திருவொற்றியூர் பாகம்பிரியாள் கோவிலுக்கு ஒரு முறை என்னோட ப்ரண்ட் அவங்க அம்மா நான் மூனு பேரும் பாகம்பிரியால் கோவிலுக்கு போனோம்.இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள கோவில் அது. என்னோட ப்ரண்ட் அவங்க அம்மா ரெண்டு பேரும் அந்த கோவிலுக்கு போகனும்னு ஒரு வருசமா உண்டியலில் காசு சேர்த்து அந்த காசுல பஸ் செலவு ஆரம்பிச்சு அந்த கோவிலுக்கு போற வரைக்கும் ஆகுற செலவு அந்த காசுல தான் செலவு பண்ணின்னாங்க. எனக்கும் அந்த காசுல தான் செலவு செய்து கூட்டிட்டு போனாங்க அங்க போன பிறகுதான் தெரியும் அந்த அம்மன் சிவனோடு இருக்கிற ஒரு கோவில் என்று அதற்கு முன் தெரியாது அதுவரை அம்மன் கோவில் என்றே நினைத்திருந்தேன். பாகம்பிரியாள் என்ற பெயர் தான் விளங்கியிருக்கிறது. அந்த கோவில் அருகே இருக்கும் புற்றில் சேவல் பலி கொடுத்து பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள்.