Wednesday, 30 April 2014

நட்பு தந்த காயம்

கண்கள் என்று சில
நட்பை உணர்ந்தேன்..!
இதயம் என்று சில
நட்பை உணர்ந்தேன்..!
சுவாசம் என்று சில
நட்பை உணர்ந்தேன்..!
உயிர்போல் நட்பும்
ஒருநாள் போய்விடும் என்று
இப்போது உணர்கிறேன்..!

Monday, 28 April 2014

நட்பு

ஒன்றாக பிறக்கவில்லை
ஒன்றாக வளரவில்லை
ஒரே வயதுமில்லை
சொந்தமும் இல்லை
பந்தமும் இல்லை
பக்கத்து வீடுமில்லை
பக்கத்து ஊருமில்லை
சேர்ந்து படிக்கவில்லை
சேர்ந்து வேலையும் செய்யவில்லை
நெருங்கி பழகவில்லை
மணிகணக்கில் பேசியத்தில்லை
ஆனாலும் ஒரு நிமிடம் கூட 
உன்னை நினைக்க தவறியதே இல்லை 
உன்னால் மட்டும் எப்படி முடிந்தது
 என்னை மறப்பதற்கு?

மேகம் மூடிய நிலா..!

என்னை காண பிடிக்காமல்
மேக கூட்டத்தில் ஓடி ஓடி
மறைந்துகொள்கிறது நிலா..!
வருத்தத்தோடு கண்ணீர்
சிந்துகிறது வானம்..!

Sunday, 27 April 2014

மரணவலி

உன் மவுனத்தின் வலி
எனக்கு மரணத்தின்
வலியை கொடுக்கிறது
 உன்னை மறக்க  முயல்கிறேன்
முடியவில்லை!

கடிதம்



அன்புள்ள... தோழி!
எப்படி இருக்கிறாய்?
நலம்தானே! ஆனால்
நான் நலமோடு இல்லை
நீ நலமோடு இருப்பாய்
என்று நினைக்கின்றேன்..!
காதலில் கருத்து வேறுபாடு
வருவதுண்டு நட்பில் வருமா?

வந்துவிட்டதே நீ வருத்தப்படுவாய்
என தெரிந்திருந்தால் நான் அந்த
கேள்வியை கேட்டிருக்க மாட்டேன்..!
என் மீது என்ன தவறென்று
இதுவரை நான் அறியேன்
கேட்க கூடாத கேள்வியா
கேட்டுவிட்டேன் இல்லையே
உன் கோபம் எனக்கு புரியவில்லை..!
ஒருவேளை என்னோடு பேச
உனக்கு விருப்பம் இல்லையா?
அதனால்தான் சின்ன விஷயத்தை
பெரிசுபடுத்தி விட்டாயா?
என் மனதை இப்படி யாரும்
கஷ்டப்படுத்தியது இல்லை
மனசு வலிக்கிறது..!

வேலை செய்ய முடியவில்லை
படிக்க முடியவில்லை
யாரோடும் பேச பிடிக்கவில்லை
எல்லோரிடம் எரிந்து விழுகிறேன்
தனிமையை விரும்புகிறேன்
தனியா அழுகிறேன்..!
உனக்கு எந்த கஷ்டமும்
இருக்காது ஏனெனில்
நான் உனக்கு பத்தோடு பதினொன்னு
இது தெரியாமல் நெருங்கி தொலைத்துவிட்டேன்
இப்ப நெருப்பில் வேகுகின்றேன்..!

நீ தந்த சந்தோஷத்தோடும்
நீ தந்த வலியோடும் என்றும்
உன் நினைவோடு நான்..!

கோழி மித்து
குஞ்சு சாகுமா? ஆனால்
நான் செத்துக்கொண்டு
இருக்கிறேன்
உன் மவுனத்தால்..!

மவுனம்

நீ பேசாத ஒவ்வொரு
நாளும் எனக்கு
யுகங்களாக கழிகிறது..!

Friday, 25 April 2014

கோபம்

நீ கோபத்தில் இருப்பதால்
என் கைபேசி அலறுவதை
நிறுதிக்கொண்டது..!

நீ எப்படியோ?
எனக்கு வரும் அழைப்புகளும்
குறுஞ்செய்திகளும் நீயாக
இருக்குமென்று
எட்டிப் பார்க்கவைக்கிறது..!

மவுனமாய் கொள்ளாதே
மரணித்துவிட போகிறேன்
தள்ளிவைக்க நினைக்காதே
என்னைவிட்டா உன்னை
தாங்கிகொள்ள என்னைப்போல்
உனக்கு யாருமில்லை..!

நீ வேறு நான் வேறு என்று
நீ நினைக்கலாம் என்னால்
அப்படி நினைத்திட முடியவில்லை
என்றேனும் ஒருநாள்
என்னை புரிந்துகொள்வாய்
அப்போது உன் கன்னதில்
வழியும் கண்ணீரை துடைக்க
நான் இருக்கபோவதில்லை..!

தடுமாற்றம்

கண்கள்கூட ஏமாறுகிறது
மனசுகூட தடுமாறி போகிறது
உன்னை பார்க்கும் போதும்
 பேசும் போதும்

Thursday, 24 April 2014

வானம்

தூரத்து வானம் கூட
அருகில் இருப்பது போல
தோன்றும் அதுபோலதான்
சிலரின் அன்புகூட
நெருங்க நெருங்க
தூர தூர போய்விடுகிறது..!

நட்பின் சுகம்

நீ மலர்ந்து சிரிக்கும்
அழகை காண தினமும்
எழுந்து வருகிறேன்..!
நீ உதிர்ந்து போகையில்
நான் மறைந்து போகிறேன்..!
யாருக்குத் தெரியும்
நமக்கான நட்பைப் பற்றி

பனித்துளி

பூக்களில் எத்தனை
அழகான பருக்கள்
பனித்துளி..!

கற்பனை சாலை

என் கற்பனைச்
சாலையில் வெகுதூரம்
பயணிக்கிறேன்
உன் நினைவின் துணையோடு..!