Sunday 10 January 2016

சட்ட மன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் செய்ய போவது என்ன

            இப்போது பரபரப்பாக பேசப்படுகின்ற விஷயம் வருகின்ற சட்ட மன்ற தேர்தல். இதுவரை இலவசங்களையும், பணத்தையும் கொடுத்து ஓட்டு வாங்கிய அரசியல் கட்சிகள் இனி விழிப்பாக இருக்க வேண்டும். ஏனெனில் மக்கள் விழித்துக்கொண்டார்கள் அவர்கள் இலவசங்களை எதிர்பார்க்கவில்லை நல்ல தார்சாலைகள், நீர்நிலை ஏரிகளை ஆழப்படுத்துதல், பாலங்கள் அமைத்தல், பள்ளி, சுகாதாரநிலையம் போன்ற அத்தியவாசிய திட்டங்கள்தான் வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றார்கள்.



              சென்னைக்கு வந்த ஆபத்து இனி எந்த மாவட்டத்திற்கும் வரக்கூடாது என்று எச்சரிக்கை உணர்வோடு இருக்கிறார்கள். அரசியல்வாதிகள் தாங்கள் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமெனில் மக்களின் தேவை என்ன  முதலில் அந்தந்த ஊருக்கு என்னென்ன தேவை என்பதை அறிந்து முடிக்க வேண்டிய பணிகளை உடனே செய்தால் நீங்கள் ஆட்சிக்கு வரலாம். முதலில் ஒவ்வொரு ஊருக்கும் என்ன தேவை என்பதை அறிந்து தேர்தலுக்கு முன் அதாவது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ற வாக்குறுதியை விடுத்து முன்கூட்டியே சமுதாய பணிகளை செய்தால் ஆட்சியை பிடிக்க நிறைய வாய்ப்புள்ளது.

              மக்கள் தங்களின் குடும்பத்தை பார்த்துக்கொள்வார்கள். அவர்களுக்கு மிக்ஸியோ, கிரைண்டரோ, பேனோ, கம்பியூட்டரோ, சமைக்க பாத்திரங்களோ, படுக்க பாயோ தேவையில்லை அவர்கள் குடும்பத்தை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். அரசு என்ன செய்யவேண்டுமெனில் மக்கள் பாதுகாப்பாக இருக்க சுகாதாரமாக இருக்க போதுமான வசதிகளை செய்து கொடுத்தாலே போதுமானது. முக்கியமாக பாதாள சாக்கடை அவசியமானதாக இருக்கிறது.  கிராமங்கள் நன்றாக இருந்தால் நகரங்கள் நன்றாக இருக்கும் நகரங்கள் நன்றாக இருந்தால் நாடு நன்றாக இருக்கும். முதலில் நம்ம தமிழகத்தை ஒரு சுத்தமான நாடாக மாற்ற வேண்டும். வீதிகள், சாலைகள் என தரமாக அமைக்க வேண்டும்.  ஒரு ஓட்டுக்கு ஆயிரமோ ஐநூறோ வேண்டாம் அந்த பணத்தை கணக்கிட்டு அந்தந்த ஊருக்கு என்ன செய்யலாம் என்று சிந்தியுங்கள் ஓட்டுக்கள் நீங்கள் வீடு தேடி கேட்க வேண்டியது இல்லை தானாக விழும். இன்னும் 4 மாதங்களில் எவ்வளவோ செய்யலாம். அரசியல் கட்சிகள் என்ன செய்ய போகிறது?

#ஸ்ரீசந்திரா





2 comments:

  1. தங்கள் கருத்து வரவேற்கத்தக்கதே. ஆனால் நம் மக்கள் மாறுவார்களா என்பது சந்தேகமே.

    ReplyDelete
  2. மாறும் மக்களும் ஒரு நாள் மாறுவார்கள் தங்கள் கருத்துக்கு நன்றி....

    ReplyDelete