Saturday, 17 February 2018

விரிசல்

நான் போகிறேன்
மெல்ல மெல்ல
உன்னை விட்டு..!



நீ சிரிக்கிறாய் நான்
செல்ல செல்ல
கையசைத்து..!

உன் முகம்
உன் குரல்
உன் நினைவுகள்
சிறு புள்ளியாய்
தேய்கிறது என்னைவிட்டு!

உன் கண்ணிலே
உன் நெஞ்சிலே
நான் இல்லையே - அதனால்
மனமில்லாமலே சற்று
விலகி நிற்கிறேன்
சில காலமே..!

உன்னை புரிந்தப்பின்
என் மனம் தெளிந்தப்பின்
பாரமில்லாமல் என் உள்ளம்
சற்றே லேசானதே..!


No comments:

Post a Comment