Friday 28 October 2022

புத்தக வாசிப்பு என்பது ஆழ்நிலை தியானம் போன்றது

முன்பெல்லாம் புத்தக வாசிப்பின் பசி எனக்கு அதிகமாக இருந்தது. கைகளில் புத்தகம் இல்லாத நாட்களை நான் வெறுமையாக உணர்ந்திருக்கிறேன். எழுத்துக்கூட்டி படித்த காலத்திலே ராணிகாமிஸ் படிக்கத் தொடங்கினேன் அதன் பிறகு தொடர்ந்து கொண்டே இருந்தது. படிக்காத புத்தகமும் இல்லை தெரியாத எழுத்தாளரும் அல்ல. படிக்க படிக்க நிறைய அனுபவம் கிடைத்தது ஆனால் மனிதர்களிடம் இருந்து விலக்கி வைத்தது. சாலை ஓரங்களில் கூட பேப்பர்களை பொரிக்கு வந்து படித்த நாட்கள் உண்டு அந்தளவுக்கு புத்தக புழுவாக என்னால் இப்போது ஒரு புத்தகத்தை கூட படிக்க முடியவில்லை. 

படிக்க நேரமில்லை என்று ஒரு போதும் நான் சொல்ல மாட்டேன் எந்த ஒரு விஷயத்திற்கும் நேரம் ஒரு பிரச்சினையில்லை நமக்கு விருப்பம் இருந்தால் நேரம் தன்னால் நமக்கு கிடைக்கும் என்று நம்புகிற ஆள் நான். அப்படியிருக்கையில் என்னால் ஏன் புத்தகம் வாசிக்க முடியவில்லை காரணம் என்னவாக இருக்கும்???? என் மனம் அமைதியாக இல்லை பலவாறாக குழம்பி இருக்கிறது அதனால் என்னால் புத்தகம் வாசிக்க முடியவில்லை. ஒரு புத்தக வாசிப்பு என்பது ஒரு தவநிலை என்பேன் நான். மனம் அமைதியாக இருந்தால் மட்டுமே நம்மால் தியானம் செய்ய முடியும். மனதை ஒரு நிலைப்படுத்தாமல் தியானம் செய்ய முடியாது. அது போலத்தான் புத்தக வாசிப்பும் மன அமைதியில்லாமல் புத்தக வாசிப்பை தொடங்குவது கடினம் என்கிறேன். நம் மனம் எதையோ சிந்திக்கிறது.. எதையோ யோசிக்கிறது அதை எட்டும் வரை அமைதி கிட்டாது. 

என்னையே நான் பரிசோதித்து கொள்கிறேன் என்னையே நான் ஆராய்ந்து பார்க்கிறேன் என் மனதை ஒரு நிலைப்படுத்தாமல் என்னால் புத்தகம் வாசிக்க முடியாது என்று புரிந்துகொண்டேன். நிறைய பேர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறோம் எனக்கு புத்தகம் வாசிக்கப் பிடிக்கல, விருப்பம் இல்ல னு அதற்கு காரணம் கண்டிப்பாக மனமைதியின்மை தான் காரணமாக இருக்கும் என்று சொல்கிறேன். 

ஒரு புத்தகத்தை வாசிப்பதற்கும், எழுதுவதற்கும் முதலில் தனிமை தேவை அதன் பிறகு மன அமைதி முக்கியம் எந்த கவலையும் பிரச்சினையும் இல்லாமல் இருந்தால் நம்மால் புத்தக வாசிப்பில் முழுமையாக நுழைய முடியும் என்பது என் தீர்க்கமான கருத்து..
 

No comments:

Post a Comment