Monday 30 July 2018

காலனை வென்ற கலைஞர் மற்றுமொரு மார்க்கண்டேயன்

இப்போது வருகின்ற பதிவுகள் பார்க்கும் போது கலைஞரை திட்டித்தான் வருகிறது. என்ன காரணம் சொல்லி திட்டுகிறார்கள் தெரியுமா? அவருக்கு மூன்று மனைவிகள், ஊருக்கு ஒரு பொண்டாட்டி, 2g ஊழல், இலங்கை தமிழர் பிரச்சினை இந்த மூன்றுதான் அவருடைய பெருங்குற்றமாக கருதப்படுகிறது.

மூன்று மனைவிகள் :

இவருக்கு மூன்று மனைவிகள் தவறதுதான் ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கொள்கையோடு வாழாமல் மூன்று மனைவிகளை திருமணம் செய்தது தவறுதான். ஆனால் இன்று எத்தனை ஆண்கள் ஒரு மனைவியோடு மட்டும் வாழ்கிறார்கள் பிற பெண்களை அக்காவாகவும், தங்கையாகவும் எத்தனை ஜென்மங்கள் பார்க்கின்றார்கள்? அப்படி நினைத்திருந்தால் ஊருக்குள் ஏன் பாலியல் குற்றங்கள் நடக்குது?



2g ஊழல் அது பெரும் தவறுதான் ஏற்றுக்கொள்வோம் அவர் அப்படி செய்திருக்க கூடாது. சரி விஷயத்திற்கு வருவோம் இன்றைய அரசியல் வாதிகள் என்னென்ன குற்றங்கள் செய்கிறார்கள் அது ஏதாவது உங்களுக்கு தெரியுமா? தெரிந்தால் இதை அதோடு ஒப்பிட்டு பாரவக்கவும். இந்த நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு மனிதனும் ஊழல்வாதிதான் தன் தகுதிக்கு தகுந்த மாதிரி செய்து கொண்டு இருக்கிறார்கள். தன் வீட்டில் ஆரம்பித்து அதை வெளியே ஒவ்வொரு இடத்திலும் காட்டுகிறான். அப்ப அவர்களும் ஊழல்வாதிதானே? உங்கள் அளவுக்கு நீங்கள் செய்தீர்கள் அவர் அளவுக்கு அவர் செய்தார் ஆனால் அவரை குற்றம் சொல்ல நமக்கு என்ன தகுதி இருக்கு? யாரையும் ஏமாற்றாமல், திருடாமல், பொய சொல்லாமல் எத்தனை மனிதன் இருக்கிறான் யாராவது சொல்ல முடியுமா? நூற்றில் ஒருத்தன் இருப்பான் அவனையும் நீங்கள் ஏமாளி இளிச்சவாயன் என்று பட்டம் கொடுப்பீர்கள். கொள்ளையடிக்கிறவனையும், கொலை செய்கின்றவனையும்,  பொறுக்கியயையும் தலைமேல் தூக்கி வைத்து ஆடுவீர்கள் பிறகு தான் உத்தமன் அவன் தான் பெரிய ஊழல்வாதி என்று கை நீட்டுவீர்கள். முதலில் உங்களை நீங்கள் திருத்திக்கொள்ளுங்கள் பிறகு மற்றவர்களை குற்றம் சொல்லலாம்.

ஈழப்பிரச்சினை:

இது நடந்திருக்க கூடாது இனிமேலும் நடக்கவும் கூடாது இது மாபெரும் குற்றம். மிகப்பெரிய பாவச்செயல் யாரும் மறக்க முடியாத ஒரு சம்பவம்... இதற்கு யார் காரணம்? சிங்கள ராணுவாலமா? இந்திய இராணுவமா? இந்தியா 7 மாநிலங்களை கொண்டது ஒரு நாட்டின் மீது போர் தொடுக்கும் போது ஒரு மாநிலம் மட்டும் எதிர்த்து நின்றால் அதை கைவிட்டுவிடுமா மத்தியரசு? தமிழ்நாடு கடைசிவரை போராடிய பிறகு தான் அதற்கு ஒத்தக்கொண்டது. நீங்கள் கோபம் கொள்ள வேண்டியது ஒட்டுமொத்த இந்தியாவின் மீது கலைஞர் மீது மட்டும் அல்ல.

இப்போது நான் ஒரு கேள்வி கேட்கிறேன் அது சரியா என்று பாருங்கள். இப்போது தமிழ்நாடும் ஈழநாடு போலதான் இருக்கிறது. தமிழக மக்களுக்கு சரியான திட்டங்கள் இயற்றுவதில்லை, தமிழக மண்ணில் தீங்கு விளைவிக்க கூடிய திட்டங்களை அரசு இயற்றுகிறது அதனால் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடக்கிறது இதை அனைவரும் அறிவர். இந்தியாவில் தமிழன் என்றாலே கேவலப்படுத்துகிறார்கள் மற்ற மாநிலங்களுக்கு இருக்கின்ற முன்னுரிமை தமிழகமக்களுக்கு மறுக்கப்படுகிறது. இதனால் மக்கள் கோபம் கொண்டு போராட்டம் செய்கிறார்கள் எங்கள் மண் எங்கள் உரிமை என்று. இலங்கையில் ஆயுதம் எடுத்து போராடினார்கள் இங்கே அஹிம்சை வழியில் போராடுகிறார்கள் ஆக காரணம் ஒன்றுதான் போராடும் விதம்தான் வேறு.

