Friday, 2 May 2014

கல்கியின் பொன்னியின் செல்வன் எனது பார்வையில்


                  புத்தகம் நம் வாழ்க்கையில் அதிக பக்கங்கங்களை கொண்டதாக இருக்கிறது நான் முதலில் படித்த கதை புத்தகம் ராணிகாமிக்ஸ் வரும் மாயாவி புத்தகம்தான் 4-5 வகுப்பு படிக்கும்போதே படித்தது உண்டு படித்துவிட்டு அதை அப்படியே ஒன்றுவிடாமல் கதையும் சொல்லியிருக்கிறேன். 

                வளர வளர புத்தகமும் மாறியது ஆசிரியர்களும் மாறி போனது சுஜாதா, ராஜேஸ்குமார், வித்யா சுப்ரமணியம், அனுராத ரமணன், சிவசங்கரி, சுபா, சுமதி,ரமணிசந்திரன் இவர்களின் புத்தகம் படிப்பதே ஒரு பொழுது போக்காவே அமைந்து போனது அதே நேரத்தில் மனதை பக்குவபடவும் வைத்தது. ஒரு குடும்பம், ஒரு காதல், ஒரு அலுவலகம் ஒரு உலகம் எப்படி இருக்கும் அதில் உள்ள மனிதர்கள் எப்படி பட்டவர்கள் என்று இவர்கள் எழுதிய புத்தகம்தான் உணர்த்தியது.                  கல்லூரியில் படிக்கும் போது கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படித்தேன் நானும் அந்த காலத்திலே வாழ்ந்தேன் நான் மட்டும் அல்ல அந்த நாவலை படித்தவர்கள் எல்லாருமே அந்த காலத்திற்கே போய்விடுவார்கள். நானும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவள் என்பதாலோ என்னவோ என்னை ரொம்ப கவர்ந்தது இன்னும் தஞ்சையை நேசிக்க வைத்தது.

                     அந்த நாவலை படித்த பிறகுதான் காவிரி ஆற்றின் பெருமையை உணர்ந்தேன் தஞ்சை மண்ணின் பெருமை உணர்ந்தேன் வேதாரண்யம் கோடியகரையில் சதுப்பு நிலகாடுகளையும் புதைகுழிகள் இருப்பதையும் கூடழகர் கோவில் இருப்பதையும் நாகப்பட்டிணத்தில் புத்தவிஹாரம் இருப்பதையும் எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கையை முழுமையாக என்னால் உணர முடிந்தது. அந்த நாவலை படிக்கும்போது இலங்கையை சுற்றி பார்த்த உணர்வு ஏற்பட்டது யாழ்பாணம், ஆணைதுறவு, பரிசுதுறை மாமரதோட்டத்தை பற்றி சொல்லியிருப்பார் அதோடு புத்தவிஹாரத்தை பற்றி ரொம்ப அழகா சொல்வார். அதன் பிறகுதான் இலங்கையை நான் நேசிக்க தொடங்கினேன். ஒரு புயல் எப்படி உருவாகும் என்று இந்த நாவலை படித்துதான் தெரிந்து கொண்டேன். 

                    பொன்னியின் செல்வன் நாவலை வைத்து இன்னும் நிறைய கதைகள் தொடங்கலாம் ஏனெனில் அத்தனை கதாபாத்திரங்கள் எப்படி அவரால் எழுத முடிந்தது ஆச்சரியமாக இருந்து இவரை போன்ற ஒரு படைப்பாளி உலகில் இல்லை இவரை ஒரு "பிரம்மா" என்றுதான் சொல்லவேண்டும். சின்ன சின்ன கதாபாத்திரங்களை கூட மனிதில் நிற்கும்படி செய்திடுவார். கதை என்னவோ இராஜாராஜ சோழனை பற்றியாதக இருந்தாலும் கதையின் நாயகன் வந்தியதேவன் தான் அவனின் காமெடி கலந்த பேச்சு, வீரம், அதோடு குந்தை வந்தியதேவனின் காதல் அத்தனை சுவாரஸ்யமாக இருக்கும் அந்த உரையாடல் அந்த காட்சி இன்னும் என் கண்ணுக்குள் இருக்கிறது. அந்தபுரத்தில் வந்தியதேவனும் குந்தவையும் முதல் சந்திப்பிலே இதயத்தை பறிகொடுத்து சிலையாக நிற்பதும், அவன் கைதியாகி சிறை செல்லும்போது கண்ணோடு கண்ணும் மனதோடு மனதோடு பேசிகொள்ளும் காதல் மொழி இருக்கிறதே அப்பப்பா... வார்த்தையால் சொல்ல முடியாது.மணிமேகலையை தேடி காட்டுக்கு போகும்போது இருவரும் சந்திக்கின்ற காட்சி கண்ணில் கண்ணீரை வரவழைக்கும்.                     காதலுக்கு மட்டுமல்ல நட்புக்கும் நிறைய முக்கியத்துவம் கொடுத்திருப்பார். கரிகாலசோழன்,பார்த்தீபன், வந்தியதேவனின் நட்பும், அருள்மொழிவர்மன், வந்தியதேவனின் நட்பும் அற்புதமா படைத்திருப்பார். அதோடு குந்தவைக்கும், வானதிக்கும் இடையே உள்ள நட்பு உறவையும் தாண்டி நட்பை அழகுப்படுத்தியிருப்பார். 
                             போர் முறைகளையும் அதன் தந்திரங்களையும் ஒற்றன் ஆழ்வார்க்கடியான் நம்பி மூலம் அரசகுல ஒற்றன் இப்படிதான் இருப்பான் என்று அழகாக சொல்லியிருப்பார். எல்லாவற்றுக்கும் மேலாக பாண்டிய குலத்து நந்தினி வஞ்சத்தோடு கரிகாலனை பழிவாங்குவது அப்பப்பா... இப்படியும் பெண்கள் இருப்பார்களா என்று எண்ணம் தோன்றும் நந்தினி அந்த வாளை எடுத்து வீசும்போது யார் மீது விழுந்தது என்று தெரியாது ஆனால் இறந்தது கரிகாலன் அந்த மரணத்ததை மர்மமாகவே குறிப்பிடுகிறார் கல்கி. 

                                   இந்த நாவலைப் பற்றி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் அத்தனை விஷயங்கள் இருக்கிறது. என்னை வியக்க வைத்த ஒரு நாவல் என்றால் அது பொன்னியின் செல்வன் தான் அற்புதமான நாவல் கதை பிடிக்காதவர்களை கூட படிக்கத்தூண்டும். நான் எத்தனை முறை படித்தேன் என்று கணக்கில்லை நீங்களும் படித்து பாருங்கள் நீங்களும் இதே சொல்வீர்கள்.No comments:

Post a Comment