Thursday 8 June 2023

திருவணைக்காவல் போகலாம் வாங்க

                  ரொம்ப நாளாக எந்த கோவிலுக்கும் போக நேரமில்லை. சமீபத்தில் எனது பிறந்த நாள் அன்று திருவணைக்காவல் கோவில் சென்றேன். தஞ்சாவூர் பஸ் ஸ்டான்டில் திருச்சிக்கு 1to1 பஸ் நின்றிருந்து தஞ்சையில் ஏறினால் திருச்சியில் தான் போய் இறங்க முடியும் வேற எங்கும் வண்டி நிற்காது. நான் அந்த பேருந்தில் ஏறினேன் பஸ்ஸில் ஏறியதும் ஜன்னல் ஓர சீட்டா பார்த்து உட்கார்ந்தேன் கன்ட்ரைக்கடர் டிக்கெட் ..டிக்கெட்... ம்மா.. இப்பவே டிக்கெட் வாங்கிடுங்கம்மா கன்ட்ரைக்டர் வரமாட்டார் என்று சொல்லிக்கொண்டே வந்தார் நான் ஆச்சரியத்தோடு திருச்சி ஒன்னு என்று பணத்தை நீட்டினேன். அவரும் டிக்கெட்டை கொடுத்துவிட்டு நகர்ந்து சென்றார். நடத்துநர் இல்லாத பேருந்தா என்ற வியப்பு எனக்குள் பரவாயில்லையே இது கூட நல்லாதான் இருக்கு என நினைத்துக்கொண்டேன். எனக்கு அருகே இருந்த பெண்ணுக்கும் அதே ஆச்சரியம்தான். பஸ் ஏறிய சற்று நேரத்தில் பஸ் கிளம்பியது என் அருகே இருந்த பெண் கண்ணை மூடி தூங்க ஆரம்பித்தது. நான் பேக்கை திறந்து கடையில் வாங்கிய மசால் வடையை கொஞ்சம் பிய்த்து வாயில் போட்டுக்கொண்டு ஜன்னல் வழியே பார்வையை வீசினேன் நெடுஞ்சாலை மிக அழகாக இருந்தது. 5 வருடத்தில் நிறைய மாற்றம் தெரிந்தது வழியெங்கும் பெரிய பெரிய கட்டிடங்கள் முளைத்திருந்தன. அவற்றையெல்லாம் வேடிக்கைப் பார்த்தபடி சென்றேன். கையில் இருந்த மொபைலை எடுத்து திருச்சியை நோக்கி பயணம் என்று பேஸ்புக்கில் ஒரு பதிவை போட்டேன் அன்று எனது பிறந்த நாள் என்பதால் சில நண்பர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்கள் அதற்கெல்லாம் நன்றியை தெரிவித்தேன் என்னதான் நம்மை நேரில் பார்க்காது பழகாது இருந்தாலும் மனம் நிறைந்து வாழ்த்து சொல்ற மனசு பெரிய மனசுதானே.. நம்மோடு பழகியவர்கள் கூட வாழ்த்து சொல்ல மனசு வராதா போது யாரோ எவரோ சொல்ற அந்த வாழ்த்து மனசுக்கு சந்தோஷம்தான். இந்த நவீன உலகத்தில் இது சற்று ஆறுதலான விஷயம்தான். சற்று நேரத்திற்கெல்லாம் திருச்சி வந்துவிட்டது எனக்கு இன்னும் வியப்பு கூடிவிட்டது ஒரு மணி நேரத்தில் இந்த பஸ் திருச்சி வந்துவிட்டதே என்று. பஸ்ஸை விட்டு இறங்கியதுமே திருவணைக்காவல் பஸ் எனக்காக ரெடியா நிற்பது போலவே நின்றது நான் பஸ் ஏறியதும் பஸ் புறப்பட்டது இந்த பஸ் திருவணைக்காவல் போகுமா என்று டிரைவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். ஏன்னா நாம தெரியாம ஏறிவிட்டு அப்புறம் அவர்களிடம் திட்டு வாங்கி இடையில் இறங்க கூடாதில்லையா அதனால். சற்று நேரத்தில் திருவணைக்காவல் வந்துவிட்டது நானும் இறங்கி மெல்ல நடந்தேன் சாலையில் இருப்பக்கமும் கடைகள் பூஜை பொருட்கள் இருந்தது ஒரு பூக்கடையில் பூ வாங்கினேன் நல்ல நெருக்கமாக கட்டிய மல்லியப்பூ  முழம் முப்பது ரூபாய் இரண்டு முழம் வாங்கினேன் சற்று தள்ளி ஒரு அர்ச்சனை கடையில் அர்ச்சனை வாங்கினேன் அம்பாளுக்கா? அய்யனுக்கா என்றார் கடைக்காரர் அய்யனுக்கே கொடுங்கோ என்றேன். அவரும் நான் கேட்ட எல்லாவற்றையும் கொடுத்தார் நான் வாங்கிகொண்டு பணத்தை கொடுத்தேன் அவறும் புன்முறுவலோடு வாங்கிக்கொண்டு இதை பிள்ளை வையுங்கன்னு இலவச இணைப்பா அருகம்புல்லை நீட்டினார். 
                 நான் கோவிலை நோக்கி நகர்ந்தேன் அன்று ஞாயிறு என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கோவிலைச் சுற்றி வளைத்து வளைத்து போட்டோ எடுத்தார்கள். கோவிலுக்கு நுழைந்த உடனே நாலு கால் மண்டபத்தில் நம்மை வரவேற்பது போல் நான்கு தூண்களிலும் அழகான சிற்பங்கல் பக்தர்களை வரவேற்பது போல் இருக்கிறது அந்த மண்டபத்தின் மேல் சிவ லிங்கம் வரையப்பட்டு இருக்கிறது. அந்த பக்கமும் இந்த பக்கமும் பூங்கா போன்ற அமைப்பில் பசுமையான செடிகள் மலர்கள் இருந்தது. அதன் அருகிலே கோ சாலையும் நிறைய மாடுகளும் இருந்தது. அதைப் பார்த்துக்கொண்டேன் இரண்டாவது பிரகாரத்திற்குள் நுழைந்தேன் கொடி மரம் அதை ஒட்டினார் போல நிறை கல் தூண்கள் ஒரே நேர்கோட்டில் வைத்திருப்பது மிக அழகாக இருந்தது. கல்லிலே கலை வண்ணம் கண்டான் என்று பாடவும் தோன்றியது 


