Wednesday 11 November 2015

செல்ல பிராணி

          நாய்கள் வளர்க்க எத்தனைப் பேருக்குப் பிடிக்கும்? i am a dog lover... எனக்கு நாய்கள் என்றால் கொள்ளை பிரியம். சிறு பிள்ளையில் இருந்து இன்று வரை நாய்கள் என்றால் எனக்கு உயிர். எல்லா விலங்குகளையும் நான் நேசிக்கிறேன் ஆனால் நாய்களுக்குதான் முதலிடம். நாய்கள் போன்ற ஒரு நன்றி உள்ள ஜீவனை இந்த உலகத்தில் எங்கேயும் காண முடியாது. எஜமானின் மீது அக்கறைக் கொண்ட ஒரு உயிர் எதுவென்றால் அது நாய் மட்டும்தான். அதனால்தான் நம்வீட்டு செல்ல பிராணியாக அதை வளர்க்கிறோம்.



              என்னை யாராவது ச்சீ... நாயே என்று சொல்லிவிட்டால் எனக்கு அத்தனை கோபம் வரும். ஒரு முறை என் பள்ளி தோழி அந்த வார்த்தையை சொல்லிவிட்டதால் கடைசி வரை பேசவே இல்லை. அந்த பெண்ணிற்கு நான் பேசாமல் இருந்ததற்கு இதுவரை காரணமே தெரியாது. அந்தளவிற்கு நாய்கள் மீது ப்ரியம் உண்டு. நாய்கள் வளர்க்காமல் என்னால் இருக்க முடியாது. "பப்பி" என்ற  வெள்ளை நிற நாய் வளர்த்தேன் நல்ல வாட்ட சாட்டமான ஒரு கன்று குட்டியை போல் நீண்டு பெரியதாக இருக்கும். எங்க வீட்டுக்கு வரும் அனைவரும் அதைக் கண்டு பயப்படுவார்கள் சிலர் பயந்துகொண்டே வர மறுப்பார்கள். அதன் கண்கள் மனிதக் கண்களைப் போல் இருக்கும் கறுப்பு வெள்ளையாக வேறு எந்த நாய்க்கும் அதுபோல் இருக்காது. நேற்று 11.11.2015 He is no more 13 years old. நாய்களுக்கு ஆயுள் 10 வருடம் என்கிறார்கள் ஆனால் என் பப்பி 10 வருடங்களைக் கடந்து என்னோடு இருந்த எனது ஆருயிர் நண்பன், எனது செல்லப்பிள்ளை நேற்று என்னை விட்டு பிரிந்து சென்றான். ஒரு தீபாவளி அமாவாசை அன்று பிறந்தான் அதே தீபாவளிக்கு மறுநாள் அமாவாசையன்று இறந்து போனான். என் வீட்டில் ஒரு உயிர் பிரிந்த உணர்வு எனக்குள் அவனின் இறப்பு அந்த துக்கம் வயிற்றை புரட்டிக்கொண்டு வயிற்றை ஏதோ ஒன்று பிசைய அழுகையும், நடுக்கத்தையும் வரவழைத்தது. நான் எத்தனையோ நாய்களை வளர்த்திருக்கிறேன். ஆனால் இத்தனை அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. அவனின் ஒவ்வொரு செயலும் நினைவுப் படுத்தி என்னை அழவைக்கிறது.

              "பப்பி" ரொம்ப புத்திசாலி, அறிவானது பேன் காற்றில்தான் தூங்கும் நான் என்ன சொன்னாலும் கேட்கும். என் கண் அசைவை புரிந்து கொண்டு அதன்படி நடக்கும். நான் என்ன சாப்பிடுகிறேனோ அதைதான் சாப்பிடும். எனக்கு என்ன உணவு பிடிக்குமோ அதுதான் அதுக்கும் பிடிக்கும். ருசியா சாப்பிட நினைக்கும், சாப்பாடு நல்லா இல்லையென்றால் நானும் சாப்பிட மாட்டேன் அதுவும் சாப்பிடாது. எதுவா இருந்தாலும் நான் சாப்பிட்டு எச்சில் பண்ணியதைதான் சாப்பிடும். நான் சாப்பிடமா எதுபோட்டாலும் சாப்பிடாது வாங்கி வைத்துக்கொண்டு என்னையே பார்க்கும். மற்ற நாய்களை போல் கிடைத்துவிட்டது என்று வரிந்து கட்டி சாப்பிடாது அளவான சாப்பாடுதான் சாப்பிடும்.
அதுவும் என் கையால் வைத்தால்தான் சாப்பிடும் எங்க அம்மா சாப்பாடு வைத்தால் சாப்பிடாது.
நான் எங்கேயாவது வெளியூர் சென்றால் அது போகவிடாது ஓடிவந்து மறைக்கும். நான் வீட்டுக்கு வரும் வரை சாப்பிடாதாம் அம்மா சொல்வார்கள். நான் ஒவ்வொரு முறையும் வெளியே சென்று வந்தால் தாடிபோட்டு கத்தி எடுத்துவிடும் அதை சமாதானம் செய்யவே முடியாது. அதற்காகவே நான் எங்கேயும் செல்ல மாட்டேன். அதற்கு வெடி சத்தம் ஆகாது என்பதற்காகவே 13 வருடங்களாக வெடி வாங்குவதும் இல்லை வெடிப்பதும் இல்லை நிறுத்திவிட்டேன்.


