Wednesday, 8 June 2022

துவரங்குறிச்சி மாரியம்மன் கோவில் திருவிழா

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், துவரங்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பராசக்தி மாரியம்மன் கோவில் திருவிழா தீமிதியல் காண கீழே உள்ள லிங்கை அழுத்தவும்



https://youtu.be/oArDjoxv_NQ

Tuesday, 29 March 2022

மை யூ டியூப் சேனல்

இது என்னுடைய https://youtube.com/c/Srichandra3 சேனல் இதில் எங்க தஞ்சாவூர் முறைப்படி சமையலும், மருத்துவம் சார்ந்த பதிவுகளும்,  பாட்டும் என பன்முக வீடியோக்களை பதிவு செய்கிறேன் இனிமேலும் செய்யப் போகிறேன் அதற்கு உங்களுடைய முழு ஆதரவும் எனக்கு வேண்டும். 

இந்த வலைப்பூ எப்படியோ அதே போன்றுதான் யூடியூபும் கிரியேட்டர்கள் தங்களது நேரத்தை பயனுள்ள வகையில் மாற்ற இது சிறந்த இடமாக கருதுகிறேன். இந்த சேனல் உங்களுக்குப் பிடித்திருந்தால் சைப்ஸ்கிரைப் செய்யுங்கள். வீணாக பொழுதை கழிக்காமல் இது போன்ற செயலில் ஈடுபடுவது மனதிற்கு மகிழ்ச்சி மட்டுமல்ல பயனுள்ள விஷயமும் கூட. 

யாரெல்லாம் சப்ஸ்கிரைப் செய்யப் போறீங்க உங்களுடைய ஒவ்வொரு பார்வையும் சப்ஸ்கிரைபுகளும் எங்களுக்கு ஊக்கமளிக்கும். 

நன்றி... 

Wednesday, 2 March 2022

வெங்காய குழம்பு செய்வது எப்படி

வெங்காய குழம்பு எப்படி செய்யுறதுன்னு கீழே இருக்கிற லிங்கை அழுத்தி தெரிந்துகொள்ளவும். செய்வது ஈசி சுவை அதிகம்






https://youtu.be/ATp4KM4frfc

Sunday, 27 February 2022

வெள்ளாம்பொடி மீன் குழம்பு

ரொம்ப ருசியான மீன் வகைகளில் இந்த வெள்ளாம்பொடி மீனும் ஒன்று. 




https://youtu.be/Us5xq5MKrKQ

Thursday, 24 February 2022

உருண்டை குழம்பு






உருண்டை குழம்பு

https://youtu.be/IyjhHUi3q0M

சம்பா நண்டு குழம்பு


சம்பா நண்டு குழம்பு 

தேவையான பொருட்கள்: 

1. சம்பா உயிர் நண்டு
2. தக்காளி
3.சின்ன வெங்காயம்
3.பூண்டு, மிளகு, சோம்பு (தேங்காய் துறுவலோடு அரைக்க)
4.பச்சை மிளகாய்
5.குழம்பு மசாலா
6. தேங்காய் அரைத்தது சிறிது
7. சோம்பு (தாளிக்க)
8.எண்ணெய் தேவைக்கேற்ப
9.உப்பு தேவைக்கேற்ப
10.கறிவேப்பிலை

(முருங்கைக்காய், உருளைக்கிழங்கு )சேர்த்தால் நல்லா இருக்கும் நம் விருப்பம்தான்.
செய் முறை; கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்

Thursday, 21 October 2021

புளியில்லா குழம்பு

புளியில்லா குழம்பு செய்வது எப்படி? கறிக்குழம்பை போல் சூப்பரா இருக்கும்.

தேவையான பொருட்கள்: 

1. தக்காளி
2.உருளைக்கிழங்கு
3 . முருங்கைக்காய்
4. சின்ன வெங்காயம்
5. சோம்பு
6. தேங்காய் துறுவல்
7.குழம்பு மசாலா
8. எண்ணெய்
9.உப்பு தேவைக்கேற்ப

செய்முறை:

 கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்

Sunday, 20 June 2021

ஞாயிற்றுக்கிழமையும் மீன் குழம்பும்

 வாரத்துல ஒரு ஞாயிற்றுக்கிழமையில் மீன் குழம்பு வைக்கும் சம்பவம் இருக்கே...



"ஸ்ரீ... என்ன மீனு வாங்கிட்டு வந்தே.." லெட்சுமி அம்மா.


"ம்... கெண்டை மீன் தான் இருந்துச்சு உயிர் மீன் .."


