் வெடிப்புகளில் அடிக்கடி தடவி வந்தால் குதிகால் வெடிப்புக் குணமாகிவிடும்.

Friday, 14 November 2014

கீதை-9

            பரமாத்மா ஆனந்தம, பக்திகாந்தம. அது ஜீவாத்மாவை ஈர்க்கின்றது, எல்லையற்ற ஆனந்தத்தில் ஜீவனை இணைக்கிறது.

           பதின்மூன்று முதல் பதினெட்டு அத்தியாயங்கள்வரை பேசப்படுவது ஞானயோகம. ஞானம் அறிவொளி. அஞ்ஞான இருட்டை அகற்றுவது. ஞான யோகத்தின் மூலம் சாதகன் சித்சொரூபத்தை அடைகின்றான். ஜீவானுபவத்தின் உச்சம் அது.

           'நீயும் நானும் ஒன்று
            நாம் வேறு வேறு அல்ல'
என்பதை உணர்த்துவது.

          வாழ்க்கையின் குறிக்கோள் முக்தி. முக்திக்கும் வழிகாட்டும் கீதை. எத்தனையோ மகான்களும், மேதைகளும் கீதைக்கும் உரையாசிரியர்கள். வரிகள் மாறின, பொருள் மாறவில்லை. உண்மை அப்படியே மாறாதிருக்கிறது.

                      கீதையின் அவசியம்

   
             கீதை- பகவான் உரைத்தது. மனிதர்களின் வார்த்தைக்கே மகாசக்தி உண்டென்கின்ற போது, பகவானின் வார்த்தைக்கு எவ்வளவு சக்தி இருக்க வேண்டும்.

           எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே எளிமையாய்ச் செய்யப்பட்டது.

         கடலைப்போல் அகண்டதாய், ஆழமுடையதாய் இருக்கிறது கீதை. அது உப்புக் கடலல்ல உண்மைக் கடல். நாம் வாழ்க்கை முழுவதும் அள்ளியள்ளி எடுத்தாலும் அத்தனையும் கைக்கு வராது.

                 கடலளவு கடலளவுதான்
                 கையளவு கையளவுதான.

¤முகநூல்¤ சிறுகதை

         "ஏய்... பவித்ரா மணி என்ன? அம்மா அதட்டலாக கேட்டாள்.

         "மணி 12 உங்களுக்கு மணி பார்க்கத் தெரியதா?"

         "அது எனக்குத் தெரியும் மணி 12 ஆகுது தூங்காம அப்படி என்னடி பேஸ்புக்ல பார்த்துட்டு இருக்க"

          "ஒரு ட்ராயிங் போட்டேன் ஒரு ஸ்டெட்டஸ் போட்டேன் லைக்கும், கமான்ஸ்ம் போட்டு இருக்காங்க அதான் தேங்க்ஸ்னு ரிப்ளே பண்ணிட்டு இருக்கேன்"

          "ஏன்டி உனக்கு அறிவு இருக்கா எப்ப பாரு பேஸ்புக் பேஸ்புக்" "நீங்களும் இதுல அக்கவுண்ட் வைச்சு பாருங்க அப்றம் இப்டி சொல்லமாட்டிங்க. நான் ஒரு கருத்து சொன்னா நூறு லைக் விழும் ஐம்பது கமான்ஸ் விழும் இதெல்லாம் உங்ககிட்ட சொன்னா நீங்க கண்டுக்கவே மாட்டிங்க அதனாலதான் பேஸ்புக் போறேன் இது ஒரு தனி உலகம்மா இதுல விழுந்துட்டா திரும்பி வர மனசே வராது. இதுல தான் அம்பானிக்கும் ப்ரண்ட் ரிக்ஹொஸ்ட் கொடுக்கலாம்."

          "ஏதோ எக்ஸாம் இருக்குன்னு அப்ளிக்கேஷன் போட்டியே ஏதாவது படிச்சியா? முதல்ல இந்த நெட்கார்டு போட்டு பார்க்கிறீயே அது உன்னோட காசு இல்ல முதல்ல நீ சொந்த கால்ள நில்லு அதுக்கப்புறம் உன் சொந்த கருத்தைப் போடு உனக்கே சொந்த காலில் நிக்க தகுதி இல்லாதப்ப நீ மத்தவங்களுக்கு எப்படி கருத்து சொல்வ.

