Friday 31 July 2015

தஞ்சாவூர் சமையல் / இட்லி பொடி செய்வது எப்படி

சமையல் என்றாலே எல்லோரும் காரைக்குடி என்றுதான் சொல்வார்கள். ஆனால், தஞ்சை மாவட்டத்தில் வசிப்பவர்களும் சரி, தஞ்சாவூர் சாப்பாட்டை ருசித்தவர்களும் சரி வேற ஊர் எந்த ஊர் சாப்பாட்டை சாப்பிட்டாலும் குறை சொல்லாமல் இருக்கமாட்டார்கள். ஏனெனில் தஞ்சாவூர் சமையலில் ஒரு தனி ருசி இருக்கிறது.

தமிழ்நாடு என்றாலே இட்லி, சாம்பார் தான் பெஸ்ட் ஆனால், தஞ்சை மக்கள் ஒவ்வொரு வீட்டிலும் இந்த இட்லிபொடி இல்லாத வீடுகளே நீங்கள் பார்க்க முடியாது.  அப்படியென்ன அந்த இட்லிபொடியில் இருக்கிறது என்கிறீர்களா? சரி வாருங்கள் அதை செய்து பார்ப்போம்.


தேவையான பொருட்கள்:

வெள்ளை உளுந்து - 100 கிராம்
கடலைப் பருப்பு - 50 கிராம்
மிளகாய் - 25 நம்பர்
பூண்டு - 1
பெருங்காயம் - 1 கட்டி
உப்பு - தேவையான அளவு


செய்முறை:-

கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் உளுந்து, கடலைப்பருப்பு, மிளகாய் மூன்றையும் இளம் சூட்டில் வறுக்கவும். பெருங்காயத்தை தனியாக எண்ணெய்யில் பொறித்தெடுத்து, தேவையான உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். இப்போது சுவையான மணமான இட்லி பொடி தயார்.

பின்குறிப்பு:
இதோடு மீதமுள்ள கறிவேப்பிலையை வறுத்து சேர்த்துக்கொண்டால் இன்னும் சுவையோடும், மணமோடும் இருக்கும். கறிவேப்பிலை சேர்த்துக்கொள்வதால் கண்களுக்கும், முடி கருகருவென்று வளர்வதற்கும் நல்லது. மேலும் இந்த இட்லி பொடியில் இன்னொரு நன்மையும் உள்ளது. இடுப்பு சத்து குறையுள்ளவர்கள் உளுந்தை உணவில் அதிகம்   சேர்த்துக்கொண்டால் நல்லது எலும்பு தேய்மான பிரச்சினை உள்ளவர்கள் இதை அதிகம் உட்கொள்ளலாம். இந்த சின்ன இட்லி பொடியில் எத்தனை மருத்துவ குணம் இருக்கிறது பார்த்தீர்களா? இனிமேல் உங்க வீட்டிலும் இட்லி பொடி எப்பவும் இருக்கும்தானே..?


2 comments:

  1. Nice article..I'm from Colombo, Sri Lanka..my parents are born in thirunelveli...my mom used to prepare this idly powder at home..a perfect combination for dosai,idly and even upma...!!

    ReplyDelete
    Replies
    1. Welcome and thank you for your comments. Mr. Vijay muthiya.... yes exactly correct excellent. Combination.

      Delete