"குளத்துக்கெண்டையா? வளர்ப்பு கெண்டையா? "


"குளத்துக்கெண்டை தான் நான் பார்த்துதான் வாங்கிட்டு வந்திருக்கேன்"

Monday, 11 May 2020

சளி இருமலுக்கு சிறந்த மருந்து

நாள் பட்ட சளி இருமலுக்கு சிறந்த மருந்து வெற்றிலை கசாயம் கீழே இருக்கும் லிங்கை க்ளிக் செய்து செய்முறை தெரிந்து கொள்ளுங்கள்..

Saturday, 18 April 2020

காற்றின் மொழி

        வணக்கம்...நேயர்களே இப்போது நீங்கள் கேட்டுக்கொண்டு இருப்பது நேயர் விருப்பம்.. நேரம் இப்போது சரியா காலை 9 மணி 55 நிமிடம் ஆகிறது. நிகழ்ச்சியின் நிறைவு பகுதிக்கு வந்துவிட்டோம் இப்போது லைன்னில் ஒரு நேயர் காத்திருக்கிறார்... "வணக்கம் .. வணக்கம் .. லைன்ல இருக்குறீங்க பேசுங்க...  யார் எங்கிருந்து பேசுறீங்க..?"

"வணக்கம் ... வணக்கம்... அக்கா..  மருதமுனையில் இருந்து நிஷாந்தன் கந்தையா கதைக்கிறன் ரொம்ப நாளா ட்ரைப் பண்ணிட்டு இருந்தனான் லைன் கிடக்கல இன்றைக்குத்தான்  கிடைச்சிருக்கு ரொம்ப சந்தோஷம் அக்கா  உங்கட வாஸ் என்றால்  எனக்கு ரொம்ப இஷ்டம் அக்கா உங்க நீண்ட கால ரசிகன் அக்கா.. "

"அப்படியா... ரொம்ப சந்தோஷம் நிஷாந்தன் சரி சொல்லுங்க உங்களுக்கு என்ன பாட்டு வேணும்..?" என்றாள் சரித்தபடி

"அக்கா... வசீகரா படத்துல இருந்து பூப்போல தீ போல மான் போல மழைப் போல வந்தாள்
சாங் தருவிங்களா?"

"சரி நிஷாந்தன் யார் யாருகெல்லாம் பாடல் வேண்டும்..."

 "எனக்காகவும் எங்கட குடும்பத்தார் நண்பர்கள்,ரேடியோ கேட்டுக்கொண்டிருக்கும் அனைவருக்கும் கேட்போம் அக்கா உங்க கூட கதைச்சதில் ரொம்ப சந்தோஷம்  அக்கா..நன்றி" எனக்கூறியபடி தொடர்பு துண்டிக்கப்பட்டது.

"நிஷாந்தன் நீங்க கேட்டப் பாட்டு இதோ வந்துட்டு இருக்கு இப்போது நான் விடை பெறும் நேரமும் வந்திடுச்சு உங்களிடம் இருந்து விடைப் பெற்றுக்கொள்ளும் நான் கெளரி வணக்கம் நேயர்களே... என்று கூறியபடி ஒலிநாடாவை சுழலவிட்டு ஸ்டியோவை விட்டு வெளியே வந்தாள் கெளரி..

Wednesday, 14 November 2018

ஜுரம் , தலைவலி, உடம்பு வலிக்கு சிறந்த மருந்து

ஜுரம், தலைவலி, உடம்பு கை கால் மூட்டு வலிக்கு சிறந்த  பெருமருத்து ரசம்....

தேவையான பொருட்கள் :

கண்டதுப்பிலி - சிறிது
சதகுப்பை - சிறிது
அரத்தை - சிறிது
சீரகம் - சிறிது
மிளகு - சிறிது
முழு பூண்டு - 1
தக்காளி -  2
பச்சைமிளகாய் - 4
மஞ்சள் - சிறிது
பெருங்காயம் - சிறிது
உப்பு - தேசையான அளவு
புளி - சிறிது

(இதோடு மொழிக்கிழங்கு வேரையும் சேர்த்து இருக்கேன் அது கிடைக்காதவர்கள் மற்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்)

Friday, 3 August 2018

வாழ்க்கையின் தத்துவம்

இட்லியை சாப்பிடும் போது...

ஒருவர் :      "இந்த இட்லிய கொஞ்சம் சின்னதா ஊத்தி இருந்தால் 2 இட்லி கூட சாப்பிடலாம் இவ்வளவு பெரிசாவா ஊத்துறது... "

மற்றொருவர் : "இட்லிய இன்னும் கொஞ்சம் பெரிசா ஊத்தி இருக்கலாம் 2 சாப்பிட்டாலும் கம்முன்னு இருக்கும்... "