                அந்தளவிற்கு மிக சிறப்பான வேலைபாடுகளுடன் கூடிய கல் தூண்கள் சிற்பங்கள் கண்ணை கவர்ந்தது. அதன் அருகில் சாமியை தரிசனம் செய்ய டிக்கெட் கவுன்டர் இருந்தது அங்கே சென்று பத்து ரூபாய் டிக்கெட் ஒன்றை வாங்கினேன் இப்படியே போங்கம்மா என்றார். நானும் அப்படியே சென்றேன் உள்ளே சென்றால் சரியான கூட்டம் இலவசம், 10  ரூபாய், 25 ரூபாய் எல்லாம் ஒரே இடத்தில் தனித்தனியாக நின்றிருந்தார்கள். எத்தனை பணம் கொடுத்து வந்தாலும் இறைவனை காணப்போவது ஒரே இடத்தில் தானே.. எனக்கு அருகில் 25 ரூபாய் க்யூவில் வந்தவர் அருகில் இருந்தவரிடம் பேசிக்கொண்டு வந்தார் அது என்ன க்யூ.. இது என்ன க்யூ என விசாரித்துக்கொண்டு இருந்தார். அப்போது அவர் என்னிடம் கேட்டார். இது எவ்வளவும்மா டிக்கெட் என்றார் பத்து ரூபாய் என்றேன் உடனே அவர் பரவாயில்லையே ரொம்ப பிரியா இருக்கே என்றார். மூன்று வரிசையும் ஒரே இடத்தில் தான் சாமியை தரிசனம் செய்ய வேண்டும். 