¤சந்தியா¤ சிறுகதை

           காலை நேரமது யூனிபார்ம் அணிந்த பிள்ளைகள் ஸ்கூலுக்கு வேகமாக சென்று கொண்டிருந்தனர். ஆய்சா மட்டும் வருகின்ற ஒவ்வொரு பஸ்சையும் விட்டுவிட்டு தூரத்தில் பார்வையை போட்டப்படி நின்றுக்கொண்டிருந்தாள்... அவள் பார்வை யாருக்காவோ வெயிட்டிங் என்பதை சொல்லாமல் சொன்னது. அடிக்கடி கடிகாரத்தை பார்ப்பதும் எரிச்சலாக தூரத்தை வெறிப்பதுமாக இருந்தவளின் பிரகாஷமானது...

          "ஹாய்... ஆய்ஷா! என்ன ரொம்ப நேரமா அய்யாவுக்காக வெயிட்டிங்கா..." என்றபடி வண்டியை நிறுத்தினான் குமார்.

            "இல்லைங்க சார்... வந்து அஞ்சு நிமிஷம் தான் ஆகுது என்று நக்கலாக கூறிவிட்டு இன்னும் கொஞ்ச நேரம் லேட்டா வந்திருந்தா பஸ் புடிச்சு ஆபிஸ் போயிட்டு உனக்கு ஒரு குட்பாய் சொல்லிட்டு போயிருப்பேன்.."

           "சாரிம்மா... சாரி.. ரியலி வெரிசாரி கொஞ்சம் லேட்டாயிடுச்சு அதுக்கு இத்தனை கோபமா..? அங்காளபரமேஸ்வரியே நேரில் பார்த்த மாதிரி இருக்கு சீக்கிரம் வண்டியில ஏறி உக்காரும்மா உன்னை ஆபிஸ்ல விட்டுட்டு போறேன்..."

Thursday, 13 November 2014

கீதை-8

        பகவத் கீதை ஒரு சுருதி என்பது எத்தனை உண்மையோ, அத்தனை உண்மை அது ஒரு ஸ்மிருதி என்பதும். அதன் பொருள் அவரவர் திறத்துக்கேற்ப விரித்துரைக்கப்படுகிறதேயின்றி, வரிகள் திருத்தி அமைக்கப்படவில்லை என்பது கீதையின் சிறப்பு.

          கீதையில் பதினெட்டு அத்தியாயங்கள் உள்ளன என்று முன்பே குறிப்பிட்டோம். முதல் ஆறு அத்தியாயங்கள் கர்மயோக தத்துவத்தைப் பேசுகிறது. நாம் எதை எண்ணுகிறோமோ அதைச் செய்கிறோம். உறுதி பெற்ற எண்ணம் சங்கற்பம. தீர்மானம் செயல் வடிவம் எடுக்கின்ற நிலை கர்மம். வாழ விரும்புவது சங்கற்பம், வாழ்வது கர்மம்.

         உணர்வுகளை கர்மத்தின் ஆதார சுருதி. உணர்வுகளில் இரண்டு வகை.

      நேர்மறை உணர்வு - விரும்பத்தக்கது  
      எதிர்மறை உணர்வு - விலக்கத்தக்கது.

           விருப்பம், நட்பு, ஆசை, பொறுமை போன்றவை நேர்மறை உணர்வுகள் ஆகும். வெறுப்பு, பகை, சினம், பொறாமை போன்றவை எதிர்மறை உணர்வுகள் ஆகும்.

          ஏழு முதல் பன்னிரண்டு அத்தியாயங்கள் வரை சொல்லப்பட்டது. பக்தியோகம்.

        அன்பின் இன்னொரு பரிமாணம் பக்தி. அது தூய்மையே வடிவாய்க் கொண்டது. பக்தியில் கெட்டது நல்லதாகும். நல்லது மிக நல்லதாகும்.

