Tuesday 24 November 2015

நம்பிக்கை

            ஒரு முனிவரின் ஆசிரமத்தில் அழகான நந்தவனம் ஒன்று இருந்தது. அந்த ஆசிரமத்திற்கு அடிக்கடி கடவுள் வந்து போவார். அப்படி வரும்போதெல்லாம் நந்தவனத்திற்கு சென்று அங்குள்ள மலர்களைக் கண்டு ரசித்து செல்வார். அப்படி வரும்போதெல்லாம் ஒரு செடியைப் பார்த்து "இது ரொம்ப அழகா இருக்கிறதே" என்று சொல்லிவிட்டு போவார். இதைக் கேட்ட அந்த செடிக்கு ரொம்ப சந்தோஷம். கடவுளின் மீது அதீத அன்பு ஏற்பட்டது அந்த சந்தோஷத்தில் அதிக மலர்களைத் தந்தது. இப்படி ஒவ்வொரு நாளும் நடந்தது. சில நாட்களுக்குப் பிறகு கடவுள் வேற செடிகளைக் கண்டு ரசித்து அவைகளோடு பேசினார். இதைக் கண்ட அந்த செடி ரொம்ப வருத்தப்பட்டது. நாளுக்கு நாள் மனம் நொந்து வாடிபோனது.



              அப்போது பக்கத்தில் இருந்த செடி சொன்னது "நீ அவருக்காகதான் வாடியிருக்கிறாய் என்று அவருக்குத் தெரியுமா? நீயாக அப்படி நினைத்துக்கொண்டு வருந்தாதே அவர் எல்லா மலர்களையும் கண்டு பேசுகிறார் உன்னிடம் மட்டும் இல்லை என்று அறிவுரை சொன்னது. ஆனால் அந்தச் செடிக்கு  அது புரியவில்லை.

                நாட்கள் சென்றது ஒருநாள் கடவுள் அந்த செடியின் அருகே வந்து "இந்த செடிக்கு என்ன பிரச்சனை ஏன் இது அடிக்கடி வாடிபோகிறது அதற்கு என்ன காரணம் என்று பக்கத்தில் இருந்த முனிவரிடம் கேட்டார் கடவுள். இதேக் கேட்ட அந்தச் செடிக்கு தூக்கி வாரிப்போட்டது. நாம் யாருக்காக இந்தனை நாட்களாக அதிக மலர்களை தந்தோமோ, யாரின் மீது அதிக அன்பு வைத்திருந்தோமோ அவரே இப்படி சொல்கிறாரே என மனம் நொந்து அழுதது. அப்போது பக்கத்தில் இருந்த செடி சொன்னது.  நீ அவர் மீதுள்ள அன்பினால் வாடியிருந்தாய் அது அவருக்குத் தெரியாது. உனக்கு வேற என்னவோ பிரச்சனையிருக்கிறது என்று அவர் நினைத்துக்கொண்டார்.  நீயாக ஒரு நம்பிக்கையை வளர்த்துக்கொண்டாய் அது உன்னுடைய தவறு .

              நாமக ஒன்று நினைத்துக்கொண்டு அவர் அப்படி இல்லையே என்று வருந்துவது முட்டாள் தனம் அதைதான் நீயும் செய்திருக்கிறாய். எதையும் சாதரணமாக எடுத்துகொள்ள பழகிக்கொண்டால் எதுவும் துன்பம் இல்லை.

அது சொல்வதில் உண்மை இருப்பதை உணர்ந்த அந்த செடி மவுனமாக இருந்தது.  

1 comment: