Wednesday 9 September 2015

இந்தியா வல்லரசு ஆகும் அரசு நினைத்தால்

           நம்ம இந்தியா வல்லரசு ஆகும் வல்லரசு ஆகும்னு எல்லோரும் ஒரு பக்கம் கனவு காணுறாங்க. இன்னொரு பக்கம் இந்தியா ஏழை நாடு என்று ஒரு பக்கம் விமர்சனம் பண்றாங்க. இதற்கு என்ன செய்யலாம்? ஒன்று ஒவ்வொரு குடும்பத்திலும் கட்டாயம் ஒருவருக்கு வேலைவாய்ப்பை அரசு கொடுக்க வேண்டும். அல்லது ஒரு குடும்பத்திற்கு ஒரு கோடி நிதி உதவி கொடுத்தால் இந்தியா ஏழை என்று யார் சொல்ல முடியும். அந்த குடும்பங்கள் அதை வைத்து தனது வளத்தை பெருக்கிக் கொள்ளும் புதிய தொழில்த்துறைகள் முளைக்கும் அனைவரும் முன்னேற்ற பாதையில் செல்வார்.


              கொலை குற்றங்கள் நடக்காது, வேலையில்லா திண்டாட்டம் ஒழியும், வறுமை இருக்காது, முதலில் பிச்சைக்காரர்கள் இருக்கமாட்டார்கள், குடிசையில்லாத இந்தியாவாக இருக்கும், டாய்லெட் இல்லாத வீடுகளை காண முடியாது. யாரும் வெட்டியா சுத்தமாட்டான் அப்புறம் எங்கே குற்றங்கள் நடக்கும்? அதிக குற்றங்கள் நடப்பதற்கு காரணம் பணம் குறைபாடுதான் அந்த பணம் மட்டும் ஒவ்வொருத்தரிடம் இருந்துவிட்டால் திருட்டு பயமே இல்லை. இன்று அதிக கொலை நடப்பது கூட திருட்டால்தான்.  இவை எல்லாவற்றுக்கும் காரணம் பணம் தான் அந்த பணம் ஒவ்வொருத்தர் கையிலும் இருந்தால் குற்றங்கள் நடக்க வாய்ப்பே இல்லை.

             இந்தியா அமைதியான நாடாக மாறும், தொழில்துறையில் மிகப்பெரிய முன்னேற்றம் வரும் இந்தியா வல்லரசு நாடாகும் அரசு மனசு வைத்தால். அங்கே 100 கோடி ஒதுக்கி இருக்கோம் இங்கே 50 கோடி ஒதுக்கி இருக்கோம் என்று அரசு அறிக்கை வெளியிடுகிறது. ஆனால் அவ்வளவு மக்கள்தொகை கூட நம் இந்தியாவில் இல்லை அதில் குடும்பத்திற்கு ஒரு கோடி ஒதுக்கினால் நம் இந்தியா எங்கேயோ போய்விடும். அரசு அதன் எந்த இலவசங்களையும் கொடுக்கத் தேவையே இல்லை. ஓட்டு வாங்கதானே இலவசங்களை தருகிறீர்கள்? இந்த பணத்தை மட்டும் கொடுத்துப் பாருங்கள் பிறகு நீங்கள் தான் நிரந்தர முதல்வர்! நீங்கள்தான் நிரந்தர பிரதமவர்! உங்களை யாரும் அசைக்க முடியாது.  எது எதற்கோ நிதி ஒதுக்கி அவஸ்த்தைப்பட்டு, பதவியை தக்க வைத்துக்கொள்ள அள்ளல்படும் நீங்கள் இப்படி செய்து பாருங்களேன். எவனும் கேள்வி கேட்கமாட்டான் இந்தியா முன்னேறுவதில் அவனும் காரணமாக இருக்கிறான். இதை மட்டும் அரசு செய்தால் நமது இந்தியா ஜொலிக்கும் இந்தியாவை போல் வேற நாடு உலகத்தில் காணமுடியாது.

          அப்துல்கலாம் கனவு காண சொன்னார் என்னுடைய கனவு இப்படி இருக்கிறது. கனவு பலிக்குமா? இந்தியாவின் மக்கள்தொகை கோடியில் இருக்கிறது ஆனால் ஒவ்வொரு குடும்பமும் பொருளாதரத்தில் தெருக்கோடியில்தான் இருக்கிறது. இதற்கு அரசு செய்ய வேண்டியது என்ன?

"ஒரே ஒரு அறிக்கை ஓகோ ன்னு வாழ்க்கை"

#ஸ்ரீசந்திரா.

3 comments:

  1. குடும்பத்தில் ஒருத்தருக்கு வேலை இது சரி ,குடும்பத்துக்கு ஒரு கோடி நிதி கொடுத்தால் வேலைக்கு யார் போவா ? எங்கேயோ ஒதைக்குதே !!!!!

    ReplyDelete
  2. எல்லோரிடம் பணம் இருந்தால் யார் வேலை செய்வார்கள் என்பதுதானே உங்கள் கேள்வி? அப்ப பணக்காரர்கள் உழைக்காமல்தான் இருக்கிறார்களா விமல்? ஒருத்தனிடம் பணம் இருந்தால் அதை வைத்து அவன் என்ன செய்வான் என்பது அவன் திறமையை பொருத்து இருக்கிறது.

    ReplyDelete
  3. நாம் இப்போது வெளிநாட்டில் போய் வேலை செய்கிறோம். அதன் பிறகு வெளிநாட்டவர்களை நம் நாட்டில் வேலைக்கு அமர்த்துவோம். ஆட்களுக்கா பஞ்சம். அப்படி சிந்தியுங்கள் விமல் நம்ம தமிழர்களின் பிரச்சனையே என்ன தெரியுமா? எப்படி யோசித்தாலும் அதை அணைபோடுவதற்குதான் அதிகம் சிந்திக்கிறான்

    ReplyDelete