                 எல்லாம் சொல்லிக்கொண்டு வந்தேன் இது என்ன கோவில் என்று சொல்லவில்லை பாருங்களேன் ஜம்புகேஸ்வரர் ஆலயம் பஞ்சபூத ஸ்தலத்தில் இது நீருக்குரியது அதனாலயோ என்னவோ இங்கே இருக்கும் சிவ லிங்கம் கீழே இருக்கும் அதில் எப்போதுமே ஈரமாகவே இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த கோவிலுக்கு என்று நிறைய வரலாறு இருக்கிறது அதை ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டே வருவேன் ஒவ்வொரு வரியாக படித்துக்கொண்டே வாருங்கள். சரி எங்கே விட்டேன் வரிசையில் நின்று கொண்டு வந்தோம் இல்லையா அந்த இடத்தில் சரியான கூட்டமாக இருந்தது ஒருத்தர் மேல ஒருத்தர் விழுவது போல தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நான் போகும் நேரம் வந்தது அப்போது ஒருவர் நீங்க பேமிலியோடு வந்திங்களா தனியா வந்திங்களா என்றார் இல்லங்க தனியா தான் வந்தேன் அப்படியா நீங்க முன்னே போங்கம்மா என்று அழகாக எனக்கு வழிவிட்டதோடு முன்னே செல்ல வழிகிடைக்கவும் செய்தார் நான் அழகாக எந்தவித இடைஞ்சல்கள் இல்லாமல் கருவறைக்குள் சென்றேன் இங்கே மட்டும்தான் எம்பெருமான் ஈசனை கருவறைக்குள் சென்று காணக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். நான் உள்ளே சென்றதும் ஐயரிடம் அர்ச்சனை என்றேன் அவரும் அர்ச்சனை செய்தார் நான் நின்று நிதானமாக ஈசனை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தேன் மனதிற்கு திருப்தி. அதன்பிறகு அம்பாள் சன்னதிக்கு வந்ததேன் எல்லோரும் ஓட்டமும் நடையுமாக சென்றார்கள் நானும் அவ்வாறே சென்றேன் ஏன்னா அம்பாள் சன்னதி 10.30 ல்கெல்லாம் மூடிவிடுவார்கள் சரியாக 12 மணிக்கு தாயார் அகிலாண்ட ஈஸ்வரி சன்னதியில் அங்கு பூஜை செய்யும் ஐயர் அவரே அம்பாளாக வேடமிட்டு கோ பூஜை செய்வார் இன்றும் அது வழக்கத்தில் அதை காண்பது பெரும் பாக்கியம் என்று சொல்வார்கள். அதற்கும் ஒரு கதை இருக்கிறது அகிலா ரொம்ப கோர முகத்தோடு இருந்ததாகவும் அதை கண்டு பக்தர்கள் பயந்ததாகவும் சொல்லப்படுகிறது இதனால் ஆதி சங்கரர் அகிலாவின் கோவத்தை குறைக்க சக்கரத்தை இரு காதுகளிலும் தோடாக அணிவித்தார் என்றும் அதன்பிறகு அகிலா பெரும் அழகியாக திகழந்தார் என்றார் சொல்லப்படுகிறது. அப்பேற்பட்ட அழகியை காண நானும் வந்தேன் இங்கேயும் பெரும் க்யூ நின்றது பத்து ரூபாய் டிக்கெட் எடுத்து உள்ளே சென்றேன் சாமி கும்பிட்டவங்க வெளியே போங்க..வெளியே போங்கன்னு ஒருவர் பிடித்து தள்ளிக்கொண்டே நின்றார் இப்படி எல்லா கோவிலிலும் உண்டு. நடை சாத்துவதற்குள் நாம சாமி கும்பிட வேண்டும் என எனக்குள் பதைபதைப்பு ஒருவழியாக என் தாயாருக்கு அருகில் சென்றேன் அங்கே இருந்த ஐயரிடம் அம்பாளுக்கு புடவை வாங்கி வந்தேன் சாத்திடுங்கோ என்று நீட்டினேன் அவரும் வாங்கிகொண்டு வந்தார் நான் நின்று நிதானமாக அம்பாளை தரிசனம் செய்தேன் ஐயர் குங்குமம் தந்து தாழம்பூவை பிரசாதமாக தந்தார் நான் மிகுந்த மகிழ்ச்சியோடு அங்கிருந்து நகர்ந்து கோவிலைச்சுற்றி வலம் வந்தேன். அதோடு நடையை சாற்றிவிட்டார்கள் நான் வெளியே வந்து இப்போது என் போனை எடுத்து கேமராவை ஆன் செய்து வளைத்து வளைத்து வீடியோவும்,  போட்டோவும் எடுத்தேன்.நான் பல முறை சென்ற கோவில் மட்டுமல்ல நான் பார்த்து வியந்து கோவிலும் இதுதான் எத்தனை முறை பார்த்தாலும் முதல் முறை பார்ப்பது போலவே இருக்கும் யப்பா... மிகப்பெரிய மதில் சுவர்கள் இந்த மதில் சுவருக்கு ஒரு கதையும் உண்டு.




