Wednesday 22 June 2022

நம்பிக்கை

நம்பிக்கை: 

நம்ப மேல எத்தனை பேருக்கு நம்பிக்கை இருக்கும்?? பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு சுத்தமா நம்பிக்கை இருக்காது ஏன் நம்ப வீட்டுல கூட நம்பிக்கை வைக்க மாட்டாங்க கூட இருக்கிற நட்பு கூட நம்ப மாட்டாங்க ஆனால் நம்மைப் பற்றி தெரியாத முன்பின் பழக்கம் இல்லாத நாம் முகம் கொடுத்து பேசாத நபர் நம் மீது வைக்கிறாங்க பாருங்க நம்பிக்கை  அது எவ்வளவு பெரிய விஷயம்.. ஒரு சின்ன உதாரணம் 

இன்னைக்கு காலையில வண்டியில போய்கிட்டு இருந்தேன் சாலை ஓரத்தில் ஒரு பையன் நொங்கு வெட்டி வித்துகிட்டு இருந்தாப்புல நான் வண்டிய ஓரமா நிறுத்திட்டு 20 ரூபாய்க்கு நொங்கு கொடுப்பான்னு சொன்னேன். அந்த பையன் பையை எடுத்து மளமளன்னு ஒரு 7 நொங்கு எடுத்து போட்டு நீட்டினார்.  நான் நூறு ரூபாய் எடுத்துக்கொடுத்தேன் அவரோ சட்டென்று "சில்லரை இல்லயேக்கா நீங்க சாய்ந்தரம் வரும் போது கொடுங்க என்றார். 

சாய்ந்தரம் கொடுக்கவா?? நம்மை முன்பின் தெரியாதே பின்ன எப்படி?  அதோடு சாய்ந்தரம் வரும் போது நொங்கு வியாபாரம் இருக்காது . காலையில் போகும் பார்ப்பேன் ஆனால் சாய்ந்தரம் இருக்காது நான் பார்த்திருக்கிறேன் அப்புறம் எப்படி என்று எனக்கோ வியப்பு.. அப்புறம் நான் "இது காலை யாவாரம் இல்லையே என்றேன். சற்று சங்கடத்துடன் ஏனென்றால் முதல் போணி என்றால் பாவம் நம்மால் கெடக்கூடாதுன்னு நினைத்தேன். அவரோ அப்படி ஒன்றும் இல்லை நீங்கள் வரும் போது தாங்க என்றார். அந்த ஒத்த வார்த்தை எனக்கு வியப்பை தந்தது உடனே ஹேன்பேக்கை துலாவி இருபது ரூபாய் காசை தேடி எடுத்து கொடுத்தப் பிறகுதான் மனசுக்கு நிம்மதியானது. 

இதை ஏன் சொல்றேன்னா
பொதுவா சாலையில் ஆயிரம் பேர் போவார்கள்  வருவார்கள் ஆனால் இந்த சாலையோர வியாபாரிகளை கண்டுக்கவே மாட்டாங்க . பெரிய பெரிய மால்கள் சூப்பர் மார்க்கெட் டுக்குதான் போவாங்க அங்க நாம  நானூறு தடவை போயிருப்போம் ஒரு ரூபாய் குறைஞ்சாலும் கேட்டு வாங்கிட்டுத்தான் விடுவான் இவங்க நம்ம கஸ்டமர்தானேன்னு விட மாட்டான். ஆனால் நடை பாதை வியாபாரிகளுக்கு பெரிசா என்னங்க லாபம் கிடைக்கும் ஆனால் இவர்களுக்கு இருக்கிற மனசு கார்ப்ரேட் கம்பெனிக்காரனுக்கு இருக்காது. நான் இந்த நொங்கு வியாபாரியை மட்டும் சொல்லவில்லை சாலை ஓரத்தில் கடை வைத்திருக்கிற காய்கறி கடையாகட்டும், பழக்கடையாக இருக்கட்டும், மளிகை கடையாகட்டும் சின்னதா ஒரு பெட்டி கடையாக இருக்கட்டும் ஒவ்வொருத்தரும் சொல்ற வார்த்தை நீங்க அப்புறமா கொண்டு வந்து கொடுங்க என்பதுதான். நான் பல தடவை ஆச்சரியப்பட்டு இருக்கேன். முன் பின்  அந்த கடைக்கு போய் இருக்கவே மாட்டோம் முதல் தடவை போகும் போதே சொல்றாங்கன்ன அந்த மனசுதான் பெரிய மனசு. 

நாம அந்த வழியா தினமும் போறதை பார்த்திருக்கலாம் அல்லது வந்து கஸ்டமரை கவர் பண்ற யுக்தியா கூட இருக்கலாம். ஆனால் எத்தனை பேருக்கு அந்த மாதிரி நம்பிக்கை வரும் அந்த நம்பிக்கைதான் நம்மை ஏதோ செய்கிறது. 

ரொம்ப நாளா இதுப் பற்றிய பதிவு ஒன்றை செய்ய நினைத்தேன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவம் நமக்கு கிடைக்கும் அந்த அனுபவம்தான் இது.

No comments:

Post a Comment