Tuesday, 27 May 2025

திருக்கடையுர் போகலாம் வாங்க

திருக்கடையூர் போகவேண்டும் என்று சட்டென்று தோண அம்மாவும் நானும் அதிகாலையிலயே மயிலாடுதுறை பயணித்தோம்.. பட்டுக்கோட்டையில் இருந்து மன்னார்குடி அங்கிருந்து கும்பகோணம் அங்கிருந்து மயிலாடுதுறை அங்கிருந்து திருக்கடையூர் சென்றடைந்தோம். சரியாக பட்டுக்கோட்டையில் இருந்து 6 மணிக்கு கிளம்பினோம்  பஸ் தான் மன்னார்குடிக்கு டிக்கெட் 20 ரூபாய் இருவருக்கும் 40 மன்னார்குடியில் 7 to 8  கும்பகோணம் 2 டிக்கெட்  50 ரூபாய் 9 மணிக்கு மயிலாடுறை சென்றுவிட்டோம். மயிலாடுறையில் 9 மணி to திருக்கடையூர் 10 மணி. 2 டிக்கெட் 60 ரூபாய். மயிலாடுதுறையில் இருந்து திருக்கடையூர் செல்ல பணம் இல்லை மகளீர்  இலவச பேருந்து அங்கிருந்து திருக்கடையூர் ஒரு மணி நேரம் ஆச்சு ஆக சரியாக 11 மணிக்கு கோவிலுக்கு வந்துவிட்டோம். விடுமுறை நாள் என்பதால் கூட்டம் அதிகமா இருந்தது  நாங்கள் கோவிலுக்கு நுழையும் வேளையில் மேளத்தாளத்தோட நாதஸ்வரம் பழத்தட்டோடு வந்துகொண்டிருந்தார்கள் அது எங்களை வரவேற்பது போல் இருந்தது..