                எம்பெருமான் சிவ பெருமானே ஒரு சித்தராக வந்து இந்த மதில் சுவரை கட்டியதாகவும் அதற்கு கூலியாக திருநீரை தந்ததாகவும் வரலாறு சொல்லப்படுகிறது. இங்கு தரப்படும் விபூதி நோய்களுக்கு மருந்தாகிறது என்று சொல்லப்படுகிறது. அது மட்டுமல்ல யானைக்கும் சிலந்திக்கும் பாவ விமோசனம் கிடைத்த ஸ்தலமாக இந்த திருவணைக்காவல் திகழ்கிறது. இங்கே நிறைய திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கிறது  பாடல்கட்சிகள் இங்குள்ள மாடத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது இந்த நேரத்தில் இங்கே ஒன்றை பதிவு செய்ய வேண்டும் கோவிலைச் சுற்றியுள்ள மாடங்களில் 108 சிவ லிங்கங்கள், நாக பாம்பு சிற்பங்கள் வைக்கப்பட்டிருந்தது அதை இப்போது அகற்றி இருக்கிறார்கள் ஏனென்று தெரியவில்லை ஒருவேலை திரைப்படங்கள் எடுப்பதற்காக அவை அகற்றுப்பட்டு இருக்குமா என்பது என் சந்தேகம். 

                ஒருவழியா நாம கோவிலைச் சுற்றி வந்தாச்சு அந்த கடுமையான அக்னிநட்சத்திர வெயிலும் நின்று போட்டோ எடுத்தோம் கொஞ்சம் கூட வெயிலின் தாக்கமோ சூடோ எனக்குத் தெரியவில்லை.  அத்தனை குளுமையாக இருந்தது இப்போது வெளியில் கொளுத்துகிறது அதன் கொடுமை என்னவென்று எல்லோருக்குமே தெரிந்திருந்திருக்கும் அப்படியிருந்தும் அங்கு வெயில் தாக்கம் இல்லை என்பது ஆச்சரியம் தானே. இந்த கோவிலுக்கு நான் பல முறை சென்ருக்கிறேன் ஏன் செல்கிறேன் எதற்கு செல்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை. 


                 என்ன மக்களே ... இதைப் படிக்கும் போது உங்களுக்கும் அங்கே செல்ல வேண்டுமென்று தோணுகிறதா? முடிந்தால் உங்களுக்கு நேரம் கிடைத்தால் உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் ஒரு முறை சென்று வாருங்களேன் நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச் சென்ற கலை பொக்கிஷம் அங்கே இருக்கிறது ஆராய்ச்சி படிப்பு படிக்கின்றவர்கள், ஆன்மீக அன்பர்களுக்கு நல்ல தீணி அங்கே காத்திருக்கிறது. சென்று வாருங்க நாம் தெரியாமல் செய்த பாவம், தெரிந்து செய்கின்ற பாவமும் தொலையட்டுமே... யானைக்கும் சிலந்திக்குமே பாவ விமோசனம் கிடைக்கும் போது உங்களுக்கு கிடைக்காத என்ன...?

 இந்த கட்டுரை இதோடு முடிந்தது உங்களுக்கும் இது பிடித்திருந்தால் ஏதாவது சொல்லிட்டு போங்க...

No comments:

Post a Comment