முந்தைய பதிவில் 2007 ஒலிபரப்பான பாடல்களை பதிவு செய்தேன். இந்த பதிவில் 2008 ல் நிகழ்ச்சிக்கு வந்தவைகளில் சில தென்றலில் அதிகாலையில் கீதாஞ்சலி என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு வெள்ளியன்றும் அறிவிப்பாளர் வரும்போது அவர் தொகுத்த சில பாடல்கள். 04.07.2008 வெள்ளி
என் எண்ணச் சிதறல்கள் சிந்தனைச் சிறகுகளாக விண்ணில் பறக்க விடுகிறேன் ஏனெனில் சிறகில்லா சிறுபறவை நான்..!
- ஆன்மீகம் (29)
- இலக்கியம் (9)
- இலங்கை வானொலியின் குரல் (9)
- கட்டுரை (106)
- கவிதை (153)
- சிறுகதை (20)
- தஞ்சாவூர் ஸ்பெஷல் சமையல் (43)
- படக் கவிதைகள் (12)
- பயணக்கட்டுரை (11)
- மருத்துவம் (25)
Sunday, 24 January 2016
Friday, 22 January 2016
ஊரும் பேரும்
காணும் பொங்கல் அன்று ஒரு வேலையாக நான் பிறந்து வளர்ந்த கிராமத்திற்கு சென்றேன். அத்திவெட்டி மறவக்காடு பெரும் கிராமம் சுத்துப்பட்டு 18 கிராமங்களை கொண்டது. பஸ்காக காத்திருந்து பிறகு நடந்தே செல்லலாம் என்று முடிவு செய்து நானும் அம்மாவும் நடந்து சென்றோம். நான் 1 முதல் 5 வரை அந்த கிராமத்து பள்ளியில் தான் படித்தேன். பிறகு நல்ல படிப்புக்காக டவுன் பள்ளியில் சேர்க்கப்பட்டேன். அப்போது 4 பஸ் மட்டுமே அந்த கிராமத்திற்கு செல்லும் அடிக்கடி பஸ் போக்குவரத்து கிடையாது பட்டுக்கோட்டை செல்ல வேண்டுமென்றால் காத்திருந்துதான் போக வேண்டிருக்கும் பள்ளிக்கு செல்லும் போது நிறைய தடவை பஸ்சை தவரவிட்டு பிறகு அம்மா வந்து அழைத்து செல்வார்கள். இப்போதும் அது மாறவே இல்லை என்று தெரிகிறது 20 வருடங்களுக்கு பிறகும் இன்னும் அந்த கிராமம் அப்படியே இருக்கிறது. அங்கே இருந்த கடைகள், வீடுகள் எதிலும் எந்த மாற்றமும் இல்லை அதே சாலையில் நான் நடந்து செல்லும் போது சிறுகுழந்தையாக பள்ளிக்கு சென்ற நினைவு வந்தது. நான் வளர்ந்திருக்கிறேன் அந்த ஊர் வளரவே இல்லை.
Sunday, 10 January 2016
சட்ட மன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் செய்ய போவது என்ன
இப்போது பரபரப்பாக பேசப்படுகின்ற விஷயம் வருகின்ற சட்ட மன்ற தேர்தல். இதுவரை இலவசங்களையும், பணத்தையும் கொடுத்து ஓட்டு வாங்கிய அரசியல் கட்சிகள் இனி விழிப்பாக இருக்க வேண்டும். ஏனெனில் மக்கள் விழித்துக்கொண்டார்கள் அவர்கள் இலவசங்களை எதிர்பார்க்கவில்லை நல்ல தார்சாலைகள், நீர்நிலை ஏரிகளை ஆழப்படுத்துதல், பாலங்கள் அமைத்தல், பள்ளி, சுகாதாரநிலையம் போன்ற அத்தியவாசிய திட்டங்கள்தான் வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றார்கள்.
Thursday, 7 January 2016
காலம் மாறிப்போச்சு
பள்ளியில் ஆசிரியர் வகுப்பு வராத நேரங்களில் வட்டமாக உட்கார்ந்து அன்று பார்த்த சினிமாவை எகோ சவுண்ட், பைட், பாட்டு என 21/2 மணி நேர படத்தை நீட்டி சொன்ன காலங்கள் மாறிப்போச்சு..!
Tuesday, 5 January 2016
எனக்குப் பிடித்த அறிவிப்பாளரின் நிகழ்ச்சி தொகுப்பு
இந்த 2016 ல் என்ன எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது சட்டென ஒன்று என் நினைவுக்கு வந்தது. கடந்து வந்த பாதையை சற்று திரும்பி பார்த்தால் என்ன என்று தோன்றியது. அதாவது அந்த நேரங்களில் நமக்குப் பிடித்த விஷயங்களை குறிப்பிடலாம் என்ற ஒரு சின்ன ஆசை.
Subscribe to:
Posts (Atom)