Saturday 29 October 2022

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் போகலாம் வாங்க




              ஒரு நாள் திடீர்னு சென்னைக்கும் பக்கத்துல இருக்கிற 
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு போகனும்னு தோணுச்சு நாம வழக்கமா அப்படித்தான் கிளம்புவோம். காலையில் 7 மணிக்கு கோயம்பேடு பஸ்ஸ்டாண்டு பஸ் ஏறினேன் நான் நினைச்சேன் பக்கத்துலதான் இருக்கும் போயிட்டு சீக்கிரம் வரலாம் னு அப்புறம் தான் தெரியுது அது சென்னையில் இருந்து 60கி.மீ னு அச்சச்சோ இது தெரியாம நாம பாட்டுக்கும் அசால்டா கிளம்பிட்டோமேன்னு உள்ளுக்குள்ள திக்..திக்.
.              திக்னு இருக்கு ஏன்னா நான் ஹாஸ்டல்ல தங்கியிருக்கேன் மிட்நைட்ல போக முடியாதுல்ல அந்த பயம் வேறு சரி பார்த்துக்கலாம்னு வாட்சை பார்த்துகிட்டே இருக்கேன் பஸ் ஆமை மாதிரி போகுது நேரம் ஜெட் வேகத்துல ஓடுது ஒருவழியா சரியா 1.30 க்கு கோவில் வாசல்ல பஸ் நின்னுச்சு.  பஸ்ஸை விட்டு இறங்கி கோவில் வாசலை நோக்கி நடந்தேன்
கோவில் வாசலில் கடைகள் அதிகமா இருந்தது ஒரு கடையில் எலுமிச்சை மாலை வாங்கிட்டு கூடவே அர்ச்சனை தட்டும் வாங்கிட்டு போனேன். உள்ளே நுழையறுத்துக்கு முன்னாடி ஒரு பாட்டி எலுமிச்சை பழத்தை தலையில் வைத்து திருஷ்டி கழித்துவிட்டு அதை தரையில் வைத்து என் காலை வைத்து மித்துவிட்டு உள்ள போக சொன்னுச்சு நானும் அதே மாதிரி செய்துவிட்டு அந்த பாட்டியிடம் 10 ரூபாய் பணத்தை கொடுத்து.விட்டு சென்றேன். அந்த கோவிலில் இது வழக்கமாம் கோவிலின் உள்ளே சென்றால் அவ்வளவு கூட்டம் 20 ரூபாய் ல இருந்து 500 ரூபாய் வரை கவுன்டர் கூட்டம் நிரம்பி வழிந்தது. நான் ஒரு கவுன்டரில் டிக்கெட் வாங்கி கொண்டு என்னை சொறுகிகொண்டேன் .


                   கோவில் கருவறைக்கு முன்னாடி சண்டை சக்கை போடு போடுறாங்க என்னடா  இது கோவிலு வந்தா சாமி கும்பிடாம இப்படி அடிச்சிக்கிறாங்க ச்சைன்னு தோணுச்சு... சாமிக்கு கிட்ட போக வேண்டிய நேரம் நமக்கு வந்துச்சு கிட்ட போனால் அங்க ஐயர் இல்ல பூசாரிதான் பூஜை செய்றாங்க சரின்னு நான் எலுமிச்சை மாலையோடு அர்ச்சனையை நீட்டுறேன் அந்த பூசாரி 101 பணத்தை கொடுங்க அப்பதான் அர்ச்சனை பண்ணுவோம்னு சொல்றாங்க ஆத்தாடி இது என்ன பகல் கொள்ளையாக இருக்குன்னு நினைச்சிக்கிட்டு அந்த கூட்டத்துல ஹேன்பேக்ல கையை விட்டு பணத்தை எடுக்குறதுகுள்ள பெரும்பாடா ஆச்சு ஆனா பாருங்க நம்மபளால சாமி தரிசனம் செய்ய முடியல. ஏன்னா அந்தளவுக்கு கூட்டம். இத்தனை கஷ்டப்பட்டு தியேட்டர்ல டிக்கெட் வாங்கிட்டு போர மாதிரி வந்து கடைசியில சாமியை ஒழுங்கா கும்பிட முடியல என்கிற குறை மட்டும் மனசுல இருந்தது. 