இப்போ மத்தியரசு தமிழகத்தின் மீது கோபம் கொண்டு தமிழகத்தை அழிக்க இராணுவத்தோடு வருகிறது அதற்கு இலங்கை இராணுவத்தை நாடுகிறது. உங்கள் கைவரிசையை தமிழகத்தில் காட்டுங்கள் என்று உதவி கேட்கிறது அப்போ இலங்கை இராணுவம் உதவுமா? உதவாதா? சரி அங்கே உள்ள தமிழ் அமைச்சர்கள் , முதல்வர்கள் இதை தடுப்பார்களா? மாட்டார்களா? ஒருவழியா ஈழமக்களுக்கு நடந்த கொடுமைகள் போல் தமிழமக்களுக்கு நடந்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம். அப்போது மிஞ்சிய தமிழக மக்கள் யார் மீது கோபம் கொள்வார்கள் மத்தியரசின் மீதா? அல்லது இலங்கை தமிழ் அமைச்சர்கள் மீதா? ஒருநாளும் தமிழகமக்கள் இலங்கை தமிழ் அமைச்சர்கள் மீது குற்றம் சுமத்த மாட்டார்கள் பழி சுமத்தமாட்டார்கள் இதற்கு எல்லாம் காரணம் இலங்கை தமிழ் அமைச்சர்கள் என்று ஒரு போதும் சொல்லமாட்டார்கள். இலங்கை இராணுவத்தின் மீது கோபம் கொள்வார்கள். இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். என்னவோ கலைஞர் மட்டும் குற்றவாளி, கொலையாளி என்பது போல் பழி சுமத்துவது தவறு. முதலில் எது உண்மை நிலை என்று ஆராயுங்கள் கண்மூடித்தனமாக யாரோ சொல்வதை வைத்து தூண்டுவதை வைத்து தவறான முடிவு எடுக்காதீர்கள்.

தவறுகள் யார் செய்தாலும் தவறுதான் அந்த தவறின் அளவுகள் என்னென்ன என்பதை அளவீடு செய்து அவர்களுக்கு தண்டனை வழங்குங்கள் அதுதான் நியாயம் தர்மம் அதைவிடுத்து எல்லாவற்றுக்கும் ஒட்டு மொத்த காரணம் இவரே என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று நான் கட்சி சார்ந்து பேசிவில்லை நான் இந்த கட்சியும் இல்லை இந்த சூழ்நிலையில் யார் இருந்தாலும் என்னுடைய எண்ணம் இதுவாகதான் இருக்கும். மறைந்த முதல்வராகட்டும், இப்போது உள்ள பிரதமராகட்டும் மரணிக்கும் தருவாயில் எனக்குப் பிடிக்காதவராக இருந்தாலும் என் எண்ணம் இப்படிதான் இருக்கும். இனிமே இவர்கள் வரப்போவதில்லை முடிந்துவிட்டது பிறகு ஏன் சாகும் தருவாயில் நாம் தூற்ற வேண்டும்? அவரவருக்கு உண்டான தண்டனையை கால தேவன் கொடுப்பார். நீங்கள் ஏன் அந்த பாவத்தை செய்கின்றீர்கள்? சாகவும் முடியாமல் வாழவும் முடியாமல் தவிப்பதே ஒரு பெரிய தண்டனைதான் இல்லையா? இவர் செய்த நல்ல விஷயங்களை நினைவில் வைப்போம் கெட்டதை மறந்து தொலைப்போம். மக்களுக்கு தேவையான எத்தனையோ பயனுள்ள திட்டங்களை கொண்டு வந்தவர் இவர். இவர் ஆட்சியில் எந்த திட்டத்தையும் எதிர்த்து போராட்டம் நடத்தவில்லை பிறகு இவரை தூற்றுவது ஏன்? காலனையே வென்ற கலைஞர் மற்றுமொரு மார்க்கண்டேயனாகதான் எனக்குத்தெரிகிறார்.

இவர் மட்டுமல்ல இவர் போன்று எந்த மனிதர் இறந்தாலும் வழியனுப்பி வைப்பதே சிறந்த செயல். நல்லதுக்கு போகலன்னா கூட கெட்டதுக்கு கண்டிப்பா போகனும்னு ஏன் சொல்கிறார்கள் இனிமே அவர்கள் இல்லை என்பதால்தானே... ? இதை நீங்கள் புரிந்துகொண்டாலே இந்த பக்குவம் வந்துவிடும். அதைவிட மற்றவர்கள் குற்றவாளி தவறு செய்தவன் என்று கூறுவதற்கு முன் நாம் எந்தவகையில் அவர்களை விட சிறந்தவன் என யோசித்தால் போதும் நம்முடைய மனசாட்சி அதற்கு விடைசொல்லும்.



1 comment:

  1. என் மனதில் பட்டதை நான் குறிப்பிடுகிறேன் இது என்னுடைய கருத்து உங்களுக்கு பிடிக்கவில்லையா மவுனமாக போங்கள். ஏதோ ஒரு ஈத்தரை ..... இதை படித்துவிட்டு கேவலமா கருத்து சொல்லுது... பேர் இல்லாமல் ஊர் இல்லாமல் பொங்குற இதிலிருந்து தெரியலை நீ எவ்வளவு பெரிய ஈத்தரைன்னு... 😡 😡 😡 நீ எல்லாம் மனுசனே இல்லன்னு தெரியுது.

    ReplyDelete