                  என் மீது அதற்கு அத்தனை பாசம். நான் கோபமாக இருந்தால் என்னை சமாதானம் செய்ய பார்க்கும் முடியாவிட்டால் அதுபோய் படுத்துக்கொண்டு சாப்பிட வராது நான் போய் அதை சமாதானம் செய்கிற மாதிரி பண்ணிவிடும். எனக்கு பிடிக்காதாவர் யாரும் என் வீட்டுக்குள் நுழைய முடியாது. முக்கியமாக ஆண்கள் யாரும் என் வீட்டுக்கு வர முடியாது.  நல்லர்கள் யார் கெட்டவர்கள் யார் என்று ஈசியாக கண்டு பிடித்துவிடும். நான் யாரோடு பேசினாலும் உன்னிப்பாக கவனிக்கும். எல்லோரும் சொல்வார்கள் விலங்குகள் சிரிக்காது என்று ஆனால், நாய்கள் சிரிக்கும் அதாவது முகம் மலர்வதுதான் அதற்கு சிரிப்பு. நல்ல மனிதர்கள் இல்லாதவீட்டில் நான் சென்று பேசிக்கொண்டு இருந்தால் ஓடிவந்து என் துணியை கவ்விப்பிடித்து இழுக்கும். நான் யார் வீட்டிற்கு அடிக்கடி செல்கிறேனோ அங்கேதான் அதுவும் போகும். பல சமயங்களில் அது என்னோடுதான் தூங்கும். அது பெட்டை துவைத்து போடுவதற்கு எடுத்தாகூட நான் யாருக்கோ கொடுக்கப் போறேன்னு நினைச்சு பிடித்து இழுக்கும். நான் வா... என்றால் வரும் போ... போகும் உட்கார் என்றால் உட்காரும். நான் யாரோடு பேசினாலும் பொறாமை படும். அத்தனை அறிவான, அன்பான, பாசமான செல்லத்தை நான் இழந்துவிட்டேன். இனிமேல் என்மீது பாசம் காட்ட சுயநலமில்லாத அன்பை காட்ட அதுபோல் ஒரு ஜீவன் இனியில்லை. மீளாதுயரத்தில் கண்ணீரோடு நான். அது எனக்கு கற்று தந்த பாடம் இனி யார் மீதும் அன்பு வைக்க கூடாது என்பதைதான்.

4 comments:

  1. உங்கள் ‘பப்பி’யின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் பப்பியின் நினைவலைகள் உங்கள் சோகத்தை வெளிப்படுத்தி நிற்கின்றன. எங்கள் வீட்டு ஜாக்கி இறந்தபோது நான் அடைந்த துயரை ஒரு பதிவாக எழுதினேன். நேரம் இருப்பின் கீழே உள்ள எனது பதிவுகளைப் படித்துப் பாருங்கள்.

    ஜென்மம் நிறைந்தது - சென்றது “ஜாக்கி”
    http://tthamizhelango.blogspot.com/2013/09/blog-post_30.html

    செல்லப் பிராணிகளுக்கு சொர்க்கம் நரகம் உண்டா?
    http://tthamizhelango.blogspot.com/2014/03/blog-post.html

    ReplyDelete
  2. உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.. எனது துயரத்தின் வெளிபாடுதான் இவை

    ReplyDelete
  3. உங்களது பதிவை படித்தேன் எனது மனநிலைை அப்படியே பிரதிபலித்தது. எனக்கும் ஒரு வாரத்திற்கு முன்பாகவே கெட்ட கனவாக வந்து பயம் காட்டியது அது யாருக்கோ என்று நினைத்தேன் அது எனக்கே முடிந்து விட்டது.

    ReplyDelete