தேவையான பொருட்கள் :-
மீன் - 1/2 கிலோ
கடலை மாவு - தேவைக்கேற்ப
மிளகாய்த்தூள் - 1 1/2 ஸ்பூன்
முட்டை - 1
சோம்பு - 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 4
பூண்டு - 3 பல்
கலர் பொடி - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை :-
சோம்பு, வெங்காயம், பூண்டு இவற்றை நன்றாக அரைத்துக்கொள்ளவும். முட்டையை உடைத்து வெள்ளைக்கருவை மட்டும் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். இப்போது முட்டையின் வெள்ளைக்கருவில் அரைத்தை விழுது, மிளகாய்த்தூள், கடலைமாவு, உப்பு, கலர் பொடி இவைகளை சேர்த்து நன்றாக கலக்கவும் (அதில் சிறு தக்காளி சாரு கொஞ்சம் சேர்த்தால் சுவை கூடும்) பிறகு அந்த கலவையில் மீன் துண்டுகளை புரட்டி 1/2மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு வானலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும் மீன் துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
இப்போது சுவையான மீன் வறுவல் ரெடி
No comments:
Post a Comment