Monday 19 May 2014

யாத்திரை (2) திருவண்ணாமலை


              திருவண்ணாமலை செல்ல வேண்டும் என்று ஒரு ஆசை எனக்கு நீண்ட நாட்களாகவே இருந்தது ஒருநாள் போகலாம் என்று முடிவெடுத்தோம் ஆனால் சரியான ரூட் தெரியவில்லை. என் அலுவலத்தில் என்னோடு பணியாற்றுபவர் சொன்னார் கும்பகோணம் போய் போகலாம் என்று சொன்னார் நாங்களும் அவ்வாறு செல்ல முடிவெடுத்தோம். ஆனால் அந்த வழியில் ஏன்டா சென்றோம் என்று நொந்து போனோம்.


              ஒருவிதத்தில் இது ஒரு சுற்று பயணமாக அமைந்தது. நாங்கள் பட்டுக்கோட்டையில் இருந்து மன்னார்குடி சென்று அங்கிருந்து கும்பகோணம் சென்றோம். அங்கே சென்ற பிறகுதான் தெரிந்தது திருவண்ணாமலைக்கு நேரடி பஸ் இல்லை என்று பிறகு சிறிது நேர காத்திருப்புக்குபின் அணைக்கரை செல்லும் பஸ்சில் ஏறினோம் போய்கொண்டு இருக்கும் வழியிலே திரும்பி விடுவோமா என்றுகூட தோன்றியது என்னடா சிவன் ரொம்ப சோதிக்கிறானே என்று நினைத்தேன். அணைக்கரை சென்ற பிறகு பாலம் வேலை
நடைபெறுகிறது இங்கேயே இறங்கி செல்லுங்கள் என்று இறக்கிவிட்டார்கள்.



               அணைக்கரையில் மிகப் பெரிய பாலம் கட்டிக்கொண்டு இருந்தார்கள் அதைகடந்து செல்ல ஒரு ஷேர் ஆட்டோவை பிடித்து ஆற்றை கடந்து சென்றோம் ஆற்று மணல் சிறு ஓடை போன்று இருந்தது அதில் முதலை இருப்பதாக பயம் காட்டினார் அந்த ஊரை சேர்ந்த ஆட்டோ லேசாக சாய்ந்தால் போதும் நீரில் விழுந்துவிடும் பயந்துகொண்டே அந்த ஆற்றை பிரம்மிப்போடு பார்த்தப்படி கடந்து சென்றோம். பிறகு அணைக்கரையில் இறங்கி பஸ்காக காத்திருந்தோம் பஸ் ஸ்டாண்ட் எதுவும் இல்லை நீண்ட காத்திருப்புக்கு பின் மாலை 5 மணிக்கு பண்ருட்டி பஸ்சில் எறி இரவு பண்ருட்டியில் இறங்கினோம் அப்போதுதான் திருவண்ணாமலை பஸ் கண்ணில் பட்டது
அப்போதுதான் கொஞ்சம் சந்தோஷம் வந்தது.
 
        
                     அதன்பிறகு திருவண்ணாமலை பஸ்சில் ஏறி இரவு 9 மணிக்கு திருவண்ணாமலையில் இறங்கினோம் அதன் பிறகுதான் பயம் விளகியது.
ஒரு வழியாக கோவில் வந்து சேர்ந்தோம் முதல் வேளையாக பாதுகாப்பாக ஒரு ரூம் எடுத்து தங்கினோம் விடிகாலையில் 5 மணிக்கு குளித்து முடித்து எம்பெருமான் சிவனை தரிசனம் செய்தோம். அருணகிரிநாதர் ஆலயம் நான்கு புறமும் அழகான கோபுரங்கள் அதோடு தங்கத்தேர் ஊர்வலம் காண கண்கொள்ளா காட்சியாக இருந்தது அப்புறம் ஒவ்வொரு இடமாக சுற்றி பார்த்தோம் போட்டோ எடுத்தோம். அங்கே போவதற்கு முன் எனக்கு ஒரு கற்பனை இருந்தது கிரிவலம் என்றால் மலையின் மேலே சுற்றி சுற்றி போக வேண்டும் ஒருமாதிரி சுரங்க பாதைபோல் இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் அங்கு வேறாக இருந்தது.


             அதன் பிறகு தோழியின் குடும்பத்தாருக்காக காத்திருக்க தொடங்கினோம் சரியாக 12 மணிக்கு வந்து சேர்ந்தார்கள். சின்ன சின்ன விசாரிப்புகளோடு மீண்டும் ஒரு முறை கோவிலை அவர்களோடு சுற்றி வந்தோம். பிறகு ஆட்டோவில் கிரிவலம் வந்தோம் அதை முடித்துக்கொண்டு ஒரு ஹோட்டலில் மதியம் சாப்பிட்டோம் அதன் பிறகு 2 மணி நேரம் மட்டும் எங்க கூட இருந்த எங்கள் மனம் கவர்ந்த தோழி பிரிய நேர்ந்தது எங்களுக்கு என்னவோ கஷ்டமாக இருந்தது ஏனெனில் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்தோம் ஆனால் சரியாக பேச முடியவில்லை என்ற வருத்தம் நிறைய இருந்தது ஆனால் அவர்களுக்கு எப்படியோ தெரியாது ஒருவிதத்தில் சந்தோஷமாக இருந்தது அவர் கை பிடித்து ஒவ்வொரு இடமாக அழைத்து சென்றதில் திருவண்ணாமலை சந்திப்பை மறக்க முடியாது. அதன் பிறகு தரிசனத்தை நல்லபடியாக முடித்து கொண்டு வீடு திரும்பினோம். எம்பெருமானை தரிசிக்க வரும்போது சோதனைகளும் வேதனைகளும் கஷ்டங்களும் நிறைய இருந்தது ஆனால் வீடு திரும்பும் போது எந்த கஷ்டமும் இல்லை அதன் பிறகு நாட்கள் சிறப்பாகவே சென்றது.
                
                 


             நீங்களும் ஒருமுறை சென்று வாருங்கள் நல்லதே நடக்கம்.

1 comment:

  1. திருவண்ணாமலை பெயரை கேட்டாலே உள்ளுக்குள் ஒரு இனம் புரியாத அமைதி. அது மலையாலா, அண்ணாமலையாரினாலா, ரமணரினாலா தெரியவில்லை. இந்த பதிவு பழைய நினைவுகளுக்கு அழைத்து சென்றது.

    ReplyDelete