Friday 29 May 2015

தமிழ்மொழி

எல்லா நாட்டிலும் தாய்மொழி என்று இருக்கிறது. அதற்கு வழக்கச்சொல் என்ற ஒன்று இருக்கிறது. மொழிகள் பல இருக்கிறது அதில் ஹிந்தி,மலையாளம்,தெலுங்கு,கனடம், என இருந்தாலும் அவரவர் அவர் தாய் மொழியில் பேசுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் தமிழுக்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு பாஷைகள். தமிழ்மொழிதான் அதில் பலதரப்பட்ட வழக்கச் சொற்கள்.

             மதுரை தமிழ் எல்லோரும் அறிந்ததே ஏனெனில் சினிமாவில் அதிகம் பேசப்படுகிறது. கோயமுத்தூர் தமிழ், திருநெல்வேலி, சென்னை தமிழ் இந்த நான்கு மாவட்டங்களில் பேசுகின்ற தமிழ் அனைவருக்கும் தெரியும். அதேபோல் பிற மாவட்டங்களில் பல பாஷைகள் பேசப்படுகிறது. மேலும் ஆராய்ந்தால் ஒரு மாவட்டத்திலே ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பாஷை இருக்கிறது. ஒரு மாவட்டத்தில் இருந்தது இன்னொரு மாவட்டத்திற்கு சென்றால் அவர்கள் சொல்கின்ற பெயர்கள் வித்தியாசமாக இருக்கும்.

          அதாவது புத்தக முறைகளைத் தாண்டி நடைமுறை சொற்கள் வழுப்பெற்று பேசப்படுகிறது. சில இடங்களில் என்ன பேசுகிறார்கள் என்று புரியாது. சிலர் பேசுவதைப் பார்த்தால் சிரிப்பு அள்ளும், சில இடங்களில் ரசிக்கத் தூண்டும் . அப்படி ரசித்தது என்று சொன்னால் திருச்செந்தூர் சென்ற போது அவர்கள் பேசிக்கொண்ட தமிழ் காற்றுவாக்கில் காதை தீண்டிய வார்த்தைகள் என்னை திரும்பி பார்க்க வைத்தது சில இடங்களில் நின்று கூட கேட்டு ரசித்தேன். அப்ப நினைத்தேன் இதைப்பற்றி ஆராய்ச்சி செய்தால் என்னவென்று ஆனால் நினைத்ததோடு சரி.

          தமிழை ஆராய்ந்தாலும், தமிழைப்பற்றி பேசினாலும் ஏதோ ஒரு இனிமை இருக்கத்தான் செய்கிறது. அதனால்தான் பாரதி யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் வேறொன்று இல்லை என்று சொன்னாரோ என்னவோ..?

2 comments:

  1. என்ன தமிழில் மட்டுந்தன் வழக்குச் சொற்கள் உள்ளது போல பேசுகின்றீர்கள்? கன்னடம், தெலிங்கு, மராத்தி என எல்லாவற்றிலும் வட்டார வழக்கு உண்டு. இந்தி என்ற பேரில் இந்தியோடு, போஜ்புரி, பாகேலி, பந்தேளி மொழிகள் இணைக்கப்பட்டு இருக்கிறது. அந்தந்த மொழி பேசினால் மற்றவருக்கு புரியவே புரியாது. இந்திக்குள்ளே ஏகப்பட்ட வழக்குகள் உள்ளன. தமிழைப் பொறுத்தவரை வட்டார வழக்கு அருகி பொதுத் தமிழ் உருவாகி வருகின்றது என்பது தான் உண்மை. எல்லா சொற்களும் இன்று கலந்தே பேசப்படுகின்றன குறிப்பாக நகரங்களில்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது உண்மைதான். நான் தவறாக ஒன்றும் குறிப்பிடவில்லை தமிழில் வெவ்வேறு விதமாக பேசப்படுகிறது தமிழ் ஒன்று ஆனால் பல விதம் என்று ரசித்து பெருமையாகதானே சொல்லியிருக்கிறேன். இதில் என்ன குறையை கண்டீர்கள். வழக்கு சொற்கள் எல்லா மொழிகளிலும் இருக்கிறது எனறு குறிப்பிட்டுள்ளேன் நீங்கள் கவனிக்கவில்லையா? நான் தவறான அர்த்ததில் பதிவு செய்யவில்லை ஆனால் அதை படிப்பவர்கள் தவறாக அர்த்தம் பண்ணிக்கொள்கிறார்கள். எழத்தாளர் நீலன் அவர்களே

      Delete