நான்...
மழையில் நனைந்து செல்கிறேன்
என் மேல் விழுந்த மழைந்துளிகள்
உன் நினைவுகள் போல் மெல்ல
உருண்டு ஓடுகிறது..!
அடடடா...
அது என்ன மின்னலா உன்
பார்வைப் போன்று பளிச்சென்று
மின்னுகிறது ஈர்க்கும் மின்சாரம்
போல் பாய்ந்து செல்கிறது..!
அர்ச்சுனா.. அர்ச்சுனா... அது என்ன
சத்தம் இடியா.. உன் கோவம் போல்
கிடுகிடு... படபடவென்று பொரிந்து
தள்ளிப் போகிறது..!
வாவ்... அது என்ன உன்னைப்போல்
ஏதோ ஒன்று என்னைத் தீண்டி
செல்கிறதே ஒ... காற்றா? உன்
கார் கூந்தல் போல் அழகாக அசைந்தாடி
என்னைக் கடந்து போகிறது..!
அட மழை நின்று விட்டதா..?
உன் பேச்சைப் போல்...
உன் கோபம் போல்....
உன் சிரிப்பைப் போல்...
எந்த சத்தமும் இல்லை
உன் மவுனம் போல் அமைதியாக
கறுத்துக் கிடக்கிறது வானம்...!
மழையில் நனைந்து செல்கிறேன்
என் மேல் விழுந்த மழைந்துளிகள்
உன் நினைவுகள் போல் மெல்ல
உருண்டு ஓடுகிறது..!
அடடடா...
அது என்ன மின்னலா உன்
பார்வைப் போன்று பளிச்சென்று
மின்னுகிறது ஈர்க்கும் மின்சாரம்
போல் பாய்ந்து செல்கிறது..!
அர்ச்சுனா.. அர்ச்சுனா... அது என்ன
சத்தம் இடியா.. உன் கோவம் போல்
கிடுகிடு... படபடவென்று பொரிந்து
தள்ளிப் போகிறது..!
வாவ்... அது என்ன உன்னைப்போல்
ஏதோ ஒன்று என்னைத் தீண்டி
செல்கிறதே ஒ... காற்றா? உன்
கார் கூந்தல் போல் அழகாக அசைந்தாடி
என்னைக் கடந்து போகிறது..!
அட மழை நின்று விட்டதா..?
உன் பேச்சைப் போல்...
உன் கோபம் போல்....
உன் சிரிப்பைப் போல்...
எந்த சத்தமும் இல்லை
உன் மவுனம் போல் அமைதியாக
கறுத்துக் கிடக்கிறது வானம்...!
No comments:
Post a Comment