Tuesday 5 January 2016

எனக்குப் பிடித்த அறிவிப்பாளரின் நிகழ்ச்சி தொகுப்பு

            இந்த 2016 ல் என்ன எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது சட்டென ஒன்று என் நினைவுக்கு வந்தது.  கடந்து வந்த பாதையை சற்று திரும்பி பார்த்தால் என்ன என்று தோன்றியது. அதாவது அந்த நேரங்களில் நமக்குப் பிடித்த விஷயங்களை குறிப்பிடலாம் என்ற ஒரு சின்ன ஆசை.



                   நான் ஏற்கனவே பல பதிவுகளில் இலங்கை வானொலிப் பற்றி குறிப்பிட்டுள்ளேன். அதில் குறிப்பாக எனக்குப் பிடித்த ஒரு அறிவிப்பாளரை அதிகம் சொல்லியிருக்கிறேன். இப்போது சற்று வித்தியாசமாக எனக்குப் பிடித்த அந்த அறிவிப்பாளர் நிகழ்ச்சிக்கு வந்த போது தொகுத்தப்பாடல்களை சிறு தொகுப்பாக எழுதலாம் என்று நினைக்கிறேன்.  என்னென்ன பாடல்களை நாம் தொகுத்தோம் என்று இப்போது அவருக்கும் நினைவு இருக்காது. அதை நினைவு கூறும் விதமாக இந்தப் பதிவு இருக்கும்.

                அவர் நிகழ்ச்சிக்கு வந்த போது எழுதி வைத்த குறிப்புகள் சிலது மட்டுமே என்னிடம் உள்ளது மற்றவை கேசட்டில் உள்ளது. அதில் சிலது மட்டும் பதிவு செய்ய விரும்புகிறேன்.

         ஒவ்வொரு முறையும் அவர் நிகழ்ச்சிக்கு வரும் போது, அவருக்காக வானொலிக்கு அருகே பேப்பரும் பேனாவோடும் உட்கார்ந்த நாட்கள் அதிகம் சில நேரங்களில் அதிகாலை, சில வேளைகளில் இரவு, சில சமயம் காலையில் என அவருக்காக காத்திருந்த போது எழுதிய சிறு குறிப்புகள் தான் இவை. 2007 ல் உள்ள நிகழ்ச்சி தொகுப்புகளை முதலில் பதிவு செய்கிறேன். முன்பு தென்றலில் இரவு 10 மணியிலிருந்து 11.30 வரை "ராகதீபம், இரவின் மடியில்" என்ற  நிகழ்ச்சி ஒலிப்பரப்பு ஆகும்.  17.05.2007 வியாழன் அவர் நிகழ்ச்சி வந்த போது ஒலித்தப் பாடல்கள்

படம்                                                      பாடல்கள்
1. கண்ணில் தெரியும் கதை - நான் உன்னை நினைச்சேன்
2. அவள் அப்படிதான் - உறவுகள் தொடர்கதை
3. மோகனப் புன்னகை - தென்னிலங்கை மங்கை
4. வட்டத்துக்குள் சதுரம் - காதல் என்னும் காவியம்
5. நூல்வேலி - நானா பாடுவது நானா
6. ??? - அலங்கார பொன்னூஞ்சலே
7. வணக்கத்துக்குரிய காதலி - கலையோ, சிலையோ
8. ??? - ரதிதேவி சன்னதியிலே இதமான ஓசை
9. உறுதிமொழி - அதிகாலை நிலவே அலங்கார சிலையே

இரவின் மடியில் :

படம்                                                            பாடல்கள்

1. நீங்காத நினைவுகள் - எங்கிருந்த போதும் உன்னை
2. ஆனந்தஜோதி - நினைக்கத் தெரிந்த மனமே
3. உயர்ந்த மனிதன் - பால்போலவே வான் மீதிலே
4. நெஞ்சில் ஓர் ஆலயம் - சொன்னது நீதானா
5. கலங்கரை விளக்கம் - என்னை மறந்ததேன்
6. ஆயிரத்தில் ஒருத்தன் - உன்னை நான் சந்தித்தேன்
7. ராமு - நிலவே என்னிடம் நெருங்காதே
8. ??? - காதல் நிலவே கண்மனி

