Saturday, 23 September 2017

நீயும் நானும்

ஏனடி நீ என் மனதில்
இத்தனை ஆசைகளை
விதைத்து செல்கிறாய்..?
வறண்ட பூமியில்
தண்ணீருக்காக போராடும்
விவசாயி போல் - உன்
வருகைக்காக வழிமேல் விழிவைத்து
ஆசையோடு காத்திருக்கிறேன் நான்...!

Sunday, 17 September 2017

கண்ணில் பதிந்த காட்சிகள்

வெள்ளிக்கிழமை வந்தாலே பேருந்து நிலையங்கள் எப்போதும் நிரம்பி வழியும். அது போல் ஒரு நாள் நான் ஊருக்கு சென்றுக் கொண்டிருந்தேன்... நிரமாத கர்ப்பிணி கூட வேகமாக நடந்தய விடுவாள் ஆனால் இந்த பேருந்துக்கள் நகர முடியாமல் நகர்ந்து சென்று கொண்டிருந்தது அந்த நெடுஞ்சாலையில்.  அப்போது ஒரு தாய் இரண்டு பெண் பிள்ளைகளோடு ஏறினாள்...