அம்மா... அம்மா... ஒரு நாளைக்கு தியேட்டருக்கு போயிட்டு சினிமா பார்த்திட்டு நல்ல ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு வருவோமா..." பொன்னி ஆசையாக தன் அம்மாவிடம் கேட்டாள்.
" ஆமா... நீ வேணா போய் சாப்பிடு எனக்கு வேணாம்" அம்மா மல்லிகா முகத்தை சுழித்தபடி சொன்னாள்.
"உனக்கு ஞாபகம் இருக்காம்மா இருபது வருசத்துக்கு முன்னாடி முருகைய்யா தியேட்டர்ல படம் பார்த்துட்டு வருவோம் அதுக்கு எதிரே ஒரு சின்ன ஹோட்டல் ஒன்னு இருக்கும் அதுல எல்லாரும் சாப்பிட்டுட்டு இருப்பாங்க சோறு, மீனு, கறி, முட்டையின்னு வெளுத்துக்கட்டுவாங்க. நான் ஆசையா பார்த்துகிட்டு உன்கிட்ட கேட்பேன் நீ.. அதுக்கெல்லாம் காசு இல்ல ஒரு சாப்பாடு பதினைஞ்சு ரூபான்னு சொல்லிட்டு கூட்டிட்டு வந்திருவே... ஒரு நாள் கூட வாங்கி தந்தது இல்ல. தியேட்டருக்கு போனா பாப்கார்ன் கேட்டு அழுவேன் வயிறு வெந்து போயிரும்னு அதையும் வாங்கி தரவே மாட்டே.. இப்ப என்னகிட்ட அதை வாங்குற அளவுக்கு காசு இருக்கு ஆனால் இப்பவும் நீயும் வர மாட்டேங்கிற என்னையும் வாங்கி சாப்பிட விட மாட்டேங்கிறே.. ஏம்மா என்றாள் தழுதழுத்த குரலில்..
மல்லிகாம்மாவால் ஒன்றுமே பதில் சொல்ல முடியல இதுதான் அவர்கள் இயல்பு..