Saturday, 19 August 2017

மொரல் மீன் குழம்பு

தேவையான பொருட்கள் :-

மொரல் மீன் - 1/2 கிலோ
மிளகாய்த்தூள் - 4 ஸ்பூன்
மல்லித்தூள் - 3 ஸ்பூன்
புளி - 1 எழுமிச்சை அளவு
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
சின்ன வெங்காயம் - 100 கிராம்
வெந்தயம் - 1 ஸ்பூன்
சீரகம் - சிறிது
பூண்டு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய்- தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப


செய்முறை :-

மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். தக்காளி, வெங்காயம், பூண்டு,பச்சைமிளகாய ஆகியவற்றை நறுக்கி வைத்துக்கொள்ளவும். புளியை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக்கொள்ளவும். இப்போது கடாயயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தம் போடவும் பொன்னிறமாக சிவக்க வந்ததும் சீரகம், பூண்டு, வெங்காயத்தை போடவும் வெங்காயம் சிவந்து வர கறிவேப்பிலை,தக்காளி, பச்சைமிளகாய் போடவும் பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள், சிறிது மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இப்போது கரைத்த புளி கரைசலை உற்றி கொஞ்சம் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். சிறிது நேரத்திற்கு பிறகு நன்கு கொதி வந்ததும் மீனை போட்டு சிறிது நேரத்திற்கு பிறகு இறக்கவும்.

 இப்போது சுவையான மொரல் மீன் குழம்பு ரெடி...

No comments:

Post a Comment