                       இந்த இதமான பாடல்கள் அனைத்தும் அந்த இரவு நேரத்தில் இதயத்தை சுகமாக தீண்டியவை இவை. இவருக்கு பி. சுசிலாவின் பாடல்கள் ரொம்ப பிடிக்கும் அவரின் ரசிகையும் ஆவார் அதன் வெளிப்பாடு அவரின் பாடல் தொகுப்பில் அடிக்கடி வெளிப்படும்.
ஒவ்வொரு வியாழன் இரவும் அவர் தொகுத்தவை ஏராளம் ஆனால் என்னிடம் இருப்பவை சிலது மட்டுமே அந்தவகையில் அடுத்த ராகதீபத்தின் தொகுப்பு

பாடல்கள்
1. வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
2. காத்திருந்து கதவைத்திறந்து உள்ளுக்குள் வந்தேன்
3. எங்கே என் ஜீவனே
4. சின்ன சின்ன ரோஜா பூவே
5. யாரோ சொன்னாங்க என்னான்னு
6. தேவதை இளந்தேவி
7. நீலக்குயில்கள் இரண்டு

இந்த நிகழ்ச்சியை எனது நண்பியின் இல்லத்தில் இருக்கும்போது அங்கிருந்து எழுதியவை. அப்போது அவர்கள் என்னைக் கிண்டல் செய்தது இப்போதும் என் நினைவுக்கு வந்து போகிறது.

அடுத்து,  08. 08.2007 வியாழன் அன்று ஒலிப்பரப்பான தொகுப்பு
பாடல்கள்
1. பொன்மானேத் தேடி
2. ஆயிரம் மலர்களே
3. நான் உன்னை நினைச்சேன்
4. பாதை எங்கே பயணம்
5. பட்டுவண்ண ரோசாவாம்
6. என் ராசாத்தி ஒரு ரோசாப்பு


இரவின் மடியில்:
படம்                                            பாடல்கள்

1. மாடப்புறா - ஊருக்கும் தெரியாது யாருக்கும் தெரியாது
2. தாய் மகனுக்கு கட்டிய தாலி - சின்னஞ்சிறு வயது முதல்
3. மன்னாதிமன்னன் - கனியகனிய பேசும் கண்மனி
4. அம்பிகாபதி - மாசிலா நிலவே நம் காதல்
5. ??? - அன்பே இன்பம் எங்கே
6. தாய்க்கு பின் தாரம் - ஆஹா ஆசை நிறை வேறுமா

அடுத்த ராகதீபம் 17. 08. 2007 வியாழன்

படம்                                பாடல்கள்
காஷ்மீர் காதலி - அழகிய செந்நிற வானம்
இளமை ஊஞ்சலாடுகிறது - ஒரே நாள் உனை நான் நிலாவில்

              அடுத்து 24.08.2007 ல் ஒலிப்பரப்பான பாடல்கள் எழுத முடியாமல் போனது அலைவரிசை சரியாக இல்லாமல் போனதால். இதே நாளில் நான் எழுதி அனுப்பிய "மண்பாதையின் மாறுப்பட்ட மரபுகள்" என்ற பிரதி தமிழமுதம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்பானது.

- தொடரும்.


2 comments:

  1. பலதும் பிடித்த பாடல்கள் அறிவிப்பாளர் பெயரையும் சேர்த்தாள் நல்லது மஹாதீர்ஹாசன் தொகுப்புப்போல இருக்கு பாடல் தேர்வு.

    ReplyDelete
  2. தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் முதலில் நன்றி. இவர் ஒரு பெண் அறிவிப்பாளர் எல்லோரும் அறிந்தவர். இனிமையான குரலுக்கு சொந்தக்காரர். இவரின் பெயரை இறுதியாக குறிப்பிடலாம் என்று நினைத்தேன் அதனால்தான் பெயரை குறிப்பிடவில்லை.

    ReplyDelete