Sunday 6 July 2014

அன்பு

                            நட்பிலும் சரி, உறவுகளிலும் சரி அன்பு என்பது அளவிட முடியாத ஒன்றாக இருக்கிறது. சில நட்பிடம் மட்டுமே அதிக நெருக்கமாக பேசுவோம் அதே போலதான் உறவுகளிடமும். ஒருவரை நமக்குப் பிடித்து விட்டால் என்ன செய்வோம் தூரத்தில் வரும்போதே ஓடி வந்து கையை பிடிப்போம் அல்லது கட்டிப்பிடிப்போம் அதற்கும் மேல தூக்கி கூட சுற்றுவோம் அதையும் தாண்டி என்ன செய்வோம் நமக்குப் பிடித்து விட்டால் அப்பப்ப அன்பளிப்பு கொடுத்து நமது அன்பை வெளிப்படுத்துவோம்.

                          இதே அன்பு குறைய குறைய இடைவெளி அதிகமாக அதிகமாக வார்த்தைகளும் குறைகிறது அன்பளிப்பும் குறைகிறது அன்பு நிலையில்லாதது அந்த அன்பு நிலையாக இருக்க இருவருக்கும் எதிர்பார்ப்பு என்பது இருக்க கூடாது சின்ன எதிர்பார்ப்பு எட்டி பார்க்கும் போது சண்டைகளும் சம்மந்தம் இல்லாமலே எட்டிப்பார்க்கும். உண்மையான அன்பில் ஊடல்கள் வருவதில்லை அன்பு எங்கு இல்லையோ அங்கு உண்மைகள் இல்லை உண்மையான அன்பே நெடுந்தூரம் பயணிக்கிறது. போலியான அன்புக்கு ஆயுள் குறைவு உண்மையாக இருப்போம் உயிராக நேசிப்போம்.

No comments:

Post a Comment