                       நான் எந்த கோவிலுக்கு சென்றாலும் எத்தனை கூட்டம் இருந்தாலும் ராணி மாதிரி நமக்கு உள்ள போக ஈசியா வழி கிடைக்கும் அது எனக்கே ஆச்சரியமா இருக்கும் நானே வியந்தும் இருக்கேன் ஆனால் இங்க அந்த மாதிரி ஒரு.வாய்ப்பு கிடைக்கல ஏன்னு தெரியல. அங்கே இருக்கிற அங்காளம்மன் ரொம்ப சக்தி வாய்ந்தது என்றும் திருநங்கைகள் அமாவாசை அன்று சுடுகாட்டில் மாயான பூஜை செய்துவிட்டு நேரடியாக கோவிலுக்கு வருவார்கள் என்றும் அப்படி வரும் போது பக்தர்கள் தரையில் படுத்திருப்பார்களாம் அவர் மீது திருநங்கை ஏறி வந்தால் நல்லது என்று சொல்கிறார்கள்.

                 நான் ஒருவழியா சாமி கும்பிட்டுட்டு இந்த பக்கம் வந்தால் பெரியக்கா படுத்திருப்பது போல் ஒரு பெரிய சிலை ஒன்று இருந்தது அதற்கும் பக்கத்தில் கையில் கயறு கட்டும் இடம் இருக்கிறது அங்கே கயறு கட்டிக்கொண்டால் நம்மிடம் எந்த தீய சக்தியும் நெருங்காது என்று சொன்னார்கள் நானும் கயறுக்கட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினேன். அதன்பிறகு பஸ் பிடித்து சென்னை நோக்கி பயணம் செய்தேன் சரியாக 8 மணிக்கு கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்கு வந்தது. இறங்கி பார்த்தால் வெறிச்சோடி இருக்கிறது எந்த பஸ்ஸும் இல்லை என்னடா இது எப்பவும் ஜே...ஜே... என்று இருக்கும் இன்று ஒரு பஸ்ஸும் இல்லையே எப்படி ஹாஸ்டல் போறதுன்னு யோசித்துக்கொண்டு இருக்கும் போதே திருவான்மியூர் என்று போர்டு போட்டு பஸ் வந்தது அப்பதான் எனக்கு உயிரே வந்தது ஓடி போய் பஸ்ஸில் ஏறிக்கொண்டேன். பஸ்ஸில் அவ்வளவாக கூட்டம் இல்லை நல்லவேளை இந்த பஸ் வந்ததே இல்லன்னா என்ன பண்றதுன்னு நினைக்கும் போதே பஸ் கன்ட்ரைக்டர் பேசிக்கொண்டு வந்தார் இந்த பஸ் திருவான்மியூர் போறது இல்ல வேற வழியா வேளச்சேரி போற பஸ் போர்டு இல்லாததால் திருவான்மியூர் னு போர்டு போட்டு வந்தோம்னு பேசிட்டு வந்தார் அப்பதான் நான் உணர்ந்தேன் இந்த பஸ் என்னவோ எனக்காக வந்தது போல்.. அவர் சொல்வதை யோசித்து பார்த்தால் அப்படித்தான் இருந்தது திருவான்மியூர் போற வழியே இல்லாத பஸ் அன்று மட்டும் ஏன் அந்த வழியாக வரவேண்டும் நான் பஸ்ஸுக்காக காத்திருக்க வேண்டும் அந்த அங்காளம்மனே என் கஷ்டத்தை புரிந்து எனக்கு உதவி செய்ததாக நினைத்துக்கொண்டேன். நாம் போகிற ஒவ்வொரு கோவிலுக்கும் அந்த இறைவன் இறைவியே எனக்கு துணையாக வருவதை எனது ஒவ்வொரு கோவில் தரிசனத்திலும் என உணர்த்துகிறது.மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது எனக்கு வழிகாட்டியாக முன்னும் பின்னும் கடவுள் இருக்கிறார் என்று நான் மனதாரா நம்புகிறேன். 

                    அதன் பிறகு பஸ்ஸில் நான் மட்டும் இருப்பதை கண்ட கன்ட்ரைக்டர் நீங்க எந்த ஸ்டாப்புலம்மா இறங்கனும்  பஸ் ஸ்டாண்ட் உள்ள போகாது  காட்டன் ஹவுஸ் பக்கத்துல இறங்கிகோங்க பயம் ஒன்னுமில்லயே என்றார். இல்லங்க இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விஷயம் நான் இங்கேயே இறங்கிக்கிறேன் என்றேன் அவரும் பஸ்ஸை நிறுத்தி ஜாக்கிரதையா போங்கம்மா என்றார் ரொம்ப அக்கறையா . மனசுக்குள் அந்த அம்பாளுக்கு நன்றியை சொல்லிவிட்டு பத்திரமாக ஹாஸ்டல் சென்றேன். நினைத்துப் பார்த்தால் இப்பவும் மெய் சிலிர்க்கிறது.

உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறை அங்காளம்மன் கோவிலுக்கு சென்று வாருங்கள்.

No comments:

Post a Comment