பார்வைகள்

எண்ணங்கள் எழுத்துக்களாக
வண்ணங்கள் ஓவியங்களாக
சிதறிக்கிடக்கிறது இங்கே
ரசிப்பதற்கு ஆளின்றி..!

மருத்துவம்/இரத்த சோகை நீங்க

                          இரத்த சோகைக்கு


            கீழா நெல்லிச் சமுலத்தைப் பாலில் அரைத்துப் பாலில் கலக்கி உண்டு வந்தால் சோகை, காமாலை, உடல் வெளுப்பு, வாத பித்தம் நீங்கும், இரத்தம் அதிகரிக்கும், கண் குளிரும்.

          மஞ்சள் பூ கரிசலாங்கண்ணி சமுலத்தை மோரில் கரைத்து தினம் காலை மட்டும் சாப்பிட்டு வந்தால் சோகை நீங்கிவிடும்.

         அயச் செந்தூரத்தைத் தேனில் கலந்து தினம் 2 வேளை கொடுக்கலாம்.

         சுமார் 3 சிறிய பீட்ருட் கிழங்கை எடுத்து இடித்து வடிகட்டி சாறு பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்தச் சாற்றுடன் 4 டீஸ்பூன் தேன் கலந்து காலையில் தினம் வெறும் வயிற்றில் 22 நாளைக்கு சாப்பிட்டால் சோகை நீங்கி, சுறுசுறுப்பு உண்டாகும்.

Wednesday, 12 November 2014

கீதை-7

                        கீதையின் சிறப்பு
         வேதங்களின் பொருளை கீதையில் காணலாம். அனைத்து உபநிடதங்களின் சாரமும் கீதையில் வாழ்வின் நெறிகளை முற்றாக உரைப்பது, சராசரி மனிதனுக்கும் பயன்படும, ஆன்மிக சாதகனுக்கும் பயன்படும். பக்குவங்கள் அனைத்தும் கொண்டது. இதில் சொல்லப்படாத தத்துவமே இல்லை.
 
            உடல், மனம், ஆன்மா சம்பந்தப்பட்டது யோகம். கீதை ஒரு யோக சாஸ்திரம்.

            பதினெட்டு யோகங்களை பதினெட்டு அத்தியாயங்களில் சொல்லியிருக்கிறார் வியாசர். கர்மயோகம், ராஜயோகம், பக்தியோகம், ஞானயோகம் என்று பிரதானமாய் அறியப்படும் நான்கு யோகங்களே இவ்விதம் விரித்துரைக்கப்படிருக்கிறது. கர்மத்தில் இருந்து ஞானம் இது மனித மனம் அடைகின்ற பரிமாணங்கள்.

         யோகம் என்பது என்ன? செயலில் திறமை வாய்க்கப் பெற்றிருப்பது.

       ஆத்மா சத்தாகவும், சித்தாகவும், ஆனந்தமாகவும் விரவி நிற்கிறது. ஆத்மாவின் சொரூபம் கீதை.

        பரம்பரை தொட்டு, செவிவழி கேட்டுக் காப்பாற்றி வைத்த விஷயம் சுருதி எனப்படும். சொல்லும் பொருளும் மாறாதிருக்கும். ஞாபகத்தில் வைத்துக் கொள்ளப்பட்ட விஷயம் ஸ்மிருதி எனப்படும். சமூக வாழ்வு சம்பந்தமான கட்டுப்பாடுகளும், சட்ட திட்டங்களும் இதில் சொல்லப்படிருக்கும். இது காலத்துக்கேற்ப மாறும். காலம், இடம், சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவ்வப்போது மேலோரால் திருத்தி அமைக்கப்படும்.

                                             -தொடரும்

மருத்துவம்/நரை மாறுவதற்கு

நன்னாரி வேர் பச்சையாகக் கொண்டு வந்து கொட்டைப் பாக்களவு எடுத்து அரை டம்ளர் பசுவின் பாலில் கலக்கி ஒரு மாதம் சாப்பிட சுமார் 3 மாதங்கள் தொடர்ச்சியாய் சாப்பிட்டு வந்தால் நரை தோன்றாது.